Movie Reviews

  • Home/
  • Reviews/
  • மணல் கயிறு - 2 படம் விமர்சனம்

மணல் கயிறு - 2 படம் விமர்சனம்



சுமார் 34 வருடங்களுக்கு முன் விசு இயக்கத்தில் எஸ்.வி.சேகர் நடிப்பில் வெளியானது ‘மணல் கயிறு’. அன்றைய தினத்தில் சக்கை போடு போட்ட படம் இதுவாகும். 

எஸ். வி. சேகர், தனக்கு மனைவியாக வரும் பெண் நான் இடும் எட்டு கண்டிஷனுக்கு உள்ளானவளாக இருக்க வேண்டும் என திருமண புரோக்கர் நாரத நாயுடுவிடம் (விசு) கூற அந்த எட்டு கண்டிஷனில் ஒன்று கூட இல்லாத ஒரு பெண்ணை எஸ் வி சேகருக்கு திருமணம் செய்து வைக்கிறார் விசு. அதன் பிறகு குடும்பத்தில் நடந்த பிரச்சனை, ஆறுதல், சந்தோஷம் என கலந்த கலவை தான் மணல் கயிறு படத்தின் முதல் பாகம்.

இரண்டாம் பாகம் 34 வருடங்களுக்கு பின் துவங்குகிறது. எஸ். வி. சேகரின் மகன் ஹீரோவாக நடித்திருக்கிறார். அதே திருமண புரோக்கராக வருகிறார் நாரத நாயுடு (விசு). தனக்கு பொருத்தமில்லாத பெண்ணை திருமணம் செய்து வைத்ததாக விசு மீது கோபம் கொண்டவராக வருகிறார் எஸ்.வி. சேகர். 

 எஸ் வி சேகரின் மகளாக வருகிறார் பூர்ணா. தனது தந்தையின் பிசினஸை நடத்தி வருகிறார். திருமணத்தில் சிறிதளவும் விருப்பமில்லாமல் இருக்கிறார். தனது பெற்றோர்களின் வற்புறுத்தலால் திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார். 

நான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் நான் இடும் எட்டு கண்டிஷன்களுக்கு கட்டுபட்டவராக இருக்க வேண்டும் என்று கூறிவிடுகிறார் பூர்ணா. இந்த திருமணத்திற்கும் விசுவே தரகராக இருக்கிறார். எட்டு கண்டிஷணுக்கு துளியும் பொருத்தமில்லாத அஷ்வின் சேகரை பூர்ணிமாவிற்கு திருமணம் செய்து வைக்கிறார் விசு.

இருவருக்கு திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்குப் பிறகு எட்டு கண்டிஷனுக்கும் அஷ்வின் பொருத்தமில்லாதவர் என பூர்ணிமாவிற்கு தெரியவர அதன் பின் நடக்கும் விளையாட்டு தான் ‘மணல் கயிறு-2’.

விளம்பர படம் எடுப்பவர்களாக வரும் அஸ்வின் சேகர், ஜெகன் மற்றும் ஜார்ஜ் மூவரும் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் காமெடியை அள்ளி தெளித்திருக்கிறார்கள். திருமண புரோக்கராக வரும் சாமிநாதன் வரும் காட்சிகளும் நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லாமல் பயணிக்கிறது. 

எஸ் வி சேகரின் நாடக நகைச்சுவைகள் படத்திற்கு பெரிதும் பலமாக இருக்கிறது. அவர் அடிக்கும் நகைச்சுவைகள் ரசிக்க வைக்கிறது. பூர்ணிமா அழகோடு கோபம் கொந்தளிக்கும் காட்சிகள் அழகு.

வேகமாக செல்லும் முதல் பாதி கலகலப்போடு ரசிக்க வைக்கிறது. இரண்டாம் பாதியின் நேரத்தை குறைத்து வேகத்தை ஏற்றியிருந்தால் இன்னும் நலமாக இருந்திருக்கும். ஆங்காங்கே சில சில லாஜிக் மீறல்கள் கவனித்திருக்கலாம் இயக்குநரே.

தரணின் இசையில் அனிருத் பாடிய ‘அடியே தாங்கமாட்ட...’ பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் ரகம். பின்னணி இசை கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மணல் கயிறு 2 - சிரிப்புக்கு பஞ்சமில்லை..

Rating :

0 1 2 2.5/5
share