மகளிர் மட்டும் படம் விமர்சனம்



குற்றம் கடிதல் படத்திற்கு பிறகு பிரம்மா இயக்கியிருக்கும் படம் தான் ‘மகளிர் மட்டும்’. இப்படத்தில் ஜோதிகா, ஊர்வசி, பானுப்பிரியா, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். 

இன்னும் சில நாட்களில் திருமணமாகப்போகும் ஆவணப்பட இயக்குனர் தான் ஜோதிகா. தன்னுடைய வருங்கால மாமியார் ஊர்வசியுடன் தங்கி வருகிறார். 

ஊர்வசி தன் கடந்த கால தோழிகளை பற்றி ஜோதிகாவிடம் கூறி நினைவு கொள்கிறார். சமூக வலை தளம் மூலமாக ஜோதிகாவின் உதவியுன் தனது பள்ளி தோழிகளான பானுப்ரியா மற்றும் சரண்யாவை கண்டு பிடிக்கிறார் ஊர்வசி. 

இவர்கள் மூவரும் வீட்டுச் சிறையில் இருந்து வெளியே எடுத்து ஜாலி டூர்க்கு அழைத்துச் செல்கிறார் ஜோதிகா. 

பெண்களுக்கான ஒரு அழகான வாழ்க்கை உள்ளது என்பதை மிகவும் எமோஷனலாக அருமையான ஒரு படைப்பை கொடுத்திருக்கிறார் பிரம்மா. சமூக கருத்துக்களையும், பெண்கள் மீது பாசம், அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதையும் மிக அழுத்தமாக கூறியிருக்கிறார் இயக்குனர். 

36 வயதினிலே படத்திற்கு பிறகு ஜோதிகா இப்படத்தில் நடித்துள்ளார். துறுதுறுவென நடித்து அனைவரையும் வெகுவாக கவர்கிறார். 

இப்படத்தில் ஜோதிகாவை முன்னிருத்தினாலும் படத்தை தாங்கி செல்வது என்று பார்த்தால் ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா மட்டுமே. ஊர்வசியின் நடிப்பு அப்லாஷ்.

படத்தின் கதையை படமாக்கிய விதமும் கைதட்ட வைக்கிறது. தன்னுடைய தாயை மதிக்காத பானுப்ரியாவின் மூத்த மகனாக வரும் பாவல் நடிப்பின் உச்சம் காட்டுகிறார். 

ஜிப்ரானின் இசையில் பின்னனி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. பிரேமின் ஒளிப்பதிவு படத்திற்கான உயிரோட்டம்.

மகளிர் மட்டும் - பெண்கள் ஆண்மகன்களுடன் பார்க்க வேண்டிய ஒரு படைப்பு.

Rating :

0 1 2 2.7/5
share