Movie Reviews

  • Home/
  • Reviews/
  • மருது படம் விமர்சனம்

மருது படம் விமர்சனம்தினம் ஒரு செயல், தினம் ஒரு செய்தி, என பம்பரமாக சுழன்று கொண்டிருக்கும் விஷால் கிராமத்து பக்கம் சென்று சில நாட்கள் இருந்து வந்தால் எப்படி இருக்கும், அப்படி இருந்து மருதுவாக வாழ்ந்து வந்திருக்கிறார் விஷால்

குட்டிப்புலி, கொம்பன் படங்களை இயக்கிய முத்தையா தனது அடுத்த படமாக விஷாலை வைத்து இந்த மருது படத்தை இயக்கியுள்ளார்.

ராஜபாளையத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளிதான் மருது(விஷால்), பெண்களை கண்டால் தெய்வமாகவும், பெண்களை தொடுபவனுக்கு சூரனாகவும் இருக்க வேண்டும் என்று சிறு வயதிலேயே தனது பாசத்தையும், வீரத்தையும் ஊட்டி வளர்க்கிறார் விஷாலின் அப்பத்தாவாக வரும் மாரியம்மா.

அதே ஊர் கோவிலில் ஸ்ரீதிவ்யாவை பார்க்கிறார் விஷால்... விஷாலின் அப்பத்தாவிற்கும் ஸ்ரீதிவ்யாவை பிடித்துவிட, மோதலுக்கு பின் காதல் வர ஒரு வழியாக ஸ்ரீதிவ்யாவை கரம் பிடிக்கிறார் விஷால்.

அதே ஊரில் பெரிய ஒரு தலைக்கட்டாக வாழ்ந்து வருபவர் ராதாரவி. இவர் கை நீட்டுபவரே அந்த ஊரில் கவுன்சிலராக வர வேண்டும், இவர் கை நீட்டுபவரே அந்த ஊரில் எம்எல்ஏவாக வர வேண்டும். இப்படி ஒரு பெரிய மனுஷனாக இருந்து வரும் ராதாரவியின் இடது கையாக வருகிறார் ஆர்.கே.சுரேஷ். ராதாரவியின் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து வேலைகளை செய்து முடிப்பவர் இவர் தான்.


ஆர்.கே.சுரேஷ் செய்யும் ரவுடிதனத்தை ஸ்ரீதிவ்யாவின் அம்மாவாக வரும் சிலம்பம் மாரியம்மா எதிர்க்கிறார். அவரை ஆர் கே சுரேஷ் கொலை செய்து விடுகிறார். அந்த கொலை நடப்பதற்கு விஷாலும், விஷாலின் அப்பத்தாவும் ஏதோ ஒரு விதத்தில் காரணமாகிறார்கள். பிறகு அப்பத்தா ரவுடி முன்பு வீர வசனங்களை பேசிவிட, தனது விளையாட்டை விளையாட ஆரம்பிக்கிறார் விஷால்... இவர் ஆடும் வீர விளையாட்டுதான் மருது...

முறுக்கேறிய மீசை, புடைத்த மார்பு, ஐந்து பேர் அல்ல ஐம்பது பேரையும் அடிக்கும் அளவிற்கு உயரம், கிராமத்தில் நல்லவன், அநியாங்களுக்கு துணை போகாதவன், நியாயங்களின் வழியில் செல்பவன், பெண்களுக்கு எப்போதும் மரியாதை கொடுப்பவன், அப்பத்தாவின் மேல் அளவில்லா பாசம் வைத்திருக்கும் பாசக்காரன் என கிராமத்து நாயகனாக வாழ்ந்திருக்கிறார் விஷால்.

தன் அம்மாவின் தைரியத்தை அப்படியே பார்த்து வளரும் ஸ்ரீதிவ்யா தானும் ஒரு தைரியமான பெண்ணாகவே வளர்கிறார். ஒரு அழகான நடிப்பை வெளிக்காட்டுவதில் அம்சமாக தெரிகிறார் பாக்கியலெட்சுமி (ஸ்ரீ திவ்யா).

அப்பத்தாவை படத்தின் இரண்டாவது ஹீரோ என்று தான் சொல்ல வேண்டும். அவ்வளவு வீரமான நடிப்பை காட்டியிருக்கிறார். முதல் பாதியில் சூரியுடன் அவர் செய்யும் காமெடி அலப்பறைகளிலும் சரி, இரண்டாம் பாதியில் விஷாலுக்காக வீர வசனம் பேசுவதிலும் சரி தனது நடிப்பை சரிவர செய்திருக்கிறார் அப்பத்தா.

சூரி காமெடி காட்சிகளில் வழக்கம் போல் கலகலப்பூட்டுகிறார். ஆர் கே சுரேஷை பார்த்தாலே பயமாக இருக்கும் அளவிற்கு பார்வையிலேயே மிரட்டுகிறார். டி இமானின் இசையில் பாடல்கள் சூப்பர். பின்னணி இசை காதை பதம் பார்க்கின்றன.

வேல்ராஜ்ஜின் ஒளிப்பதிவு என்றாலே ஒரு ஸ்பெஷல் இருக்கும் அந்த ஸ்பெஷல் இந்த படத்தில் இல்லையே கேமராமேன்.....

முத்தையா வசனங்கள் படத்திற்கு பலம், அனல் அரசுவின் சண்டை காட்சிகள் அதகளம் காண்கின்றன.

இன்னும் முன்னேறாத நகரமா ராஜபாளையம், கொலை என்றால் அவ்வளவு சாதரண விஷயமாக எடுத்து கொள்வதும், காவல்துறையே இல்லாதது போலவும், வழக்கம் போல்வரும் லாஜிக் விஷயங்கள் உதைக்கின்றன. அம்மா மகனுக்கு உள்ள பாசப்போராட்டம், மாமன் மருமகனுக்கு உள்ள பாசப்போராட்டம், அப்பத்தா பேரனுக்கு உள்ள பாசப்போராட்டம், போதும் இயக்குனரே கொஞ்சம் பாதை மாற்றி பயணிக்கலாமே???

மருது - விஷாலின் வேட்டையை ரசிக்கலாம்..

Rating :

0 1 2 3/5
share