படைவீரன் படம் விமர்சனம்


மாரி படத்தில் வில்லனாக அவதாரம் எடுத்து  படைவீரனி ஹீரோவாக களம் கண்டுள்ள விஜய் யேசுதாஸுக்கு முதலில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளலாம். 

இயக்குனர் தனாவின் இயக்கத்தில் விஜய் யேசுதாஸ் மற்றும் பாரதிராஜா நடிப்பில் உருவாகியிருக்கிறது இந்த படைவீரன்.

கதைப்படி நாயகன் விஜய் யேசுதாஸ் எந்த வேலைக்கு போகாமல் ஊரை சுற்றித்திரிகிறார். 

இவரது ஊருக்கும் பக்கத்து ஊரில் இருப்பவர்களுக்கும் பல வருடங்களாக ஜாதி பிரச்சனை. போலீஸ் வேலைக்கு சென்றால் நேரத்திற்கு சாப்பாடு, சரக்கு, பணம் என அனைத்து கிடைக்கும் என்று பணம் கொடுத்து தனது உறவினரும் முன்னாள் ராணுவ வீரருமான பாரதிராஜா மூலம் போலீஸ் வேலைக்கு சென்று விடுகிறார். இதற்கு நடுவே நாயகி அம்ரிதாவுடன் காதல் காட்சிகளும் அரங்கேறும்.

போலீஸ் பயிற்சி முடித்த தருவாயில் இரு ஊருக்கும் ஜாதி சண்டை நடைபெற்று அது பெரிய கலவரமாக வெடிக்கிறது. கலவரத்தை கட்டுப்படுத்த தன்னுடைய ஊருக்கே போலீஸாக செல்கிறார் விஜய் யேசுதாஸ்.

ஜாதி கலவரத்தை விஜய் யேசுதாஸ் கட்டுப்படுத்தினாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

கதைக்கேற்ற சரியான தேர்வுதான் விஜய் யேசுதாஸ். ஒரு கிராமத்து சண்டியனாக அதகளம் புரிகிறார். வேலை இல்லாமல் ஊரை சுற்றித்திரியும் கேரக்டரிலும் சரி, போலீஸ் உடையில் கம்பீரமாக இருக்கும் காட்சிகளிலும் சரி மிரட்டியெடுத்திருக்கிறார். 

கலகலவென நாயகி அம்ரிதா படம் முழுக்க பல் வரிசை காட்டி ரசிகர்களை கட்டி போடுகிறார்.

பாரதிராஜா பக்கா கிராமத்து கெட்-அப்பில் பொருந்தியிருக்கிறார். செண்டிமெண்ட் காட்சிகளில் மனதை நெருட வைக்கிறார். 

முதல் பாதியில் இருந்து ஒரு வேகத்தை இரண்டாம் பாதியில் கொடுக்க தவறியுள்ளார் இயக்குனர்.

இரு ஊருக்குள்ளும் ஏற்பட்ட ஜாதி கலவரம் என்றாலும் க்ளைமாக்ஸ் காட்சியில் ஏற்பட்ட ஒரு திருப்பத்திற்கே இயக்குனரை வெகுவாக பாராட்டலாம்.

கார்த்திக் ராஜாவின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும் ரகம், பின்னனி இசை கதையோடு பயணம்.

மோகனின் ஒளிப்பதிவு துல்லியம்.

படைவீரன் - ஜாதியை அழிக்க வந்த வீரன்.... 







Rating :

0 1 2 2.8/5
share