கூட்டத்தில் ஒருத்தன் படம் விமர்சனம்



பெரிய அளவில் எந்த அளவிற்கும் ஹிட் கொடுக்காத அசோக் செல்வன், ஏதாவது ஒன்றை புதிதாக செய்தால் மட்டுமே கோலிவுட்டில் கால் ஊன்றி நிற்க முடியும் என்ற நிலையில் ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தை தேர்வு செய்து நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். 

யாருக்குமே அடையாளம் தெரியாமல் கூட்டத்தில் ஒருவனாக இருப்பவனால் எந்த ஒரு சாதனையையும் படைக்க முடியாது என நினைப்பவர்களுக்காக இந்த படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர். 

வீட்டில் நடுப்பையனாக வளரும் அசோக் செல்வன், படிப்பு, விளையாட்டு, வேலை என அனைத்திலும் அவரேஜ் மாணவன். தனக்குள்ளே ஒரு தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்கிறார். பள்ளி பருவம் முடிந்ததும் ஒரு மாலைப் பொழுதில் பிரியா ஆனந்த் அவரை பாராட்ட அன்றுமுதல் உற்சாகமாவதோடு ப்ரியா மீது காதலாகிறார் அசோக்.. 

ப்ரியா ஆனந்த்  சேரும் கல்லூரியில் அசோக் செல்வனும் சேர்கிறார். கல்லூரியில் பாலசரவணின் நட்பு கிடைக்கிறது. பின், ப்ரியா ஆனந்திடம் தனது காதலை கூறுகிறார் அசோக் செல்வன். எந்த ஒரு அடையாளமும் இல்லாத உன்னை நான் எப்படி காதலிப்பேன் என அசோக்கின் காதலை நிராகரிக்கிறார் ப்ரியா. 

அதன்பின் நடக்கும் ஒரு சூழல் அவரை பிரபலமாக்குகிறது. அந்த சூழல் தானாக நடந்ததா இல்லை யாரேனும் நடத்தினார்களா..??? அது அசோக்கை வாழ வைத்ததா ...??? அல்லது வீழ  வைத்ததா...?? என்பதே படத்தின் கதை...

அசோக் செல்வனின் நடிப்பு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கனமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.  தாழ்வு மனப்பான்மை கதாபாத்திரத்தை உள்வாங்கி சிறப்பாக நடித்துள்ளார். 

எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் கதாபாத்திரத்தில் ப்ரியா ஆனந்த்.. அளவான நடிப்பை கொடுத்துள்ளார். அசோக் செல்வனின் நண்பனாக வரும் பாலசரவணின் காமெடி காட்சிகள் கைதட்டல் வாங்குகின்றன. 

தாதா கேரக்டரில் வரும் சமுத்திரகனி தனது கதாபாத்திரத்தை தெளிவாக செய்துள்ளார். கதைக்கும் இவருக்கும் உண்டான ஒரு புரிதல் சற்று விலகியே இருப்பது சறுக்கல். 

அப்பாவாக மாரிமுத்து, போலீஸ் அதிகாரியாக ஜான் விஜய், பேராசிரியாக பகவதி பெருமாள், கல்லூரி முதல்வராக நாசர் என துணை கேரக்டர்கள் எதுவும் சோடை போகவில்லை..
 
நிவாஸ் பிரசன்னாவின் இசையில் ‘ஏண்டா இப்படி, ‘இன்னும் என்ன சொல்ல’ ஆகிய பாடல்கள் ரகம்... பின்னனி இசை கதையோடு பயணிக்கிறது. பி கே வர்மாவின் ஒளிப்பதிவும் அழகு.

 சமூகத்திற்கு தேவையான ’பசி’ என்ற ஒன்றையும் கதையோடு சேர்த்திருப்பதால் கூட்டத்தில் ஒருத்தன் தனி ஒருவனாக பிரகாசமாகிறான்.

கூட்டத்தில் ஒருத்தன்  - பெற்றவர்கள் முதல் மாணவர்கள், இளைஞர்கள் என அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.... 

Rating :

0 1 2 3/5
share