Movie Reviews

  • Home/
  • Reviews/
  • LKG படம் விமர்சனம்

LKG படம் விமர்சனம்

              "RJ. பாலாஜியின்" நடிப்பில் நீண்டநாட்களாக அனைவரும் எதிர்பார்த்து ஆவலோடு காத்திருந்த படம் "LKG". இந்த படத்தின் காலை 5 மணி காட்சி  ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அரசியல் நையாண்டியை களமாக வைத்து இயக்கப்பட்ட படம் ஒரு சாதாரண வார்டு கவுன்சிலர் எப்படி மாநிலத்தின் முதல்வர் ஆகிறார் என்பதே. பாலாஜியின் துள்ளலான நடிப்பிலும் துறுதுறுப்பான வசனங்களிலும் படத்தை தன் தோள்களில் சுமக்கிறார். கமர்சியல் படங்களில் திணிக்கப்படும் விஷயங்கள் இந்த படத்திலும் இடம் பெற்றிருப்பதில் ஆச்சர்யம் இல்லை . 
           
             சமூக வலைத்தளங்களின் மாற்றம் எப்படியெல்லாம் நிகழ்கிறது என்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் எப்படியெல்லாம் ஒரு மனிதனின் போக்கை மாற்ற முடியும் என்பதையும் "RJ. பாலாஜி", "பிரியா ஆனந்த்"-ன் வசனங்கள் தெளிவாக நமக்கு புரியவைக்கும்.

            " பிரியா ஆனந்த்"படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றே கூறலாம்; தனக்கு குடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். படத்தில் தேர்தல் களத்தில் டேட்டா அனலிஸ்ட் ஆக நடித்துள்ளார். நேர்மையான வலிமையான பெண்ணாக தன்னை சிறப்பாக பிரதிபலித்துள்ளார். "லால்குடி கருப்பையா காந்தி" அப்படி ஒரு மனிதனின் பெயரில் தன்னையே காட்டியுள்ளார் "பாலாஜி". படத்தின் கதாப்பாத்திரங்களும் எளிய மனிதர்களை பார்ப்பதுபோலவே உள்ளது "JK.ரித்தீஷ்" அரசியல்வாதியாக நடித்துள்ளார். கிளைமாக்ஸ் கட்சிக்கு முன்பு வரும் மருத்துவமனை கட்சியில் "நாஞ்சில் சம்பத்" தான்னால் எவ்வளவு சிறப்பான நடிப்பைவெளிப்படுத்த முடியும் என்பதை காண்பித்துள்ளார். "மயில்சாமி" மற்றும் அணைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர்.

              "LKG"  படத்தை பொறுத்தவரை அரசியல் நையாண்டியாக வெளிவந்துள்ளது ஆனால் படத்தில் ஆழமான கருத்துகளும் சிந்திக்கத்தூண்டும் விஷயங்களும் உள்ளன. படத்தின் நீளம் கொஞ்சம் அதிகம் போல தோன்றினாலும் படத்திற்கு இது தேவை என்றே கூறலாம். இந்த படம் அணைத்து விதமான ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று எதிர்பார்க்கலாம். தேர்தல் வரப்போகும் நேரத்தில் இப்படியான திரைப்படம் சமூகத்துக்கு தேவயானதுதான்.

Rating :

0 1 2 3/5
share