Movie Reviews

  • Home/
  • Reviews/
  • கோலமாவு கோகிலா படம் விமர்சனம்

கோலமாவு கோகிலா படம் விமர்சனம்

நயன்தாரா : ஒரு மாஸ் ஹீரோவிற்கு எத்தனை மாஸ் வருமோ, அந்த அளவிற்கு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கும் ஒரு மாஸ் பேன் பாலோயிங் உள்ளது. அறம் படத்திற்குப் பிறகு நாயகன் இல்லாமல் நயன்தாராவை மட்டும் மையப்புள்ளியாக வைத்து உருவாகியிருக்கும் படம்.

படம் ஓபனிங் நயன்தாரா என்ட்ரி எந்த விதமான மாஸ் இல்லாமல் சாதாரணமாக வருகிறார்.

குடும்பம் : நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நயன்தாரா தனது அப்பா, அம்மா சரண்யா மற்றும் தங்கை ஜாக்குலினுடன் வாழ்ந்து வருகிறார். அவரது வீட்டிற்கு எதிரில் மளிகை கடை வைத்திருக்கும் யோகி பாபு, பாவமான முக பாவனுடைய நயன்தாராவை ஒருதலையாக காதலித்து வருகிறார்.

குடும்ப பொறுப்பு காரணமாக சம்பளம் பத்தாமல் தவிக்கும் நயன்தாரா, முதலாளியின் தொல்லை காரணமாக வேறு வேலைக்கு செல்கிறார். இந்த நிலையில், உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு செல்லும் அம்மாவுக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது தெரியவருகிறது. அதை சரிசெய்ய முடியும் என்றும், அதற்கும் பல லட்சங்கள் தேவைப்படும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதையடுத்து அவர்களுக்கு சொந்தமான இடத்தின் பத்திரத்தை வைத்து பணத்தை ரெடி பண்ண நயன்தாரா முயற்சி செய்கிறார். இந்த நிலையில், போதைப்பொருள் கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார்.

போலீசாரின் கெடுபிடியால் போதை பொருளை கடத்த முடியாமல் தவிக்கும் அந்த கும்பல் ஜாக்குலினை பிடித்து வைத்துக் கொண்டு, நயன்தாராவிடம் போதைப் பொருளை கொடுத்து ஒரு இடத்தில் கொண்டு கொடுக்க சொல்கிறது. ஜாக்குலினை காப்பாற்றுவதற்காக போதைப் பொருளை சரியான இடத்தில் கொண்டு சென்று சேர்க்கிறார்.

இதையடுத்து தனது அம்மாவை காப்பற்ற பணம் தேவைப்படுவதால், போதைப் பொருளை கடத்த முடிவு செய்யும் நயன்தாரா அந்த கும்பலின் தலைவரிடம் பணம் வாங்குகிறார்.

சிக்கல் : கடைசியில், இந்த போதைப் பொருள் கடத்தல் நயன்தாராவுக்கு எந்த மாதிரியான சிக்கல்களை ஏற்படுத்துகிறது? அந்த கும்பலை எப்படி சமாளிக்கிறார்? தனது அம்மாவை காப்பாற்றினாரா? யோகி பாபுவின் காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

தோற்றம் : தனது ஒவ்வொரு படத்தையும் தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா, இந்த படத்திலும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒரு அமைதியான, அம்மாஞ்சியான தோற்றத்துடன் வந்து கில்லாடி வேலைகளை செய்யும் கதாபாத்திரத்தில் நயன்தாராவின் நடிப்பு ரசிக்கும்படியாக இருக்கிறது. குறிப்பாக யோகி பாபுவுடன் அவரது கதாபாத்திரம் வரும் காட்சிகள் ரசிர்களுக்கு துள்ளலை ஏற்படுத்துகிறது

அழகு : நயன்தாராவின் அமைதியையும், அழகையும் பார்த்து காதலில் விழுந்த யோகி பாபு, நயன்தாராவின் மறுபக்கத்தை அறிந்து அதில் சிக்கிக் கொண்டதாக வரும் காட்சிகளில் பட்டையை கிளப்பியிருக்கிறார். கல்யாண வயசு பாடலை பார்க்கவும் ரசிக்கும்படியாக இருக்கிறது. திரையரங்கில் அந்த பாடலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இயக்கம் : தனது முதல் படத்திலேயே  காமெடியில் ரசிகர்களை திருப்திபடுத்தியிருக்கிறார் நெல்சன் திலீப்குமார். அவருக்கு பாராட்டுக்கள்.

கதையின் பலவீனமாக இருப்பது : தன் அம்மாவின் உயிரை காப்பாற்ற பிறரது உயிரை குடிக்கும் போதை மருந்தை கதாநாயகி விற்க துணிவதும் , அதற்கு தடையாக வருபவர்களை தீர்த்து கட்டுவதும் லாஜிக்காக இடிப்பது சற்றே பலவீனம்.

மொத்தத்தில் `கோலமாவு கோகிலா'  100% காமெடி கொண்டாட்டம்.

Rating :

0 1 2 3 3.5/5
share