Movie Reviews

  • Home/
  • Reviews/
  • மாயவன் படம் விமர்சனம்

மாயவன் படம் விமர்சனம்



தயாரிப்பாளராக இருந்து இயக்குனராக அறிமுகமாகியுள்ள சி வி குமார் இயக்கியுள்ள படம் தான் ‘மாயவன்’.

இன்ஸ்பெக்டராக வருகிறார் சந்தீப் கிஷன். படத்தின் ஆரம்பத்தில் பிக் பாக்கெட் திருடனை பிடிக்க வரும் சந்தீப், ஒரு பெண்ணை சாய் தீனா கொடூரமாக கொலை செய்வதை பார்த்து விடுகிறார். சாய் தீனாவை துரத்தி பிடிக்கும் வேலையில்  தலையில் பலமாக காயமடைந்துவிடுகிறது சந்தீப்பிற்கு.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் பணியில் சேர்கிறார். மீண்டும் தான் பார்த்த கொலை போன்றே மற்றொரு கொலை அரங்கேறுகிறது. 

இந்நிலையில் மூன்றாவது கொலை நடப்பதற்கு முன்பே அதை தடுக்க நினைக்கும் சந்தீப், முதல் இரு கொலைகளை செய்தவர்களின் செய்கையும், மனநல நிபுணரான டேனியல் பாலாஜியின் செய்கையும் ஒரே மாதிரி இருப்பதை கண்டுபிடிக்கிறார். பின்னர் டேனியல் பாலாஜியை பின்னிருந்து யாரோ இயக்குவதையும் தனது குழு மூலம் கண்டுபிடிக்கிறார் சந்தீப்.

கடைசியில், சந்தீப் மாயமாக இருந்து செயல்படுபவரை கண்டுபிடித்தாரா? தொடர் கொலைகளுக்கு காரணமான மாயவன் யார்? ஏன் இந்த கொலைகளை செய்கிறான்? என்பதே மீதிக்கதை.

நாயகனாக வரும் சந்தீப் ஒரு போலீஸ் அதிகாரியாக வாழ முயற்சி செய்திருக்கிறார். முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். மிகவும் கச்சிதமாக போலீஸ் கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருக்கிறார் சந்தீப். 

மாயவன் யார் என்பதே தெரியாமல் குழம்பும் காட்சிகள், லாவண்யாவுடன் சண்டை பிடிக்கும் காட்சிகள், ஆக்‌ஷன் காட்சிகள் என அவரது நடிப்பு ரசிக்கும்படியாக இருக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் லாவண்யா, கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். சந்தீப் – லாவண்யா வரும் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. இராணுவ அதிகாரியாக வரும் ஜாக்கி ஷெராப் கதாபாத்திரம் திரைக்கதைக்கு வலு சேர்த்திருக்கிறது.

தனக்கென தனி முத்திரை படைத்து வரும், டேனியல் பாலாஜி, இந்த படத்திலும் அனுபவ நடிப்பால் மிரட்டியிருக்கிறார். இவரது கதாபாத்திரம் படத்திற்கு கூடுதல் பலத்தை அளிக்கிறது.

இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள சி.வி.குமார் முதல் படம் போல் இல்லாமல் அனுபவ இயக்குனர் போல் படம் இயக்கி இருக்கிறார். கொலை பற்றிய விசாரணையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தின் கதை எளிதில் சொல்லும் படி இருந்தாலும், அதற்கான திரைக்கதை எளிதில் புரியும்படியாக இல்லாமல் இருப்பதாக தோன்றுகிறது. மாயவன் யார் என்பதில் த்ரில், டுவிஸ்ட் வைத்து காட்டியிருப்பது சிறப்பு.

ஜிப்ரான் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் பல காட்சிகள் சிறப்பு.

மாயவன் - த்ரில் ....

Rating :

0 1 2 2.7/5
share