Movie Reviews

  • Home/
  • Reviews/
  • பிச்சைக்காரன் படம் விமர்சனம்

பிச்சைக்காரன் படம் விமர்சனம்

பல கோடிகளுக்கு அதிபதியாக வருகிறார் விஜய் ஆண்டனி. தனது அம்மா மட்டுமே உலகம் என வாழ்ந்து வருகிறார். ஒரு விபத்தின் மூலமாக கோமா நிலைக்குச் சென்று விடுகிறார் விஜய் ஆண்டனியின் தாயார்.

தனது தாயை காப்பாற்ற பல மருத்துவத்திற்கு தாயை கொண்டு செல்கிறார். பல கோடி ரூபாய் செலவு செய்கிறார் விஜய் ஆண்டனி. ஆனால் தாயை கோமாவில் இருந்து மீள செய்ய முடியவில்லை. ஒரு சாமியாரின் அறிவுரையை கேட்டு 48 நாட்கள் தனது அம்மாவிற்காக பிச்சைக்காரனாக வாழ்கிறார் விஜய் ஆண்டனி.

அந்த 48 நாட்களில் அவர் படும் இன்னல்கள், கஷ்டங்கள் என அனைத்தையும் கடந்து தனது வேண்டுதலில் வெற்றி பெற்று விஜய் ஆண்டனியின் தாய் குணமடைந்தாரா?? என்பதை மீதிக் கதையாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சசி.

தனது முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் விஜய் ஆண்டனி. அவருக்கென்ற ஒரு பாணியில் கதையை தேர்ந்தெடுத்து நடிப்பதில் சிறந்தவர் என்பதை இந்த படத்திலும் நிருபித்திருக்கிறார் விஜய் ஆண்டனி.

கோடீஸ்வர வாழ்க்கை வாழ்ந்து பிச்சைக்காரனாக மாறுவதற்கு அவர் எடுக்கும் முயற்சிகளில் பல இடங்களில் தாயின் மேல் அவர் வைத்துள்ள பாசத்தை காட்டி நடிப்பில் கிளாப்ஸ் அள்ளுகிறார்.

தான் ஒரு பிச்சைக்காரனை காதலிப்பது கூட தெரியாமல் காதலிப்பதும், பின் அவன் ஒரு பிச்சைக்காரன் என்று தெரிந்தும் அந்த காதலை விட்டு வெளியே வர முடியால் அவரை அளவுக்கு அதிகமாக காதலிப்பதிலும், செம்மையாக ஸ்கோர் செய்திருக்கிறார் ஹீரோயின் சாட்னா டைட்டஸ்.

பல இடங்களில் உண்மையான நிகழ்வுகளை கூறி காமெடியில் வயிற்றை பதம் பார்க்கின்றனர் பிச்சைக்காரரின் நண்பர்கள். படத்திற்கு மிகப் பெரிய பலமே வசனங்கள் தான். படத்திற்கு தேவையான இடங்களில் மட்டும் தனது பாடலின் மூலம் இசையை வைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. பின்னணி இசையிலும் அசர வைக்கிறார்.

ஒரு உண்மைக்கதையை திரைக்கு கொடுத்து அதில் ஒரு பொருத்தமான நாயகனை நடிக்க வைத்ததற்காக இயக்குனர் சசிக்கு ஒரு வாழ்த்துக்களை சொல்லிக் கொள்ளலாம்.

உலகத்தில் ஏழை, பணக்காரன், பிச்சைக்கரன் என அனைவருக்கும் ஒரே எதிரி பசி மட்டும் தான் என கூறும் வசங்களில் ரசிகர்களின் கிளாப்சை அள்ளுகிறார் விஜய் ஆண்டனி.

எத்தனை பேர் வந்தாலும் அடித்து பொளந்து கட்டும் அதிரடியான சண்டைக்காட்சிகளும் படத்தில் பஞ்சமில்லை.விஜய் ஆண்டனி  தனது முக பாவனைகளில் இன்னும் கொஞ்சம் நடிப்பினை காட்டினால் பிச்சைக்காரன் இன்னும் கொஞ்சம் அதிகாமாகவே ரசிக்க வைத்திருப்பான்.

பிச்சைக்காரன் - செண்டிமெண்ட், காதல், ஆக்‌ஷன், காமெடி அனைத்திலும் செம ஸ்கோர்!!  

Rating :

0 1 2 3/5
share