Movie Reviews

  • Home/
  • Reviews/
  • ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படம் விமர்சனம்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படம் விமர்சனம்



இவருக்கென்று ஒரு படைபலம் உருவாகி வருகிறது, இவர் நடித்தாலே போதும் படம் ஹிட் என்ற ஒரு சூழல் உருவாகி வருகிறது, அவர் வேற யாருமில்லை விஜய் சேதுபதி தான். கருப்பன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு உருவாகியுள்ள படம் தான் இந்த ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. விஜய் சேதுபதி தனது ரசிகர்களை எந்த அளவிற்கு பூர்த்தி செய்துள்ளார் என்பதை படத்தின் விமர்சனம் மூலம் காணலாம். 

கதைக்களம் ஆந்திரம் மாநிலம் எமசிங்கபுரம் என்ற கிராமத்தில் ஆரம்பிக்கிறது. இந்த கிராமம் மலை மீது வாழும் ஒரு திருடர்கள் குல கூட்டம். இவர்களுக்கு நேர்மையாகவும், யாரையும் துன்புறுத்தாமலும் திருடுவது தான் இவர்களது தொழில்.  
எமனையே முதற்கடவுளாக வழிபடுகின்றனர். இந்த கூட்டத்திற்கு விஜய் சேதுபதி தான் இளவரசர். 

தனது நண்பர்கள் இருவருடன் திருடுவதற்காக சென்னை வருகிறார் விஜய் சேதுபதி. அங்கு நாயகி நிகாரிகாவை சந்திக்கிறார். அவரை கடத்திச் சென்று விட வேண்டும் என்று சில திட்டங்கள் போட்டு தோல்வியடைந்தாலும், இறுதியாக அவரை கடத்தி தனது கிராமத்திற்கு சென்று விடுகிறார் விஜய் சேதுபதி.

நிகாரிகாவை 15 நாட்கள் மட்டுமே சந்தித்து பேசி, பழகிய கெளதம் கார்த்திக், அவரை காப்பாற்ற அந்த எமசிங்கபுரத்திற்குள் நுழைகிறார். எதற்காக விஜய் சேதுபதி நிகாரிகாவை கடத்திச் செல்கிறார்..?? காப்பாற்ற சென்ற கெளதம் கார்த்திக்கின் நிலை என்ன..?? என்பதே படத்தின் மீதிக் கதை. 

விஜய் சேதுபதி வழக்கம் போல் தனது கதாபாத்திரத்திற்கு தேவையானதை செம்மையாகவே பூர்த்தி செய்திருக்கிறார். அதே யதார்த்த நடிப்பு, டைமிங் என தனக்கேற்ற வேலையை நிறைவாகவே செய்து முடித்திருக்கிறார். 

கெளதம் கார்த்திக் சினிமா கேரியரில் நிச்சயம் இப்படம் அவருக்கு ஒரு மைல்கல் தான். துருதுருவென தனது கேரக்டருக்கு தேவையானதை கொடுத்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் ஏற்றிருந்தாலும் ஓவர் டோஸ் ஆகியிருக்கும்.

நாயகி நிஹாரிகா தமிழ் சினிமாவில் ஒரு புதுவரவு. இன்னும் சில தமிழ் படங்கள் இவருக்காக காத்திருக்கின்றன. களையான முகம், நகைச்சுவை கலந்த நடிப்பை கொடுத்திருக்கிறார். காயத்ரி வழக்கம் போல தன் கண்களாலும், அசையாமல் பேசும் உதடுகளாலும் கவர்கிறார். 

ரமேஷ் திலக், ராஜ்குமார், டேனி ஆங்காங்கே சில இடங்களில் நமது  பொறுமையை சோதித்தாலும், விஜய் சேதுபதி ஒருவரே நமது தீர்வாக இருக்கிறார். வலு இல்லாத கதைக்களம் படத்திற்கு சற்று சரிவை கொடுத்திருக்கிறது. 

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் ஒருமுறை கேட்கும் ரகம், பின்னனி இசையில் ஏற்றம் இறக்கத்தை காண்பித்து மிரட்டியிருக்கிறார்.

ஸ்ரீ சரவணின் ஒளிப்பதிவில் மலைப்பிரதேச காட்சிகள் அருமை.

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் - குடும்பத்துடன் சென்று பார்க்கக்கூடிய சிறந்த பொழுதுபோக்கு படம்...  

Rating :

0 1 2 3 3.2/5
share