மரகத நாணயம் படம் விமர்சனம்



சில புதுமுக இயக்குனர்களும் தங்களது திறமையை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்து அதில் வெற்றிபெறும் காலம் இது போல தோன்றுகிறது. அப்படி ஒரு புதுமுக இயக்குனர் ஒருவரின் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் இந்த ‘மரகத நாணயம்’. இந்த மரகத நாணயம் ஜொலித்ததா இல்லையா என்று பார்த்து விடலாம்.

ஹீரோவாக வரும் ஆதி தனது பணக்கஷ்டத்தால் சின்ன சின்ன கடத்தல் தொழிலில் இறங்குகிறார். மரகத நாணயம் பற்றி சில விஷயங்கள் கேள்விபட்ட வெளிநாட்டுக்காரர் ஒருவர் பல கோடி கொடுத்து அதை எடுக்க முயற்சிக்கிறார். அதற்காக மைம் கோபியை நாடுகிறார். 

மைம் கோபி மூலம் மரகத நாணயத்தை எடுக்கும் வேலை ஆதிக்கு வருகிறது. பல கோடி அளவிற்கு லாபம் கிடைக்கும் என்பதால் ஆதியும் ஓகே கூறுகிறார். மரகத நாணயத்தை தேடி போகும் போது தான் அதை பற்றிய பல உண்மைகள் வெளி வருகிறது. பல உயிர்கள் அதனால் காவு கொடுக்கப்பட்ட விஷயமும் வெளிவருகிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் ஆதி பல படங்களில் நடித்தாலும் விரல் விட்டு எண்ணக்கூடிய சில படங்களை மட்டுமே ஹிட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் காலூன்ற தனது நடிப்பின் திறமையை வெளிக்காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இந்த படத்தில் அதை நிரூபித்திருக்கிறார். 

படத்திற்கு வந்து போகும் நாயகியாக இல்லாமல் தனக்கான ஒரு நடிப்பினை வெளிப்படுத்தும் கதையை தேர்வு செய்ததற்கு நிக்கி கல்ராணிக்கு பாராட்டினை தெரிவித்துக் கொள்ளலாம். முனிஸ்காந்தின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். 

ஆரம்பத்தில் கொஞ்சம் முரட்டு வில்லனாக வரும் ஆனந்தராஜ், போக போக அவரை வைத்து அடிக்கும் லூட்டி காமெடிகள் கலகலப்பூட்டுகின்றன. ஆதியின் நண்பனாக வரும் டேனி கதையின் லீட் தான்.

எம் எஸ் பாஸ்கர், அருண்ராஜ் காமராஜ், சங்கிலி முருகன் ஆகியோர் படத்திற்கு தேவையான ஒரு நடிப்பினை கொடுத்துள்ளனர். படத்திற்கு தேவையான நடிகர்களை தேர்வு செய்ததற்காக இயக்குனரை நிச்சயம் பாராட்ட வேண்டும். 

படத்திற்கு தேவையான காமெடி, திகில் என இரண்டும் கலந்து கொடுத்திருப்பதால்  பலமாக தெரிகிறது. பின்னனி இசையும் மிரட்டுகிறது. ஷங்கரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். 

மரகத நாணயம் - குடும்பத்தோடு பார்க்க கூடிய ஜாலியான நாணயம் தான். 

Rating :

0 1 2 3 3.4/5
share