Movie Reviews

  • Home/
  • Reviews/
  • மிருதன் படம் விமர்சனம்

மிருதன் படம் விமர்சனம்

தனி ஒருவன், பூலோகம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நாயகர்களில் ஒருவரான ஜெயம்ரவியின் அடுத்த அதிரடியாக வெளி வருகிறது மிருதன்.

படத்தின் நாயகனாக ஜெயம் ரவியும், நாயகியாக லெஷ்மி மேனனும் நடித்திருக்கிறார்கள். இமான் இசையமைத்திருக்கிறார்.

மிருதனின் மிரட்டலான விமர்சனத்தை சற்று பார்த்து விடலாம்...

மிருகம், மனிதன் இரண்டையும் சேர்த்து  மிருதன் என்று படத்திற்கு டைட்டிலாக வைத்திருக்கிறார்கள். ஊட்டியில் டிராபிக் சப் இன்ஸ்பெக்டர் போலீஸாக பணி புரிகிறார் ஜெயம் ரவி. தாய், தந்தை என உறவுகள் எதுவும் இல்லாமல் தனது தங்கையே உலகம் என எண்ணி வாழ்ந்து வருகிறார். பள்ளி பயிலும் தங்கையாக வருகிறார் அனிகா.

மனிதனுக்குள் மிருக வெறியை மட்டும் புதைக்கும் ஒரு வைரஸை ஊட்டி ஆய்வகத்துக்கு எடுத்து  செல்லும் போது ஒரு விபத்தில் ரோட்டில் கொட்டி விடுகிறது அந்த வைரஸ் அடங்கிய திரவம்.

அதை நாய் ஒன்று  குடித்து விடுகிறது. அந்த நாய் ஒரு மனிதனை கடித்து விடுகிறது. அந்த மனிதன் தன் வீட்டில் உள்ள அம்மாவை கடித்து விட, அம்மா மருமகளை கடித்து விட என அடுத்தடுத்து கடி வாங்கிய அனைவரும் மிருகமாக(மிருதனாக) மாறி விடுகின்றனர்.

டாக்டராக வரும் லெக்ஷ்மி மேனன் மீது ஜெயம் ரவிக்கு காதல் வருகிறது. லெக்‌ஷ்மி மேனன் ஏற்கனவே ஒருவரை காதலிப்பது தெரியாமல்.

இந்நிலையில் ஊட்டி முழுவதும் அந்த வைரஸ் வேகமாக பரவுகிறது. கோயம்புத்தூர் G H சென்றால் மட்டுமே அந்த வைரஸை அழிக்கக் கூடிய மருந்தை கண்டுபிடிக்க முடியும் என லெக்‌ஷ்மி மேனன் கூறுகிறார். இதற்காக லெக்‌ஷ்மி மேனனின் மருத்துக்குழுவினருடன், தனது தங்கையும், தனது நண்பனையும் அழைத்துக் கொண்டு கோயம்புத்தூர் செல்கின்றார் ஜெயம் ரவி. 

செல்லும் வழியெங்கும் மிருதன்களாக இருக்கின்றனர். கடைசியாக அந்த மிருதன்களை கடந்து அவர்கள் கோயம்புத்தூர் G H சென்றார்களா??? அந்த மருந்தை கண்டுபிடித்தார்களா??? இல்லை இவர்களே மிருதன்களாக மாறினார்களா??? ஜெயம் ரவியின் காதல் என்ன ஆனது என்பதே மீதிக்கதையாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஷக்தி செளந்தர்ராஜன்.

படத்தின் கதைக்கு பக்காவாக பொருந்தியிருக்கிறார் ஜெயம் ரவி. இவர் இல்லாமல் இந்த கதை சாத்தியமே இல்லை.... ஆங்கிலப்படம் என்றாலே அனைவரின் மூளைகளிலும் பளிச்சென்று ஞாபகம் வருவது சோம்பி படங்கள் மட்டும் தான். அந்த அளவுக்கு பிரம்மாண்டமாக இல்லை என்றாலும் தமிழில் கொடுக்கக்கூடிய, எடுக்கக்கூடிய பட்ஜெட்டில் பக்காவாக எடுத்திருக்கிறார் இயக்குனர். 

சோம்பி படங்கள் என்றாலே சற்று திகிலை எதிர்பார்ப்பாகள் மக்கள். சோம்பிகள் வரும் போது அவற்றை திகிலாகவும், பயங்கரமாக காட்டுவதில் சற்று சறுக்கியிருக்கிறார் இயக்குனர். கண்ணில் படும் சோம்பிகள் அனைத்தும் ஜெயம் ரவியின் கையில் வைத்திருக்கும் துப்பாக்கிக்கு இரையாக தயாராக இருப்பது போல் காட்டியிருப்பது கொஞ்சம் உச் கொட்ட வைக்கிறது.

கதாநாயகியாக வரும் லெஷ்மி மேனன் வெங்கடேஷின் ஒளிப்பதிவில் அழகாக இருக்கிறார். மேலும், இமானின் இசையில் இரு பாடல்களும் அருமை. ”முன்னாள் காதலி” பாடல் ஒன்ஸ்மோர் கேட்க வைக்கிறது.. இந்த பாடலை எடுத்த விதத்திற்கு இயக்குனருக்கு ஒரு பெரிய கைதட்டலே கொடுக்கலாம். பின்னணி இசையில் ஒரு சில இடங்களில் தூக்கலாகவும், ஒரு சில இடங்களில் தொங்கலாவும் கொடுத்திருக்கிறார் இமான்.

ஜெயம் ரவியின் நண்பனாக வரும் காளி வெங்கட், ஆங்காங்கே சில இடங்களில் காமெடியை வீசுகிறார்... க்ளைமேக்ஸ் காட்சிகளில் 40 மேக்கப் மேன்களை வைத்து, 500க்கும் மேற்பட்ட துணை நடிகர்களை ரெடி செய்து அவர்களை க்ளைமேக்ஸ் காட்சிகளில் நடிக்க வைத்து அந்த காட்சியில் வெற்றியும் பெற்றிருப்பது சபாஷ்...  

வெங்கடேஷின் ஒளிப்பதிவு - ஊட்டியை அழகாகவும், சோம்பிகளை அழுக்காகவும் காட்டியிருப்பது சூப்பர்... கற்பனைக் கதை என்றாலும் தமிழில் ஒரு சோம்பி படம் என்பதால் நல்ல ஒரு வரவேற்பை பெறும்.. இரண்டாம் பாகத்திற்கும் டைட்டிலை போட்டு படத்தை முடிக்கின்றனர். 

பூலோகத்தில் தனி ஒருவனான ஜெயம் ரவியின் மிரட்டலில் நிமிர்ந்து நிற்பான் “மிருதன்”....  
      

Rating :

0 1 2 3/5
share