பொதுவாக எம்மனசு தங்கம் படம் விமர்சனம்



அறிமுக இயக்குனர் தளபதி பிரபு இயக்கத்தில் கிராமத்து வாசனையில் உதயநிதி இறங்கி கலக்கியிருக்கும் படம் தான் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’. 

இரண்டு கிராமத்திற்கும் பொதுவான குலசாமி கோவிலில் தனது மகளுக்கு காது குத்தும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தில் கோபம் அடைகிறார் பார்த்திபன். குலசாமி கோவிலை நிரந்தரமாக தனது சொந்த ஊருக்கு கொண்டு செல்ல பார்த்திபன் திட்டம் தீட்டுகிறார்.

அந்த ஊரில் இருக்கும் அனைவருக்கும் ஆசை வார்த்தைகளை கூறி அந்த ஊரில் உள்ள மக்களை படிப்படியாக காலி செய்ய வைக்கிறார் பார்த்திபன். கிராமத்திற்கு வரக்கூடிய நலத்திட்டங்களையும் தடுத்தி நிறுத்துகிறார். அந்த கிராமத்தில் ஊர் மக்களின் நலனுக்காக போராடும் இளைஞர்கள் உதயநிதியும் சூரியும். இருந்தாலும் ஊர் மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்கிறார் உதயநிதி.  

பார்த்திபன் மகள் நிவேதாவை திருமணம் செய்து கொண்டால் தனது ஊருக்கு அனைத்து வசதிகளையும் அவரே செய்து விடுவார் என்ற எண்ணத்தில் நிவேதாவை காதல் வலையில் விழ வைக்கிறார் உதயநிதி. 

தனது மகளை உதயநிதியிடமிருந்து பிரிப்பதற்கும் அவரை ஊரை விட்டு அனுப்பவதற்கும் பார்த்திபன் வியூகம் வகுக்கிறார். இறுதியில் யாருக்கு ஜெயம் .. ??
 என்பதே படத்தின் மீதிக் கதை. 

முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின் கிராமத்து களத்தில் இறங்கி அடித்திருக்கிறார். 

முறுக்கு மீசை, பாடி லாங்குவேஜ் என தனி ஒரு நடிப்பை இப்படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். உதயநிதியோடு சூரியுடனான பயணத்தையும்  சரியாக பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர். 

வில்லத்தனத்தை இப்படியும் காட்டலாம் என்பதற்கு பார்த்திபன் இப்படத்தில் ஒரு உதாரணம். கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ் அழகான ஒரு ஓவியம் போல் வந்து செல்கிறார். பார்த்திபனின் கெளண்டரையும் முட்டி மோதுகிறார் சூரி. பல காட்சிகளில் சூரியின்  காமெடி கலாட்டாக்கள் கலகலப்பூட்டுகின்றன. 

இயக்குனர் பொன்ராமிடன் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் தான் தளபதி பிரபு. ஆகவே, ரஜினி முருகன் மாதிரியான கலகலப்பூட்டும் காமெடி கலாட்டா படத்தை எடுக்க இயக்குனர் முயற்சித்திருக்கிறார். ஆனால், அதை முழுதான விருந்தாக படைப்பதில் சற்று தடுமாறியிருக்கிறார் என்று தான் கூற வேண்டும். 

இமானின் இசை வழக்கம்போல் ‘எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே’ என்ற ஒரு பீல் தான்... பின்னனி இசை கதையோடு பயணிக்கிறது. சூர்யாவின் ஒளிப்பதிவு கிராமத்து புறத்தையும் கலர்புல்லாக காட்டியிருக்கிறார். 


பொதுவாக எம்மனசு தங்கம் - தங்கத்தை ஒருமுறை ரசிக்கலாம்...

Rating :

0 1 2 2.5/5
share