Movie Reviews

  • Home/
  • Reviews/
  • பகடி ஆட்டம் படம் விமர்சனம்

பகடி ஆட்டம் படம் விமர்சனம்


’துருவங்கள் 16’ படத்திற்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நிலையான ஒரு இடத்தை பிடித்தார் ரகுமான். இவர் மீண்டும் ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்துள்ள படம் தான் ‘பகடி ஆட்டம்’. படக்குழுவினர்கள் அனைவரும் எந்த மாதிரியான ஆட்டத்தை ஆடியிருக்கிறார்கள் என்று பார்த்து விடலாம்.

பணக்கார வீட்டுப் பையன் ஒருவன் பல பெண்களை ஏமாற்றி அவர்களது வாழ்க்கையில்  ஆட்டம் ஆடி வருகிறான். இந்த சூழ்நிலையில் தான் யாரோ ஒருவர் அந்த பணக்கார வீட்டுப் பையனை கடத்தி விடுகிறார்கள்.

இந்த வழக்கை விசாரிப்பதற்காக ஏசிபி-யாக வருகிறார் ரகுமான். யார் கடத்தியிருந்தார்கள்.?? எதற்காக கடத்தியிருந்தார்கள்..?? அவர்களை ரகுமான் கண்டுபிடித்தாரா... இல்லையா என்பதை மிகவும் நேர்த்தியான ஒரு கதையம்சத்தோடு கூறியிருக்கிறார் இயக்குனர் ராம் கே.சந்திரன்.

இந்த காலத்தில் பெண்கள் இளைஞர்களிடம் எந்த மாதிரியான விஷயத்தில் ஏமாந்து விடுகிறார்கள், பெண்களும் இணையதளங்களையும், செல்போன்களையும் தவறான பாதையில் உபயோகப்படுத்தி வருகிறார்கள் என்பதை மிக அழுத்த திருத்தமாக படத்தில் காட்டியுள்ள இயக்குனருக்கு ஒரு மிகப்பெரிய பாராட்டினை நிச்சயம் கொடுக்கலாம்.

பிள்ளைகளுக்கு அதிகமாக செல்லம் கொடுத்து வளர்க்கும் பெற்றோர்கள், அவர்களை ஃப்ரீடம் என்ற பெயரில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கூட கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர். அது பிள்ளைகளை எது வரை கொண்டு செல்லும் என்பதை காட்டியதிலும் பாராட்டலாம். 

முதல் பாதியில் கதை மிக மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் டாப் கியர் போட்டு வேகத்தை ஏற்றுகிறார் ரகுமான். இவரது ஆட்டங்கள் சற்று விறுவிறுப்பை ஏற்றியது.

கார்த்திக் ராஜாவின் இசையில் இளையராஜாவின் குரலில் ஒலித்த பாடல் 1990களில் ஒலித்த காலத்திற்கு எடுத்துச் சென்றது. பின்னணி இசை கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவில் காட்சிகள் அருமை.

யார் கடத்தியிருப்பார்கள் என்பதை முன்கூட்டியே கணிக்க வைத்திருப்பது படத்திற்கு சற்று பின்னடைவு. 

பகடி ஆட்டம் - நிச்சயம் பார்க்க வேண்டிய ஆட்டம் தான்..


Rating :

0 1 2 2.8/5
share