Movie Reviews

  • Home/
  • Reviews/
  • நாகேஷ் திரையரங்கம் படம் விமர்சனம்

நாகேஷ் திரையரங்கம் படம் விமர்சனம்



சில காலம் தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்த பேய் படங்கள், சில நாட்களாக குறைந்தது எல்லோரையும் பெருமூச்சு விட வைத்திருக்கிறது. கிராபிக்ஸ் காட்சிகளை மட்டுமே நம்பி சிலர் பேய் படம் என்ற பெயரில் அனைவரையும் தட்டி தில்லாட வைத்து விட்டனர். பொறுமையை இழந்த ரசிகர்கள் பேய் படங்களை ஓரங்கட்டத் தொடங்கினர். தற்போது ஆரியின் நடிப்பில் சற்று வித்தியாசமான டைட்டிலில் வெளிவந்திருக்கும் ‘நாகேஷ் திரையரங்கம்’ ரசிகர்களை சரியாக சென்றடைந்ததா என்பதை காணலாம்.

நாயகனாக ஆரி, ஒரு வீட்டு புரோக்கர். இவருக்கு அம்மாவாக சித்தாராவும் தங்கையாக வாய் பேச முடியாத அதுல்யா ரவி, தம்பியாக அபிலாஷும், நண்பனாக காளி வெங்கட். 

ஆரியும் நாயகி ஆக்‌ஷனாவும் காதலிக்க, ஆக்‌ஷனாவின் நண்பர் ஒருவரும் அதுல்யா ரவியும் காதலிக்கிறார்கள். அதுல்யாவின் காதலுக்கு ஆரி பச்சைக் கொடி காட்ட, அதுல்யாவை பெண் பார்க்க வருகிறார்கள். 

வரதட்சணையாக அதிகமான சவரன் கேட்க, சித்தாராவும் தருவதாக ஒத்துக் கொள்கிறார். ஆரியின் சகோதரர் அபிலாஷ் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, ஆரி சம்மதிக்கிறார்.

கிராமத்தில் உள்ள தமது பூர்விக சொத்தான ஒரு பழைய திரையரங்கம் ஒன்றை விற்று அதுல்யாவை திருமணம் செய்து கொடுத்து விடலாம் என்று ஆரி அதை விற்பதற்காக தனது நண்பன் காளி வெங்கட்டுடன் கிராமத்திற்கு செல்கிறார். ஆனால், அந்த கிராமத்தில் உள்ளவர்கள் அந்த திரையரங்கிற்குள் பேய் இருப்பதாக கூறுகிறார்கள். அது நம்ப மறுக்கும் ஆரி, அந்த திரையரங்கிற்குள் தங்குகிறார்.

ஆரியின் கனவில் ஒரு சிலர் கொல்லப்பட அது நிஜத்திலும் நடந்தேறுகிறது. அங்கு பேய் இருப்பதை ஆரி உணர்ந்துகொள்ள, யார் அந்த பேய்...?? எதற்காக பலரை கொலை செய்கிறது.?? அதுல்யாவின் திருமணம் நடைபெற்றதா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

நெடுஞ்சாலை படத்திற்கு பிறகு ஆரியின் ஒரு வித்தியாசமான நடிப்பை இப்படத்தில் காணலாம். ஆக்‌ஷனாவுடனான காதல் காட்சிகளில் இருக்கட்டும், பேயுடன் மல்லுக்கட்டும் க்ளைமாக்ஸ் காட்சிகளாக இருக்கட்டும் மிகவும் சிரமத்துடனான ஒரு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய நடிப்பிற்கு நிச்சயம் ஒரு பாராட்டை தெரிவித்துக் கொள்ளலாம். 

ஆக்‌ஷனாவும் காதல் காட்சிகளில் மட்டுமல்லாமல், அதிர்ச்சியடையச் செய்யும் ஒரு சில காட்சிகளில் தனது மிரட்டலை பதிவு செய்துள்ளார். பிற்பாதியில் பேயாகவும் அழகு தேவதையாகவும் வந்து மிரட்டல் செய்திருக்கிறார் மாசூம் சங்கர். கவர்ச்சியிலும் தனது பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.

காளி வெங்கட்டின் காமெடி ஆங்காங்கே சிரிக்க வைத்துள்ளார். லதா கெளரவ வேடத்தில் நடித்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களும் பேசும்படியாக காட்சியமைத்திருக்கிறார்.

வந்த சில பேய் படங்களுக்கு நடுவில், கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் இல்லாமல், தனது காட்சியமைப்பில் தனித்திறமையை நிரூபித்து தனித்துவமாய் நிற்கிறார் இயக்குனர் ஐசாக். திரைக்கதை அமைப்பிலும் சரி, ஒவ்வொரு கதாபாத்திரத்தை பேச வைப்பதிலும் சரி ‘நாகேஷ் திரையரங்கத்தை’ கவனம் ஈர்க்க வைத்திருக்கிறார்.

’இசையமைப்பாளர் ஸ்ரீயின் இசையில் ”கண்கள் ரெண்டும்” என்ற மெலடி பாடல் மூலம் 
தான் குத்து பாடலுக்கு மட்டுமல்ல மெலடி பாடலுக்கும் நான் தான் ஹீரோ என்று நிரூபித்திருக்கிறார். பின்னனி இசையில் பல இடங்களில் அனைவரையும் மிரள வைத்திருக்கிறார். நெளசத் கேமரா திரையரங்கினை பல இடங்களில் மிரட்டலை காண்பிக்கிறது. 


நாகேஷ் திரையரங்கம் - நிச்சயம் மக்கள் நிரம்பும் திரையரங்கம்தான்...  

Rating :

0 1 2 3/5
share