புரியாத புதிர் படம் விமர்சனம்



விக்ரம் வேதா என்ற மாஸ் பட ஹிட்டிற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்துள்ளது புரியாத புதிர். பல வருடத்திற்கு முன்பு உருவான இப்படம் பல தடைகளை தாண்டி சுமார் தமிழகம் முழுவதும் சுமார் 290 திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது. 

நாயகன் விஜய் சேதுபதி ஒரு கிடார் இசைக்கலைஞர். தன் நண்பனின் இசைக்கருவிகள் தொழிலை கவனித்து வருகிறார். வயலின் வாங்க கடைக்கும் வரும் ஹீரோயின் காயத்ரியின் நட்பு கிடைத்து பின் காதலாக மலர்கிறது.

தன் காதலுக்காக பல இன்னல்களை சந்திக்கிறார் விஜய் சேதுபதி. இன்னல்களை யார் கொடுக்கிறார் என்பது சஸ்பெண்ஸ். சிறிய ப்ளாஷ் பேக் கதைகளும் படத்தில் அரங்கேறுகிறது. 

முடிவு என்ன என்பதே படத்தின் க்ளைமாக்ஸ்.

நகரத்து இளைஞராக விஜய் சேதுபதி தனது நடிப்பை நிலைநிறுத்தியிருக்கிறார். சூழலுக்கேற்ப மாறும் முக பாவனைகள் மாற்றும் திறமை, காதல் வெளிப்படுத்தும் போதும், கோபத்தை வெளிப்படுத்தும் போதும் தனது நடிப்பின் உச்சத்தினை அவர் வெளிப்படுத்தியுள்ளார். 

ஒரு கட்டத்தில் கதையின் ட்விஸ்ட் வேறு ஒரு இடத்திற்கு படத்தினை எடுத்துச் சென்றிருக்கிறது. தேவையான ஒன்றாகவும் அது அமைந்துள்ளது. 

காயத்திரி விஜய் சேதுபதிக்கு பொருத்தமான ஜோடியாக மாறியிருக்கிறார். ஒரு கட்டத்தில் இவரும் கதைக்கு ட்விஸ்டாக மாறியது எதிர்பாராத ஒன்றாக இருக்கும்.

நண்பனாக அர்ஜுனன் வந்தாலும் பெரிதளவில் காமெடிகள் எதுவும் இல்லை. ஹீரோவுக்கு வைக்கப்படும் செக் சமீபத்தில் பரவி வரும் ப்ளூ வேல் கேம் போல தோன்றும்.

ஹீரோ ஹீரோயின் ரொமான்ஸ் தான் படத்தில் தனித்துவம். இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. திடீரென வரும் ரமேஷ் திலக் படத்தின் சஸ்பென்ஸ் காட்சிகள். எதிர்பாராத ஒன்று. 

படத்தின் மூன்று பாடல்களும் ஓகே ரகமாக தான் அமைந்திருக்கிறது.

பிரச்சனை நமக்கு நடக்காத வரைக்கு அந்த வலி நமக்கு தெரிவதில்லை... இது தான் படத்தோட ஒன்லைன்.

அளவுக்கு அதிகமாக நேசிக்கும் ஒருவரை இழக்கும் போது ஏற்படும் வலி - படத்தின் ஹைலைட் முடிவுகள். 

புரியாத புதிர் - ஈர்க்கப்படும் முடிவுகளால் ஈர்க்கப்பட்ட கதை...

Rating :

0 1 2 2.8/5
share