Movie Reviews

  • Home/
  • Reviews/
  • ராஜா ரங்குஸ்கி படம் விமர்சனம்

ராஜா ரங்குஸ்கி படம் விமர்சனம்

இயக்குனர் தரணிதரன் இயக்கத்தில் மெட்ரோ சிரிஷ், சாந்தினி, கல்லூரி வினோத், ஜெயக்குமார், அனுபமா குமார், விஜய் சத்யா, மது, வாசன் நடிப்பில் இன்று வெளியான சஸ்பென்ஸ் த்ரில்லர் ராஜா ரங்குஸ்கி எப்படி என்று பார்ப்போம்.

ஒரு இளம் போலீஸ் ரைட்டருக்கு ஒரு இளம் பெண் ஸ்டோரி ரைட்டர் மீது கண்டவுடன் காதல். நடிகை தன்னை காதலிக்க ஒரு திட்டத்தை தீட்டுகிறார் நடிகர். அந்த திட்டம் வெற்றி பெறுகிறது. அதே திட்டத்தை மர்ம நபர் ஒருவர் தொடர்வதால் நடிகருக்கு சிக்கல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி அந்த நபர் ஒரு கொலையும் செய்கிறார். அந்த கொலையை நடிகர் செய்தது போல் செட்டப் செய்கிறார்.

அதன் விளைவாக உடன் இருக்கும் போலீஸே, போலீஸ் ஹீரோவை துரத்தி பிடித்து, குற்றவாளி ஆக்கி கூண்டில் அடைக்கப் பார்க்கிறது. ஆனால், அவர்களிடமிருந்து தப்பும் நாயகர்., தன் வாய்ஸில் பேசும் நபர் யார்? என்று தெரிந்து கொண்டாரா! அந்த நபர் தான் கொலையாளியா! குற்றவாளியா..! அல்லது நாயகரே குற்றவாளியா..? யார் தான் குற்றவாளி? கொலையாளி..? என்பதற்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடையளிக்கிறது "ராஜா ரங்குஸ்கி" படத்தின் மீதிக் கதை மொத்தமும்.

இயக்குனர் தரணிதரன் ஒரு சூப்பரான த்ரில்லர் படத்தை கொடுத்ததில் நிச்சயம் வெற்றி கண்டுள்ளார் என்றே கூற வேண்டும். படத்தின் மிகப்பெரிய பிளஸ், கொலையாளி யார் என்பதை கடைசி ரீல் வரை யாராலும் ஊகிக்க முடியாமல் திரைக்கதையை நகர்த்தியதுதான்.

அருமையான சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தை கொடுத்த இயக்குநர்க்கு நன்றி.

Rating :

0 1 2 3/5
share