Movie Reviews

  • Home/
  • Reviews/
  • மேற்குத்தொடர்ச்சி மலை படம் விமர்சனம்

மேற்குத்தொடர்ச்சி மலை படம் விமர்சனம்

விஜய்சேதுபதிக்கு மிகப்பெரிய சல்யூட்

தன்னை ஏற்றிவிட்டு உயர்த்திய தமிழ் சினிமாவுக்கு நன்றிக்கடனாக ஆத்மதிருப்தியுடன் 

‘மேற்குத் தொடர்ச்சி மலை

தமிழ் சினிமாவின் தரத்தை மேம்படுத்தியுள்ள இந்த படத்தை, தமிழக விவசாயிகளும், தொழிற்சங்கத்தினரும் வெற்றி பெறச் செய்தால் மட்டுமே இந்த உழைப்புக்கு கிடைத்த முறையான மரியாதையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

எளிய மனிதர்களின் கதை என்றெல்லாம் இதை சாதாரணமாக கூறிவிட முடியாது. மிக மிக மிக சாமான்ய விவசாய மக்களை பிரதிபலித்த படம் என்று நிச்சயமாக கூறலாம்.

சர்வதேச தரத்தின் பார்வையோடு படத்தை உற்று நோக்கினால் மட்டுமே புரியும்..

கதைக்கரு அப்படியே கிராமிய வாழ்க்கைக்கு நம்மை கைப்பிடித்து அழைத்து செல்கிறார் இயக்குநர் லெனின்பாரதி.

படம் முழுக்க மலையும், மலை சார்ந்த பகுதிகளும்தான்.

‘நாம பாட்டுக்கு நம்ம வழியிலே போய்ட்டா, அது பாட்டுக்கு அது வழியிலே போயிடும் என்று யானை வழித்தட பிரச்சினையை தொட்டுக்காட்டுகிறார் வசனகர்த்தா ராசி தங்கதுரை.

கிராமப்படம் என்றாலே வேல், கம்பு, வீச்சரிவாள், ஜாதி வசனம், மரத்தை சுற்றி ஆடும் நடனம், முதலிரவு காட்சி என்ற வழக்கமான பம்மாத்து வேலைகளை தூர வீசி விட்டு அழகிய கவிதையை ‘மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாக்கியுள்ளனர்.

ஜாதி, மதம், இனம், மாநிலப் பிரிவினைகளை தூண்டி மக்களைப் பிரிக்க நினைப்பவர்களை, ரத்தம் உறுஞ்சும் அட்டையாக நினைத்து எச்சரிக்கையாக இருங்கள் என்று கூறும் வசனம் அருமை

எளிய விவசாயக்கூலி ரங்கசாமி. சொந்தமாக நிலத்தை வாங்குவதும், பயிரிடுவதும், அது சார்ந்த வாழ்வியல் பிரச்சினைகளும், இறுதியாக எளிய விவசாயி என்ன ஆகிறான்? என்பதும்தான் இந்த படத்தின் கதை.

சர்வதேச திரை விருது நிகழ்ச்சிகளில் திரையிடப்பட்டு ஏராளமான விருதுகளை பெற்றுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் நடந்த ‘பயாஸ்கோப் விழாவில் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை தேனி ஈஸ்வர் இந்த படத்திற்காக பெற்றுள்ளார்.

படத்தை தயாரித்துக்கொடுத்த நடிகர் விஜய்சேதுபதிக்கு மிகப்பெரிய சல்யூட்.

Rating :

0 1 2 3 3.8/5
share