Movie Reviews

  • Home/
  • Reviews/
  • மீண்டும் ஒரு காதல் கதை படம் விமர்சனம்

மீண்டும் ஒரு காதல் கதை படம் விமர்சனம்

தமிழ் சினிமாவில் அதிகமான காதல் கதைகள் வருகிறது போகிறது. ஒரு சில படங்களே அதில் நின்று வெற்றியும் பெறுகிறது. அந்த கதைகள் சொல்லும் விதத்தில் மட்டுமே அது வெற்றி படமா..?? இல்லை தோல்வி படமா என நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வரிசையில் தற்போது வெளிவந்த மீண்டும் ஒரு காதல் கதை எந்த வகையான காதல் கதையை கூற வந்திருக்கிறது என்பதை பார்க்கலாம்.

படத்தின் கதாநாயகன் வால்டர் ப்லிப்ஸ் ஒரு இந்து மதத்தினை சார்ந்தவர். கதாநாயகி இஷா தல்வார் முஸ்லீம் மதத்தினை சார்ந்தவர். கதாநாயகியை பார்த்ததும் நாயகனுக்கு காதல். கதாநாயகியை காதலில் விழ வைத்து, அவரை திருமணம் செய்து கொண்டாரா... இல்லையா???  என்பதே படத்தின் கதை...

பம்பாய் படத்தின் ஒன்லைன் ஸ்டோரிதான் என்றாலும் கதைக்களம் சற்று வித்தியாசனமானது தான். நாயகன் வால்டர் ப்லிப்ஸ் இந்த படத்தின் மூலம் தான் அறிமுகம் ஆகிறார். அறிமுக நாயகன் என்பது துளியளவும் தெரியாமல், தனது துறுதுறு நடிப்பில் அனைவரையும் கவர்கிறார்.

 மலையாளத்தில் நிவின் பாலியின் நடிப்பில் வெளிவந்த ‘தட்டத்தின் மறையத்து’ என்ற படத்தின் நேரடியான ரீமேக் தான் இந்த படம்.

மலையாளத்தில் நாயகியாக நடித்த இஷா தல்வாரே இந்த படத்திலும் நடித்தது படத்திற்கு பெரிய பலம் தான். வசனம் தேவையில்லை தனது பார்வை ஒன்றே போதும் என்று பல இடங்களில் தனது கண்களால் பேசும் காட்சிகளில் அனைவரையும் ஈர்க்கிறார்.

இந்த காலகட்டத்தில் இருக்கும் இளைஞர்களின் காதல் மன நிலையில் எடுக்கப்பட்ட அழகான ஒரு காதல் கதை. படத்தின் கதையோடு அழகாக பயணித்து வருகிறது பின்னணி இசை. ஜி வி பிரகாஷ் குமாரின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும் ரகம்.

யாரடி நீ மோகினி படத்தினை இயக்கிய மித்ரன் ஜவகர் இந்த படத்தினை இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு படத்திற்கு சற்று கூடுதல் பலமாகவே அமைந்திருக்கிறது.

ஒரு தரப்பு ரசிகர்களை மட்டுமே ஏற்றுக் கொள்ளக்கூடிய கதையாக அமைந்திருப்பது சற்று பின்னடைவு தான்.


மீண்டும் ஒரு காதல் கதை - காதலர்களுக்கு மட்டுமான கதை..

Rating :

0 1 2 2.5/5
share