Movie Reviews

  • Home/
  • Reviews/
  • நட்பே துனை படம் விமர்சனம்

நட்பே துனை படம் விமர்சனம்


       மீசைய முறுக்கு படத்தின் வெற்றியை தொடர்ந்து, "ஹிப் ஹாப் தமிழா ஆதி" நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் "நட்பே துனை". ஒரு ஊரின் விளையாட்டு மைதானத்தை தன்னுடைய சுயலாபத்திற்காக அபகரிக்க நினைக்கும் அரசியல்வாதி; ஆனால் அவரிடமிருந்து அந்த மைதானத்தை காப்பாற்ற நினைக்கும் மக்கள் என்று படத்தின் மூல கதை வலுவாகவே இருக்கிறது. 
      
படத்தின் முதல் பாதியில் வழக்கமான சினிமா பாணியை கையாண்டுள்ளனர். கதாநாயகன் தனது காதலியின் பின்னால் சுற்றி அலைந்து ஒரு கட்டத்தில் அந்த பெண்ணிற்காக ஹாக்கி விளையாடுவது போல காண்பித்து கதாநாயகன் ஏற்கனவே தேசிய அளவில் விளையாடிய வீரர் எனும் ரகசியத்தை சொல்லும்பொழுது இடைவேளை வந்துவிட்டது. முதல் பாதியில் எல்லா படங்களையும் போல இருந்தாலும் அங்கு அங்கு ரசிக்கும்படியான நகைச்சுவையை "எருமசானி விஜய்" மற்றும் அவரது நட்பு வட்டாரங்கள் நமக்கு தருகிறார்கள்.
       
படத்தின் இரண்டாம் பாதி முழுக்க முழுக்க பிளாஷ் பாக் கட்சிகளால் நிரம்பியுள்ளது. விளையாட்டு துறையில் நடக்கும் அவலங்களையும் அரசியலையும் பேசுகிறது. இத்தனையும் தாண்டி அந்த மைதானத்தை இவர்கள் அரசியல்வாதியிடம் இருந்து மீட்டர்களா இல்லையா என்பது தான் "நட்பே துனை".

கிளாப்ஸ் :
       
நம் தேசிய விளையாட்டான "ஹாக்கியை" மையமாக வைத்து படம்  எடுக்கப்பட்டதற்கு முதலில் பாராட்டுக்கள். நிஜ வாழ்க்கையில் பல அரசியல் வாதிகளை கேள்வி கேட்கும் "கரு.பழனியப்பன்" இந்த படத்தில் அரசியல்வாதி வில்லனாக வந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். அவர் பேசும் வசனங்கள் நமக்கு அமைதிப்படை திரைப்படத்தை நினைவூட்டுகின்றது. படத்திற்கு மிகவும் வலு சேர்த்திருப்பது ஹிப் ஹாப் தமிழாவின் பின்னணி இசை தான். 

சொதப்பல்ஸ் :
      
 படத்தின் நடிகர்கள் தங்கள் கதாப்பாத்திரங்களுக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தவில்லை சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர்களை நடிக்க வைத்தாலும் ஒரு சினிமாவாக பார்த்தால் அனைவரின் நடிப்பும் படத்திற்கு மிக பெரிய சொதப்பல் கரு.பழனியப்பன் தவிர. ரசிகர்களுக்கு படத்தின் ஓட்டம் சலிப்பை ஏற்படுத்துகிறது திரைக்கதையை இன்னும் வலுவாக்கி இருந்தால் சிறப்பு. படம் முழுக்க ஹாக்கி விளையாட்டை மய்யமாக வைத்திருப்பதால் ஹாக்கி விளையாடும் நடிகர்களிடம் ஒரு உண்மைத்தன்மை வெளிப்படவில்லை என்பது பல ரசிகர்களின் கருத்து.

      
ஆக மொத்தம் இந்த திரைப்படம் இளைஞர்களுக்கு நல்ல நகைச்சுவை விருந்தாக இருக்கும் என்று நினைத்து போனால் ஏமாற்றமே மிஞ்சும். ஆனால் ஒரு முறை நண்பர்களோடு பார்க்கலாம். ஹிப் ஹாப் தமிழா ஆதி இது போன்ற படங்களை தவிர்த்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்தால் அவருக்கும் அது சிறப்பு.

நட்பே துனை - பார்க்கலாம் 

( 2\5 )  
        

Rating :

0 1 2/5
share