Movie Reviews

  • Home/
  • Reviews/
  • மெஹந்தி சர்க்கஸ் படம் விமர்சனம்

மெஹந்தி சர்க்கஸ் படம் விமர்சனம்

அறிமுக இயக்குனர் சரவண ராஜேந்திரனின் மெஹந்தி சர்க்கஸ் திரைப்படம் இளையராஜாவின் இசை சாம்ராஜ்யத்திற்கு செய்த சமர்ப்பணம் மட்டும் அல்லாமல் நல்ல காதலை சொல்லி சிரிக்கவும், சிந்திக்கவும், கலங்கவும் வைக்கிறது.
   
கதையின் களம் புதிது அல்ல. நாம் பார்த்த படித்த காதல் கதைகளின் வரும் அணைத்து வகையான விஷயங்களும் இந்த படத்திலும் உள்ளது அனால் ராஜு முருகனின் பிரம்மாண்டமான எழுத்தும், சான் ரோல்டனின் அற்புதமான இசையும், அறிமுக நடிகர்களின் அபாரமான  நடிப்பும், கண்ணை குளிர வைக்கும் ஒளிப்பதிவாளர் செல்வகுமாரின் உழைப்பும் படத்தை நல்ல பொழுதுபோக்கு அம்சமாக நமக்கு காட்டுகிறது. 

கொடைக்கானலில் ஒரு கிராமத்தில் "ராஜ கீதம்" எனும் பாடல் ஒளிப்பதிவு கடை வைத்து நடத்துகிறார் நாயகன் ஜீவா. 90 களின் ஆரம்பத்தில் நடப்பதாக கதை நகர்கிறது. அந்த பாடல் கேஸட் கடையில் தான் அந்த ஊர் இளைஞர்களின் காதல் இளையராவின் பாடல் மூலம் மலர்கிறது. அதற்கு நம் நாயகன் உதவியாக இருக்கிறார். அந்த ஊருக்கு சர்க்கஸ் நடத்த வந்த நாயகி மெஹந்தி மீது காதல் வசப்படுகிறார் நாயகன்.

ஜீவாவின் தந்தைக்கும், மெஹந்தியின் தந்தைக்கும் இவர்களது காதல் பிடிக்கவில்லை கீழ் ஜாதி பெண்ணை காதலிப்பது குற்றம் என்பது போல நடந்து கொள்கிறார் நாயகனின் தந்தை. ஆனாலும் அந்த ஊர் பாதிரியார்( வேல ராமமூர்த்தி) மற்றும் நண்பன் (RJ  விக்னேஷ்காந்த் ) ஆகியோரின் உதவியோடு இவர்களின் காதல் சேர்ந்ததா? இல்லையா? என்பது தான் மெஹந்தி சர்க்கஸ். 

நாயகன் ஜீவா தனது கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.ஆனாலும் இன்னும் நடிப்பில் நேர்த்தி தேவை. நாயகி மெஹந்தி தனது அருமையான நடிப்பாற்றலால் வெகுளித்தனமான இளம் பெண்ணாக அற்புதமாக நடித்திருக்கிறார். வில்லனாக வலம் வரும் வேல ராமமூர்த்தி இந்த படத்தில் குணச்சித்திர வேடம் ஏற்று அதையும் மிக சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

RJ  விக்னேஷ்காந்த் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது நகைச்சுவையால் மக்களை ஈர்க்கிறார் AR .ரஹ்மான் இசை பற்றி அவர் கூறும் விஷயங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெரும். விகாஷ் சிர்க்ஸ்சில் நட்சத்திரமாக இருப்பவர் அவரின் நடிப்பும் நேர்த்தியாக இருந்தது. பின்னால் வரும் ட்விஸ்ட்களுக்கு காரணமாக இவரே இருக்கிறார்.

நடிகர்களின் நடிப்பை தாண்டி சான் ரோல்டன் இசையும் இளையராஜாவின் பாடல்களும் படத்தின் அழகுணர்ச்சியை நூறு மடங்கு அதிக படுத்தியது என்று சொன்னால் மிகை ஆகாது.

அணைத்து தரப்பினரும் பார்க்கக்கூடிய படமாக மெஹந்தி சர்க்கஸ் இருந்தாலும். இளைஞர்களை இந்த படம் அதிகம் கவரும் என்பதில் சந்தேகம் இல்லை.

மெஹந்தி சர்க்கஸ் - காதல் கீதம் 
(3.5 / 5 )

Rating :

0 1 2 3 3.5/5
share