Movie Reviews

  • Home/
  • Reviews/
  • ரஜினி முருகன் படம் விமர்சனம்

ரஜினி முருகன் படம் விமர்சனம்

ஒரு தலையாக கீர்த்தி சுரேஷை காதலித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அவரை கவருவதற்காக டீ கடை, ரியல் எஸ்டேட் என பல தொழில்களை கையில் எடுத்து பல காரணங்களால் தோல்வியில் வந்து நிற்கிறார் சிவகார்த்திகேயன். இதை பார்த்த சிவகார்த்திகேயனின் தாத்தாவான ராஜ்கிரண், தனது பூர்வீக வீட்டை விற்று அதில் வரும் பணத்தை வைத்து சிவகார்த்திகேயனின் வாழ்க்கையை நல்ல முறையில் கொண்டு செல்ல ஆசைப்படுகிறார் ராஜ்கிரண். வீட்டை விற்கும் பொறுப்பையும் சிவகாத்திகேயனிடம் ஒப்படைக்கிறார்.


மக்கள் அனைவரையும் மிரட்டி பணம் வசூலித்து அதில் பிழைப்பு நடத்தி வருகிறார் ஏழரை மூக்கனாக வரும் சமுத்திரக்கனி. தானும் ராஜ்கிரணின் பேரன் தான், தனக்கும் அந்த வீட்டில் பங்கு இருப்பதாக கூறி தனது ஏழரை மூக்கை உள்ளே நுழைக்கிறார் சமுத்திரக்கனி. சமுத்திரக்கனியை எதிர்த்து களத்தில் குதிக்கிறார் சிவகார்த்திகேயன். கடைசியாக சமுத்திரக்கனியை வென்றாரா??? வீட்டை விற்றாரா???? தனது காதலில் வெற்றி பெற்றாரா??? என்பதே மீதி கதையாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் பொன்ராம்.

முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவை கதையாகவே கொடுத்திருக்கிறார் இயக்குனர். குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் ரசிக்கும் படியான முகத்துடன் வாழ்ந்து காட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் கிடைத்த வெற்றியை அப்படியே எடுத்து செல்கிறது இந்த கூட்டணி. சூரியின் காமெடி பக்கங்கள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. சிவகார்த்திகேயனுக்கு சூரிதான் சரியான காமெடி பொருத்தம் என காட்டிருக்கிறார்கள்.

தாத்தாவாக வரும் ராஜ்கிரண் அமைதியாக வாழ்ந்தாலும், அவ்வப்போது காமெடி, சீரியஸ், ஆக்‌ஷன் என நடிப்பில் எலும்பை முறிக்கிறார். கிராமத்து கிளியாக வரும் கீர்த்தி சுரேஷை யாருக்கு தான் பிடிக்காது? அழகு முகத்துடன், எந்தவொரு கவர்ச்சியும் இல்லாமல் சிரித்து அனைவரையும் கவர்கிறார்.

டி.இமானின் இசையில் பாடலகள் சுமார் ரகம். பிண்ணனி இசையில் சிறிது கவனம் செலுத்தியிருக்கலாம். ஏழரை மூக்கனாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி, வில்லனாக ஒரு புது அவதாரமாக தான் காட்சியளிக்கிறார். ஏக பொருத்தமாக பொருந்திருக்கிறார் சமுத்திரக்கனி.

முழுக்க முழுக்க காமெடி.. காமெடி... காமெடி...குடும்பத்துடன் படத்தினை பார்க்க நம்பி போங்க, சந்தோஷமாக வாங்க... நாங்க கேரண்டி!!!

Rating :

0 1 2 3 3.5/5
share