Movie Reviews

  • Home/
  • Reviews/
  • பேரன்பு படம் விமர்சனம்

பேரன்பு படம் விமர்சனம்

இயக்குனர் ராம் அவர்களின் படைப்பு பாப்பா என்ற பெண்ணை பற்றியும், அவள் சுற்றத்தை பற்றியதுமானது. அது மட்டும் அல்ல அவளது வாழ்க்கை எத்தகைய சிரமம் கொண்டது என்பதும் நாம் தினமும் அவளை போன்ற பிள்ளைகளை பார்த்திருப்போம் ஆனால் நினைவில் வைத்திருக்க மாட்டோம் . அவர்களுக்கு நாம் வைத்த  பெயர் ஊனமுற்றோர். அவர்களை நாம் மாற்றுத்திறனாளிகள் என்றுதான்  அழைக்க வேண்டும் என்று கண்ணத்தில் அறையும் வண்ணம்  கூறியுள்ள படம் பேரன்பு .

 ஒரு மாற்றுத்திறனாளி பாப்பா, சாதாரண தந்தையாக மெகா ஸ்டார் மம்முட்டி ஆகிய  இருவரும் சிறப்பாக நடித்துள்ள படம். மம்முட்டி தன் ஸ்டார் அந்தஸ்தை தள்ளி வைத்து விட்டு மிக எளிதாக இயல்பாக நடித்து  படத்திற்கு மேலும் வலு சேர்த்து இருப்பது  சிறப்பு.

ஒரு மாற்றுத்திறனாளி குழந்தையை வளர்க்க எவ்வளவு சிரமம் என்பதை தத்ரூபமாக கட்சி மூலம் கலங்க வாய்த்த ராமிற்கு பாராட்டுக்கள். அதன் கூடுதல் சிறப்பு. மாற்றுத்திறனாளிகளின் பருவ காலங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் முதற்கொண்டு  அனைத்தையும்  எளிய நடையில் அமைத்தது மனதை கவர்கிறது.  ராம் அவர்களின் திரை வாழ்க்கையில் அவர் பார்த்து பார்த்து செதுக்கிய படம் பேரன்பாகத்தான் இருக்கும் என்று கூறலாம்.

இந்த படத்தில்  நடித்த அனைத்து கதாப்பாத்திரமும் சிறப்பாக நடித்துள்ளனர். சில இடங்களில் தொய்வு போல் தெரிந்தாலும். இது தான் இயற்கை என்ற ஏற்பு நமக்கே வருகிறது. இயக்குனர் இந்த படத்தில் செல்லுவது மாற்றுத்திறனாளிகள் நம்மை போல சாதாரணமாக உள்ளவர்கள். அவர்களுக்கும் நம் அனுதாபமோ இரக்கமோ தேவை இல்லை. அன்புடன் அரவனைத்தாலே போதும் என்பது தான். யுவன் சங்கர் ராஜா இசை படத்தை மேலும் அழகாக்குகிறது. தேனி ஈஸ்வர் படப்பிடிப்பு ஓவியம் போல் வலு சேர்க்கிறது. பேரன்பு போன்ற படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றால் இது போன்ற படங்களை நாம் அதிகம் திரைகளில் எதிர் பார்க்கலாம்.
பேரன்பு = பேரழகு 

Rating :

0 1 2 3 4/5
share