Movie Reviews

  • Home/
  • Reviews/
  • மாப்ள சிங்கம் விமர்சனம் படம் விமர்சனம்

மாப்ள சிங்கம் விமர்சனம் படம் விமர்சனம்



ஒரு ஊரில் இரண்டு பெரிய பிரிவுகளின் தலைவர்களாக வாழ்ந்து வருகின்றனர் ராதாரவியும், முனிஸ்காந்தும். தொடர்ந்து 20 ஆண்டுகளாக அந்த ஊரில் சேர்மனாக இருந்து வருகிறார் ராதாரவி. அந்த ஊர் கோவில் தேரினை யார் தான் இழுத்துச் செல்வது என வருடா வருடம் பிரச்சனையே வந்து நிற்கிறது அந்த இரண்டு பிரிவினரும்...

ராதாரவியின் தம்பி மகனாக வருகிறார் விமல். முனிஸ்காந்தின் உறவுக்கார பெண்ணாக வருகிறார் அஞ்சலி. தன்னுடைய ஊரில் பெண்களின் படிப்பு, காதல் என எதுவும் வரக்கூடாது என்பதில் ஆணித்தனமாகவும் ரவுடித்தனமாகவும் வாழ்ந்து வருகின்றனர் விமலும் அவரது பெரியப்பாவான ராதாரவியும்.. 

முதன் முதலில் அஞ்சலியை பார்த்த தருணத்தில் அவர் மேல் காதல் வலையில் விழுகிறார் விமல். ஊரிலேயே காதலை அனுமதிக்காத ராதாரவி அவரது மகளான மதுமிலாவே காதல் செய்கிறார் அதுவும் எதிர் பிரிவினை சேர்ந்த அஞ்சலியின் சகோதரனை..

கடைசியாக விமல் அஞ்சலியை கரம் பிடித்தாரா??? மதுமிலாவின் காதல் சேர்ந்ததா??? இரு பிரிவினரும் ஒன்று சேர்ந்தார்களா?? என்பதை மீதி கதையாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜசேகர்..

தனக்கென பொருத்தமான காஸ்டியூமான வேஷ்டி சட்டையில் வந்து அசத்தியிருக்கிறார் விமல்... விமலின் படம் என்றாலே காமெடி தான் என்ற நிலையை உருவாக்கிய விமல் இந்த படத்திலும் அதே பாணியை தான் கடைபிடித்திருக்கிறார். காதலை பிரித்து வைக்கும் வேலையை மட்டுமே செய்து வந்த விமல் ஒரு கட்டத்தில் காதலை சேர்த்து வைக்கும் பாணியில் இறங்குவது ஒரு ஹீரோவுக்கான களம்...

அஞ்சலி படத்தில் மிகவும் அழகாகவே தெரிகிறார். ஆனாலும் எங்கேயும் எப்போது படத்தில் பார்த்த அந்த அஞ்சலியை மறுபடியும் பார்க்க முடியவில்லையே என ஏக்கம் வரதான் செய்கிறது... அஞ்சலியை பாடலுக்கு பாடல் சேலையை நகர்த்தி வைத்து ஆட வைத்து பாடலையும் பார்க்க வைத்து விடுகிறார்கள்...

படத்தின் பெரிய பலமே விமலின் உறவுக்காரர்களாக வரும் சூரியும், காளி வெங்கட்டும் தான். காமெடியில் அவ்வப்போது அவர்கள் தான் வந்து சற்று படத்தினை பார்க்க வைக்கிறார்கள்... இவர்களுடன் சுவாமிநாதனும் கைகோர்த்து அலப்பறை செய்கிறார்..  

சூரியின் காமெடி படங்களின் வரிசையில் இது அப்ளாஷ் ரக படம் இல்லையென்றாலும் இதுவும் ஒரு வகையான ரகம் தான்... படத்தின் கதை பெரிதாக இல்லை.. பல படங்களில் வந்த கதையை நினைவுப்படுத்துகிறது இந்த ”மாப்ள சிங்கம்”. 

ரகுநந்தனின் இசையில் ”வேணாம் மச்சா காதலு”  என்ற ஒரு பாடல் மட்டுமே கேட்கும் ரகம்... பின்னனி இசை பரவாயில்லை... தருண் பாலாஜியின் ஒளிப்பதிவில் தேனி மாவட்டம் அழகாக தெரிகிறது.

காமெடியில் கூடுதல் கவனமும், கதையில் கொஞ்சம் கூடுதல் கவனமும் செலுத்தியிருந்தால் மாப்ள சிங்கம் நிச்சயமாக கர்ஜனையிட்டிருப்பார்... 

மொத்தத்தில் ”மாப்ள சிங்கம்” மிடில் கிளாஸ் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை நிச்சயம் பூர்த்தி செய்வார்....

Rating :

0 1 2 2.5/5
share