நெஞ்சில் துணிவிருந்தால் படம் விமர்சனம்


மாவீரன் என்ற சமூக ரீதியான படைப்பை கொடுத்த இயக்குனர் சுசீந்திரன் அடுத்ததாக சந்தீப் மற்றும் விக்ராந்த் ஹீரோவாக நடிக்க ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தை இயக்கியிருக்கிறார். தனது வழக்கமான பாணியில் தான் கதையை நகர்த்தியிருக்கிறாரா இல்லையா என்பதை விமர்சனம் மூலம் காணலாம்.

நாயகன் சந்தீப்பின் அப்பாவான சிவா, ஒரு சிறிய ஆபரேஷனுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். ஆனால், தவறான ஆப்ரேஷன் காரணமாக அவர் இறந்துபோகிறார். அந்த மருத்துவமனையின் போலி டாக்டர்களால்தான் சிவா இறந்தார் என்று நிரூபித்து அவருக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கிறார்கள்.

பின்னர், சந்தீப் தன்னுடைய நெருங்கிய நண்பர்களான விக்ராந்த், சூரி, அப்புக்குட்டி ஆகியோருடன் ஒன்றாக சேர்ந்து கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். தன் தங்கையை டாக்டருக்கு படிக்க வைக்கிறார் சந்தீப். விக்ராந்த், சந்தீப்பின் தங்கையை சந்தீப்புக்கு தெரியாமல் காதலித்து

இந்நிலையில், பணத்திற்காக தொடர்ந்து கொலை செய்து வரும் தாதாவான ஹரிஷ் உத்தமன், விக்ராந்தையும், சந்தீப்பின் தங்கையையும் கொலை செய்ய திட்டமிடுகிறார். 

எதற்காக அவர்கள் இருவரையும் ஹரீஷ் கொலை செய்ய திட்டமிடுகிறார்...??? அவரிடம் இருந்து இருவர்களும் தப்பித்தார்களா இல்லையா..?? என்பதே படத்தின் மீதிக் கதை. 

படத்தில் நாயகனாக சந்தீப் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நட்பு, காதல், சண்டை, என நடிப்பில் பளிச்சிடுகிறார். நட்பை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தி இருக்கிறார். தமிழுக்கு கிடைத்த சிறப்பான நடிகர் என்றே சொல்லலாம்.

சந்தீப்பின் நண்பனாக வரும் விக்ராந்தும் மிக தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதலா, நட்பா என தவிக்கும் தவிப்பில் எதார்த்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

படத்தில் நாயகியாக மெஹ்ரின் பாடல்களுக்கு மட்டுமே வந்து செல்கிறார். வில்லனாக வரும் ஹரீஷ் உத்தமனின் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். சூரியின் காமெடி அதிகமாக பொறுமையை சோதிக்கிறது.

சுசீந்திரனின் திரைக்கதைகள் எப்போதும் ஒரே சீராக பயணிக்கும். அந்த வகையில் சமூக அக்கறையுடன் கூடிய கதைக்களத்தை இப்படத்தில் அமைத்திருக்கிறார். ஆனால், தவறான மருத்துவ சிகிச்சையில் ஆரம்பித்து, அடுத்து கந்துவட்டி, கடைசியில் மெடிக்கல் சீட்டு என திரைக்கதை தாவியிருக்கிறது. 

இந்த தாவல் ஏற்பட்டதால்தான் என்னவோ எந்த ஒரு காட்சியும் மனதில் நிலைக்காமல் சென்றுவிட்டது. சொல்ல வந்த கருத்தையும் எதையும் சரியாக கூற முடியாமல் காட்சிகளில் இருந்து வெளியே எகிற வந்த ஒரு ஃபீல்.

இமான் இசையில் ‘ரெயில் ஆராரோ’ பாடலை தவிற மற்ற பாடல்கள் மனதில் ஒட்டவில்லை. பின்னணி இசையில் கூடுதலாக கவனம் செலுத்தி இருக்கலாம். லட்சுமணின் ஒளிப்பதிவு ரசிக்க வைத்திருக்கிறது.

 ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ - இன்னும் கொஞ்சம் துணிந்திருக்கலாம்...

Rating :

0 1 2 2.8/5
share