Movie Reviews

  • Home/
  • Reviews/
  • மோ படம் விமர்சனம்

மோ படம் விமர்சனம்


தமிழ் சினிமாவில் பேய் கதைகளுக்கு மட்டும் பஞ்சம் ஒரு போதும் வந்ததில்லை. பேயை நம்பி பணம் போட்டால் லாபம் சம்பதிக்கலாம் என்பது தயாரிப்பாளர்களின் கணக்கு. அந்த வரிசையில் இந்த வாரம் ‘மோ’ வெளிவந்திருக்கிறது. இந்த ‘மோ’வின் மிரட்டல் எப்படி இருந்தது என்பதை பார்க்கலாம்.

சுரேஷ் ரவி,  ரமேஷ் திலக், தர்புகா சிவா மூவரும் நண்பர்கள். கேடி வேலைகள் என்னவெல்லாம் உண்டோ அனைத்தையும் செய்து சம்பாதித்து வருகிறார்கள். அதன்பிறகு பேய் விரட்டும் தொழிலில் இறங்கி அனைவரையும் ஏமாற்றி நிறைய சம்பாதிக்கலாம் என்று எண்ணி அதில் மூவரும் இறங்குகிறார்கள். 

இதற்காக பேயாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷும், இவருக்கும் மேக்கப் மேனாக  முனிஷ்காந்தும் அவர்கள் கூட்டணியில் இணைந்து கொள்கிறார்கள். ஒரு பெரிய அடுக்குமாடி கட்டிடத்தில் பேய் இருப்பதாக, அங்கு குடியிருக்கும் அனைவரையும் நம்ப வைத்து பேயை விரட்டுவதாக அந்த கட்டிடத்தின் ஓனரும் ரியல் எஸ்டேட் அதிபருமான செல்வாவிடம் இருந்து பணத்தை கைப்பற்றி விடுகின்றனர் அந்த டீம்.

இந்நேரத்தில் ஒரு பாழடைந்த பள்ளி விலைக்கு வர, அந்த பள்ளியை வாங்க முற்படுகிறார் செல்வா. ஆனால், அதற்கு முன்பே முன்னாள் எம்எல்ஏ’வாக வரும் மிமி கோபி கைப்பற்றிவிடுகிறார். 

ஒரு கட்டத்தில் அவர்கள் ஐவரும் ஏமாற்றிதான் பணத்தை பறித்தார்கள் என்று செல்வாவிற்கு தெரியவர, அவர்களை போலீஸில் பிடித்து கொடுக்காமல் இருக்க வேண்டும் என்றால் அந்த பாழடைந்த பள்ளியில் பேய் இருப்பது போல் செட் செய்து அந்த மைம் கோபியை அங்கிருந்து விரட்ட வேண்டும் என்று செல்வா கூறிவிடுகிறார்.

இதற்காக சுரேஷ் ரவி,  ரமேஷ் திலக், தர்புகா சிவா, ஐஸ்வர்யா ராஜேஷ், முனிஷ்காந்த் ஐவரும் அந்த பாழடைந்த பள்ளிக்குச் செல்கின்றனர். அப்போது இவர்கள் அங்கு இருக்கும் ஒரிஜினில் பேயிடம் மாட்டிக் கொள்கிறார்கள் . அந்த பேயிடம் இருந்து இவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதே மீதிக் கதை.

எந்த கதையாக இருந்தாலும் அதில் தன்னை கச்சிதமாக பொருத்திக் கொள்வார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதேபோல் தான், இந்த படத்திலும் மிகவும் ஜாலியான ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். 

சுரேஷ் ரவி,  ரமேஷ் திலக், தர்புகா சிவா மூவருக்கும் தங்களது ஜாலியான ரோலை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். இவர்கள் மூவரும் சேர்ந்து 'Prayer' செய்யும் காட்சிகளில் சிரிக்க வைத்து வயிறை பதம் பார்த்து விட்டு செல்கிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும் மேலாக, முனிஷ்காந்தின் காமெடி சரவெடிகள் தான் படத்தின் ஹைலைட். இவரது காட்சிகளில் திரையரங்குகளில் சிரிப்பலைகள் அள்ளுகின்றன. இரண்டு காட்சிகள்  மட்டுமே வந்தாலும் அதிலும் அனைவரையும் சிரிக்க வைத்து விட்டு சென்று விடுகிறார் யோகிபாபு.

சந்தோஷ் தயாநிதியின் பின்னணி இசையில் மேலும் கொஞ்சம் மிரள வைக்கிறது. விஷ்ணு ஸ்ரீ கே’யின் ஒளிப்பதிவு சிறப்பு.

 ஆங்காங்கே வரும் சிறிது லாஜிக் மீறல்களையும் கவனத்திருக்கலாம்.

மோ -  இரண்டு மணி நேரமும் சிரிக்க ‘மோ’ சென்று வரலாம்.... காமெடி கலாட்டா...




Rating :

0 1 2 3/5
share