Movie Reviews

  • Home/
  • Reviews/
  • நெடுநல்வாடை விமர்சனம் படம் விமர்சனம்

நெடுநல்வாடை விமர்சனம் படம் விமர்சனம்

தமிழ் சினிமாவில் காதலை மிக அழுத்தமாக பதிய வைத்த படங்களின் எண்ணிக்கை நிறைய உண்டு. ஆனால் "நெடுநல்வாடை" காதலினால் குடும்பங்கள் படும் அவஸ்த்தையையும் காதலின் அடித்தளமான தியாகத்தையும் மய்யமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு மன்வாசனையுடன் கிராமத்து வாழ்க்கையை படமாக்கி காட்டியதற்காக இயக்குனர் செல்வக்கண்ணன் அவர்களுக்கு பாராட்டுகள். 
      
     படத்தின் நாயகன் தாய், தந்தை இல்லாத குழந்தையாக  தன்  தாத்தா அரவணைப்பில் வளர்ந்து, படித்து  ஒரு அளவிற்கு தன் பொருளாதார பிரச்சனைகளை தானே சரி செய்து கொள்கிறான். இந்த சூழலில் வளரும் நாயகனுக்கு சிறு வயது முதலே காதலி இருக்கிறாள். தன்னுடைய காதலை எவ்வாறு அடைய முயற்சி செய்கிறான் அதற்கான குடும்ப தடைகள் என்ன?  இறுதியில் காதல் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பது தான் "நெடுநல்வாடை" படத்தின் கதை.
 
      படத்தின் நாயகன் "இளங்கோ" தன்னுடைய நடிப்பு திறமைக்கு கிடைத்த நல்ல வாய்ப்பாக இந்த படத்தை உபயோக படுத்திக்கொண்டார். உருக்கமான காட்சிகளிலும், கோவத்தின் உச்சத்திலும் சினிமாவில் தனக்கு ஒரு இடம் உண்டு என்பதை நிரூபித்திருக்கிறார். படத்தின் கதாநாயகி "அஞ்சலி நாயர்" ஒரு ஒரு காட்சிகளிலும் ரசிகர்களை தன்னுடைய நடிப்பால் கவருகிறார். இந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தும் ஒரு நாயகி என்றே சொல்லலாம். தாத்தா வாக நடித்திருக்கும் "பூ ராம்" அனைவரின் மனதையும் வருடிவிட்டார் ஒரு குடும்பத்தில் மூத்தவர்கள் இருப்பது எவ்வளவு உன்னதம் என்றும் அவர்களை நாம் தொலைத்து விட கூடாது என்பதையும் உணர்த்தும் படைப்பு இது .

       படம் முழுவதும் திருநெல்வேலியை களமாக வைத்து இயங்குகிறது. பெரிய இடைவேளைக்கு பிறகு ஒரு நல்ல தெக்கத்தி படத்தின் சாயல் தெரிகிறது. அதற்கு நம் பாராட்டுக்களை இயக்குனருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் சொல்லியே ஆக வேண்டும். படத்திற்கு மேலும் கூடுதல் பலம் சேர்ப்பது "ஜோஸ் பிராங்கிளின்" இசை சீரான நேர்த்தியான பின்னணி இசை பாடல்களை தந்துள்ளார் மேலும் கவிப்பேரரசு "வைரமுத்து" அவர்களால் பாடல்கள் எழுதப்பட்டுள்ளது. இவை யாவும் படத்தின் சிறப்புகளாய் இருந்தாலும் படத்தின் வேகம் ரசிகர்களை கவரவில்லை இன்னும் கொஞ்சம் காட்சிகளை சுருக்கி இருந்தால் சிறப்பாகும்.
படம் நெல்லை சீமையை சுற்றி நடப்பதால் திருநெல்வேலி வட்டார வழக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது ஆனால் முக்கியமான கட்டங்களில் கதாநாயகன் இயல்பு தமிழில் பேசுவதும் மற்றவர்கள் வட்டார வழக்கில் பேசுவதும் முகம் சுழிக்க வைக்கிறது. சில கதாபாத்திரங்களை படத்தின் இறுதியில் காட்டாமல் படத்தை முடித்தது  ரசிகர்களால் ஜீரணிக்க முடியாத ஒன்று.

    சமூகத்தில் காதலுக்கும் குடும்பங்களுக்குமான சரியான அர்த்தங்களை  புரிந்து நடப்பவர்களுக்கு படம் மிகவும் பிடிக்கும்.
 
 நெடுநல்வாடை - இலக்கிய காதல் 

 (2.5 \ 5)

Rating :

0 1 2 2.5/5
share