Movie Reviews

  • Home/
  • Reviews/
  • ஒரு நாள் கூத்து படம் விமர்சனம்

ஒரு நாள் கூத்து படம் விமர்சனம்இறைவியை தொடர்ந்து பெண்களை தூக்கி பிடிக்கும் ஒரு கதையாக இன்று உலகம் முழுவதும் வெளிவருகிறது “ஒரு நாள் கூத்து”. திருமணம் ஆகாத பெண்களின் நிலைமை என்னவென எடுத்து கூறியிருக்கிறார் அறிமுக இயக்குனர் நெல்சன் .

அட்டகத்தி தினேஷ், மியா, ரித்விகா, நிவேதா, கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் விமர்சனத்தை பார்த்து விடலாம்.

அட்டக்த்தி தினேஷ் மற்றும் நிவேதா இருவரும் ஒரு மிகப்பெரிய ஐ டி நிறுவனத்தில் வேலை புரிகின்றனர். தினேஷிற்கு ஒரு சாதாரண குடும்ப வாழ்க்கை நிவேதா வசதியான ஒரு வாழ்க்கை... இருவரும் காதலிக்கின்றனர். திருமணத்தை பற்றி பேசும்போதெல்லாம் தனது நிலையை காரணம் காட்டி பின் வாங்குகிறார் தினேஷ்...

அதே போல் நல்லா படித்து முடித்து விட்டு, தனது தந்தை பேச்சுக்கு மறு பேச்சு பேசாத மியா ஜார்ஜ், திருமணம் ஆகிவிடும்  என ஒரு வகையான ஏக்கத்திலே இவரது வயதும், வாழ்க்கையும் நகர்கிறது.

இன்னொரு பக்கம் ரித்விகா... இவரும் திருமணம் புரிய மாப்பிள்ளைக்காக ஏங்கும் ஒரு கதாபாத்திரம். இந்த வருடமாவது திருமணம் ஆகிவிடும் என்று இவரும் காலத்தை நகர்த்தி வரும் ஒரு தனியார் வானொலியில் பணிபுரியும் ஆர் ஜே....

இவர்களின் மூவருக்கும் உள்ள ஒரு ஒற்றுமை திருமணம் மட்டுமே... இந்த திருமண பந்தம், அந்த ”ஒரு நாள் கூத்து” க்காக நடக்கும் ஒரு நாடகமே படத்தின் மீதிக் கதை... இவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் திருமண மாற்றங்களே கதை....


அட்டகத்தி தினேஷ் வழக்கம் போல் அசையாத ஒரு நடிப்பு... சிலை போல் வந்து நின்று தன் கண் வழியாக பேசும் வார்த்தைகளை அனைவரும் புரிந்து கொள்வார்கள் என நினைத்து கொள்கிறார் போல..... அப்போ அப்போ சற்று பயணத்தை மாற்றலாம் சகோ... காதல் காட்சிகளில் நன்று...

நிவேதா... அரபு நாட்டு உலக அழகி என்றாலும்... மார்டன் போன்ற காட்சிகள் ஒன்று கூட இல்லை என்றாலும் மிகவும் பொருத்தமான ஒரு கதாபாத்திரம். அழகு கொஞ்சும் தமிழில் பேசி அசத்தியிருக்கிறார். பூர்விகம் மதுரை என்பதாலோ... கண் விழிகள் அசையாமல் பேசும் ஒரு வசனங்கள் செம... தமிழ் சினிமாவில் நல்ல ஒரு இடத்திற்கு வருவீர்கள்...வாழ்த்துக்கள்.

ரித்விகா... ஆர் ஜே வாக வந்து கலகலப்பூட்டவில்லை என்றாலும் அமைதியான ஒரு நடிப்பு அருமை. ”திருமணம் என்பது இவ்ளோ தானா.. இதுக்கு தான் இந்த போராட்டமா” என வரும் ஒரு காட்சியில் ஒரு நாள் படத்தின் கதை அர்த்தம் புரிய வைக்கிறார் ரித்விகா... மியா ஜார்ஜ் கதாபாத்திரம் படத்தின் கதையில் பக்க பலம் ... அமைதியான ஒரு முகம், வசனங்கள் அதிகம் இல்லாத ஒரு ரோல், படத்தின் கதையை இவர் மட்டுமே கொஞ்சம் தாங்கி செல்கிறார் என்று கூறலாம்.

கருணாகரன் காமெடி கதையை விட்டுவிட்டு சீரியஸ் கதாபாத்திரத்திற்கு வந்து விட்டார். ஆனாலும் நல்லாவே நடிக்கிறார். சார்லியின் சிந்திக்க வைக்க கூடிய வசனங்கள் இவர் பேசினால் மட்டுமே ஏற்க கூடியதாக இருக்கும்...

1980களில் இது போன்ற ஒரு கதை எடுத்திருந்தால் நல்லாயிருந்திருக்கும் என்று தோன்றுகிறது. ரித்விகாவை விரும்பும் ரமேஷ் திலக் க்ளைமேக்ஸ் காட்சிகளில் ஏன் அப்படி ஒரு செயல் செய்ய வேண்டும், அந்த கதாபாத்திரத்தை ஏன் வலு பெறாமல் வைக்க வேண்டும், நிவேதா ஏன் காதலனை கைபிடிக்க ஒரு சிறியளவு முயற்சி எடுக்கவில்லை, இது போன்ற லாஜிக் விஷயங்கள் படத்தில் அதிகமாகவே உதைக்கின்றன. முதல் பாதியில் இருந்த ஒரு வேகம் இரண்டாம் பாதியில் இல்லை..

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் ”அடியே அழகே” பாடல் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கிறது. பின்னணி இசை சுமார் ரகம் தான். கோகுலின் ஒளிப்பதிவு நன்று.

ஒரு நாள் கூத்து - மொத்தத்தில் திருமணம் என்பது சாதாரண விஷயம் இல்லை என இயக்குனர் கூற வருகிறார்...

Rating :

0 1 2 2.2/5
share