Movie Reviews

  • Home/
  • Reviews/
  • நமது படம் விமர்சனம்

நமது படம் விமர்சனம்



ஒரு சில படங்களில் கதாபாத்திரத்தோடு நம்மையும் இணைத்து பார்க்க சில படங்கள் வந்து போகும். “நமது” வாழ்க்கையில் நடக்கும் அன்றாட செயல்களில் இப்படி ஒன்று நடந்தால் நாம் என்ன செய்வது என்று ஒவ்வொருவரையும் யோசித்து பார்க்க வைக்கும் படியான கதைக்களமும் ஒரு சில படங்களில் அமையலாம். அந்த வகையில் ”நமது” படத்தின் விமர்சனத்தை சற்று பார்த்து வரலாம்.

மோகன்லால் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் அசிஸ்டெண்ட் மேனஜெராக பணிபுரிகிறார். நடுத்தர வர்க்கத்தில் உள்ள குடும்பத்தலைவன்.

தாய், தந்தையரின் சொல்லுக்கேற்ப நன்றாக படித்து வந்த அபிராம் என்ற மாணவனின் வாழ்க்கையில் ஒரு காதல்,

நல்ல ஒழுக்கங்களையும், பிறருக்கு உதவி செய்யும் குணமும் படைத்த பள்ளி மாணவியாக மஹிதா.

எந்த வழியில் சென்றால் குடுபத்தின் செலவை மிச்சப்படுத்தலாம் என்று நினைக்கும் குடும்பத்தலைவி கெளதமி.

இந்த நால்வர் வாழ்க்கையையும் ஒரு கோடு இணைக்கிறது...  அந்த கோட்டில் நடந்த பயணம் என்ன..??? என்பதே படத்தின் கதை...

மோகன்லால் பற்றி விமர்சனம் சொல்ல தேவையில்லாத ஒன்று தான். அவர் தேர்ந்து போன ஒரு நடிகர். எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும், அதோடு ஒன்றிவிடுவார் என்று அனைவரும் அறிந்த ஒன்று தான்.

கெளதமி, பாபநாசம் படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு குடும்பபாங்கான கதாபாத்திரம். அருமையான ஒரு நடிப்பினை வெளிப்படுத்துகிறார். கெளதமியின் தோழியாக வருகிறார் ஊர்வசி. வழக்கம் போல் இவர் தோன்றும் இடங்களில் எல்லாம் கலகலப்பூட்டுகிறார்.

அபிராம் அழகான ஒரு கல்லூரி மாணவராக வருகிறார், மஹிதா பள்ளி மாணவியாக வந்து அனைவரையும் கவர்கிறார்.

பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. பாடல்கள் ஜொலிக்கவில்லை. ஒளிப்பதிவில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்றியது. சற்று கதை நகரும் வேகத்தை ஏற்றியிருக்கலாம். படத்தின் இயக்குனரும் மோகன்லாலும் படத்தின் கதையை தூக்கி பிடித்திருக்கிறார்கள். இதற்காக ஒரு க்ளாப்ஸ் தட்டலாம்.

நமது - நடுத்தர குடும்பங்களின் ஒரு வெளிப்பாடு... 

Rating :

0 1 2 2.8/5
share