Movie Reviews

  • Home/
  • Reviews/
  • எம்.எஸ்.தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி படம் விமர்சனம்

எம்.எஸ்.தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி படம் விமர்சனம்


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம் தான் ‘எம்.எஸ்.தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி’. கதையின் நாயகனாக சுஷாந்த் நடிக்க இன்று உலகம் முழுவதும் பல எதிர்பார்ப்புகளுடன் அநேக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது இப்படம்.

ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து தனது பள்ளி படிப்பை துவங்குகிறார் கதையின் நாயகன் தோனி. உடன் பிறப்பாக வருகிறார் பூமிகா. பள்ளியில் படிக்கும் போது கால்பந்து விளையாட்டின் மேல் அதிகம் கவனம் செலுத்தி விளையாடுகிறார். அதன் பின் அந்த பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியர் கேட்டுக் கொண்டதின் பேரில் அந்த பள்ளிக்காக கிரிக்கெட் போட்டியில் விக்கெட் கீப்பராக களம் இறங்குகிறார்.

ஆனால், மகேந்திர சிங் தோனியின் தந்தைக்கோ  தனது மகன் நன்றாக படித்து ஒரு அரசு வேலை பார்க்க வேண்டும் என்பது தான். நேரத்திற்கு படித்துக் கொண்டும் மீதி நேரத்தில் கிரிக்கெட் பயிற்சியிலும் இறங்குகிறார். கிரிக்கெட்டில் பேட்டிங் மட்டுமே தோனி விரும்புகிறார். தனது திறமையை நிரூபிக்க சரியான தருணம் வர, அதை நிரூபிக்கவும் தோனி தவறவில்லை.

இவரது ஆட்டத்தை பார்த்த ரெயில்வே நிர்வாகம் இவருக்கு ரெயில்வேயில் டிக்கெட் கலேக்டர்  (Ticket Collector) பணியை தருகிறது. தனது குடும்பத்தின் சூழ்நிலையை கருத்தில் கொண்டும் தனது தந்தையின் ஆசையை நிறைவேற்றவும் அந்த பணியை ஏற்றுக்கொள்கிறார். ஒரு கட்டத்தில் இந்த பணியால் தோனியின் கிரிக்கெட் பயணம் தடைபட்டு நிற்க அந்த சமயத்தில் தோனி எடுக்கும் முடிவு தனது வாழ்க்கையின் திசையையே மாற்றி விடுகிறது.

அந்த முடிவு தோனியின் வாழ்க்கையில் எப்படிபட்டதாக அமைந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தின் நாயகனாக சுஷாந்த் நடித்துள்ளார். முக அமைப்பு, உடல் அமைப்பு என அனைத்தும் தோனிக்கு உரித்தான பாணியில் நடித்து அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளார். தோனி கிரிக்கெட் உலகிற்குள் எப்படி காலடி எடுத்து வைக்கிறார். எப்படி உலக கோப்பையை கைப்பற்றுகிறார் என்பதை மிகவும் அருமையாக கூறியிருக்கிறார் இயக்குனர் நீராஜ் பாண்டே. 

வாழ்க்கை என்பதும் கிரிக்கெட் போல தான், சில பந்துகளை தடுத்து ஆட வேண்டும், சில பந்துகளின் பவுன்சர்களை அப்படியே விட்டுச் செல்ல வேண்டும் அது போல தான் வாழ்க்கையிலும் சில கஷ்டங்களை நாம் கடந்து சென்று தான் ஆக வேண்டும் என்பது போன்ற வசனங்கள் படத்திற்கு வலுவாக இருக்கின்றன.

படத்தின் இசை, ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக தான் இருக்கிறது. காட்சி அமைப்புகள் ஒவ்வொன்றும் ரசிக்கும் படியாக கொடுத்திருப்பது நன்று. CJ வேலைகளைளிலும் மிகவும் அதிகமாக கவனம் செலுத்தியிருக்கிறார்கள். 

காமெடி காட்சிகள்,  காதல், செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த கலவையை ரசிக்கும் படியாக உருவாகியுள்ளது இந்த தோனி. சில சமயத்தில் அனைவரையும் மீறி தோனி எடுத்த முடிவுகளும் அனைவருக்கும் சாதகமாக தான் இருந்திருக்கிறது. தோனியை விரும்பும், காதலிக்கும் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடும்படியான ஒரு கதையாக உருவாகி இருக்கிறது ‘எம்.எஸ்.தோனி’.

முதல் பாதியில் கதை வேகமாக நகர்கிறது. இரண்டாம் பாதி ஆரம்பத்தில் கதையில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டாலும், அதன் பின் நகரும் கதை அனைவரும் ரசிக்கும் படியாக இருக்கிறது..

2011 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தை பார்த்த ஒரு படபடப்பு படம் பார்க்கு போதும் நிச்சயம் எழும். (கிரிக்கெட்டை விரும்பும் காதலர்களுக்கு)

தோனி வாழ்க்கையில் சந்தித்த பல இன்னல்கள், கஷ்டங்கள் அனைத்தையும் கண்முன்னே நிறுத்தியிருக்கிறார்கள். அமைதியாக வாழும் தோனி பற்றி தான் நாம் அனைவருக்கும் தெரியும். இந்த படத்திற்கு பிறகு தான் தெரிகிறது தோனி அமைதியாக இருந்ததால் தான் இந்த ஒரு வெற்றியை அவர் அடைந்திருக்கிறார் என்று. 

பலரும் அறியாத தோனியின் வாழ்க்கையை அனைவரின் கண்முன்னே நிறுத்தியது - நன்று...

எம்.எஸ்.தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி - தோனியை கொண்டாடுவதற்கான காரணம் இருக்கிறது.... கொண்டாடலாம்....

Rating :

0 1 2 3 3.5/5
share