குற்றம் 23 படம் விமர்சனம்


என்னை அறிந்தால் படத்தில் விக்டர் என தனது கதாபாத்திரத்தை முத்திரை பதித்து தமிழ் சினிமாவிலும் ஒரு வலுவான முத்திரையை பதித்தவர் அருண்விஜய். இவரது நடிப்பிலும் ஈரம், வல்லினம் படத்தினை இயக்கிய அறிவழகன் இயக்கத்திலும் உருவாகியுள்ள படம் தான் ‘குற்றம் 23’. மிகவும் எதிர்பார்ப்போடு வெளிவந்த இப்படம்  எந்த வகையான விமர்சனத்தை சந்தித்துள்ளது என்று பார்த்து விடலாம்.

ஒரு சர்ச்சில் பாவ மன்னிப்பு கோர  பெண் ஒருவள் அங்கு வருகிறாள். அந்த பெண் அங்குள்ள பாதரிடம் தான் தவறு செய்து விட்டதாகவும், அந்த தவறு என்னவென்று அந்த பாதரிடம் கூற, அந்த சமயத்தில் யாரோ மர்ம நபர்கள் சர்ச்சிற்குள் நுழைய பாதரை கொன்று விட்டு, அந்த பெண்ணையும் கடத்திச் சென்று விடுகிறார்கள். 

யார் அவர்கள் என்பதை கண்டறியும் போலீஸ் அதிகாரியாக (AC) வருகிறார் அருண் விஜய். மாயமான அந்த பெண் சில நாட்களுக்கு பிறகு பிணமாக கிடைக்கிறார். தனது போலீஸ் புத்திசாலிதனத்தை வைத்து அந்த கடத்தலையும், கொலையையும் செய்தவர்களை நெருங்கும் சமயத்தில், அருண் விஜய்யின் அண்ணியாக வரும் அபிநயா வீட்டில் தற்கொலை செய்து கொள்கிறார். அது தற்கொலை இல்லை மரணம் என்று கண்டு பிடிக்கிறார் அருண்விஜய். அண்ணியின் மரணத்திற்கும் சர்ச்சில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணிற்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதை உணர்ந்து தனது ஆட்டத்தை ஆரம்பிக்கிறார். இந்த கொலைக்கும் மருத்துவத்தில் நடக்கும் சில சட்ட விரோத குற்றங்களுக்கும் உள்ள தொடர்பை கண்டறிகிறார்.

யார் அவர்கள், எதற்காக அவர்களை கொலை செய்தார்கள், அவர்களின் நோக்கம் தான் என்ன..?? என்பதை மிகவும் படபடப்போடும், மிகவும் த்ரில்லிங்கோடும் எடுக்கப்பட்ட படம் தான் இந்த ‘குற்றம் 23’. 

அருண்விஜய் தனது அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் மனதிலும் மீண்டும் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தோடு மனதில் ஏறி அமர்கிறார். காதல் காட்சிகள், செண்டிமெண்ட் , ஆக்‌ஷன் என ஒவ்வொரு பிரேமிலும் மிரட்டி எடுக்கிறார். இந்த கதைக்கு ஏற்ற ஒரு கதாநாயகனாகவும் இருக்கிறார். இனி அருண் விஜய் என்றால் ரசிகர்களின் மத்தியில் விக்டருக்கு பதிலாக வெற்றிமாறன் கதாபாத்திரம் தான் ஞாபகம் வரும். ஒவ்வொரு காட்சியிலும் இவரது அயராத உழைப்பு கண்முன்னே வந்து செல்கிறது.

பாடலுக்கும், காதல் காட்சிகளுக்கும் மட்டும் வந்து செல்லும் நாயகியாக மட்டுமல்லாமல் கதையின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தையும் சுமந்து செல்கிறார் நாயகி மகிமா. தம்பி ராமையாவின் ஒரு சில காமெடி காட்சிகள் ரசிக்க வைத்தன. 

விஷால் சந்திரசேகரின் இசையில் ஒரு பாடலை தவிர மற்ற பாடல்கள் மனதில் நிற்கவில்லை. பின்னனி இசை படத்திற்கு பலம் தான். வில்லனாக ஸ்டண்ட் சில்வாவும் அதிரடி காட்டியுள்ளார். ஆங்காங்கே மீறும் சில லாஜிக் மீறல்கள் கதைக்கு கொஞ்சம் சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

பாஸ்கரனின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். 

குற்றம் 23 - நிச்சயம் பார்க்க கூடிய அறிவியல் க்ரைம் த்ரில்லர்...
 

Rating :

0 1 2 3/5
share