Movie Reviews

  • Home/
  • Reviews/
  • பள்ளிப்பருவத்திலே படம் விமர்சனம்

பள்ளிப்பருவத்திலே படம் விமர்சனம்



அவ்வப்போது சில படங்களின் கதைகள் உண்மைகளை தாங்கி பிடித்து வரும். அப்படியாக ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள படம் தான் இந்த ’பள்ளிப்பருவத்திலே’.

ஒரு கிராமத்தில் உள்ள பள்ளிக்கு தலைமையாசிரியராக வருகிறார் கே எஸ் ரவிக்குமார். இவருக்கு மகனாக நாயகனாக வரும் கலை(நந்தன் ராம்). அதே பள்ளியில் மாணவனாகவும் இருக்கிறார்.

அதே பள்ளியில் நாயகனுடன் அதே வகுப்பில் படித்து வருகிறார் நாயகி கனி(வெண்பா). நாயகி கனி மீது கலைக்கு காதல். கனியின் தந்தை பொன்வண்ணன் ஊரில் மிகவும் வசதியான செல்வாக்கு மிக்க நபர். கனியின் சித்தப்பாவாக வரும் ஆர் கே சுரேஷ் கொஞ்சம் முரட்டு குணம் படைத்தவர். அடிதடி என்றால் முதல் ஆளாக நிற்பவர்.

கலையின் காதல் பொன்வண்ணனுக்கும் ஆர் கே சுரேஷுக்கும் தெரிய வர,விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறது. அனைவரையும் மீறி கலையின் காதல் ஜெயித்ததா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகன் நந்தன் ராம், அறிமுக நாயகனாக களமிறங்கினாலும்ஒரு அனுபவ நடிப்பை காட்டி மிரட்டியிருக்கிறார். கதையில் கவனம் செலுத்தினால் கோலிவுட்டில் சிவப்பு கம்பளத்தில் வலம் வரலாம். 

நாயகி வெண்பா, காதல் கசக்குதய்யா படத்தில் நடித்த ஒரு இளமை கொஞ்சல், துள்ளல் நடிப்பு கொஞ்சம் மிஸ்ஸிங் தான். இருந்தாலும் அதே பள்ளி சீருடை வெண்பாவை ரசிக்க வைக்கிறது. அதுவும் க்ளைமாக்ஸ் காட்சிகளில் பல நடிகைகளை வியக்க வைத்திருக்கிறார். சூப்பர்.

கே எஸ் ரவிக்குமார், தன் அனுபவ நடிப்பில் நிமிர்ந்து நிற்கிறார். ஒரு பள்ளி தலைமையாசிரியருக்கே உரித்தான ஒரு முதிர்ந்த நடிப்பு. பள்ளியில் படிக்கும் மாணவர்களை கவனித்த நாம் நம் மகனை பார்க்க மறந்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில் நிற்கும் போது கே எஸ் ரவிக்குமாரின் நடிப்பிற்கு ஒரு சல்யூட்.. 

கே எஸ் ரவிக்குமாரின் மனைவியாக வரும் ஊர்வசி, வழக்கம்போல் தனது துறுதுறுவென நடிப்பால் ஓடிக் கொண்டே இருக்கிறார். 

தமிழகத்தில் அரங்கேறும் ஆணவக் கொலையை மைப்படுத்தி நல்ல ஒரு காதல் கதையை எடுக்க முயற்சித்திருக்கும் இயக்குனர் அதை நேரடியாக சொல்ல தவறியிருக்கிறார் என்றே கூறலாம்.

வழக்கமான காதல் கதையை கொண்டு வந்தாலும் க்ளைமாக்ஸ் காட்சிகளில் இயக்குனருக்கு ஒரு பூங்கொத்து வழங்கலாம்.

ஆங்காங்கே அரங்கேறும் சில லாஜிக் மீறல்களை தடுத்திருக்கலாம். விஜய் நாராயணன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். வினோத்தின் ஒளிப்பதிவில் வெண்பாவின் அழகை ரசிக்க வைக்கிறது. 

பள்ளிப்பருவத்திலே - பள்ளி பருவமாக இருந்தாலும் ரசிக்க  வைக்கிறது...


Rating :

0 1 2 2.5/5
share