தனது மேல் உயிரையே வைத்திருக்கும் தனது தங்கைக்காவும், குடும்பத்திற்காகவும் மதுரை சென்று ‘கில்லி’ வேலை காண்பித்து லட்சுமி மேனனை கடத்துகிறார்.. ஆச்சர்யமாக எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் லட்சுமியும் உடன் வருகிறார். பின்னர்தான் தெரிகிறது அந்தப்பெண் ஹரீஷ் உத்தமனின் தம்பியை கொன்ற வில்லன் கபீர்சிங்கிற்கு நிச்சயம் செய்யப்பட்டவர் என்பது..
இந்த சின்ன வில்லனை விட்டு பெரிய வில்லனின் கோபத்தை வாங்கிக் கொள்கிறார் விஜய் சேதுபதி. இந்த வில்லனை மீறி எப்படி விஜய் சேதுபதி தப்பித்தார்..??? லக்ஷ்மி மேனனின் நிலை என்ன..?? என்பதை சில பல மிரட்டல் காட்சியுடன் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ரத்தின சிவா.
தனது விளையாட்டுத்தனமான பேச்சால் அனைவரையும் வெகுவாக கவர்கிறார் விஜய் சேதுபதி. அவருடைய நடிப்பை பற்றி இனியும் நாங்கள் சொல்லி தெரியவேண்டியதில்லை. மிக கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் விஜய் சேதுபதி.
லக்ஷ்மிமேனன் தனது குழந்தை தனமான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். பாடல் காட்சிகளில் மிகவும் அழகாக தெரிகிறார். ஹரீஷ் உத்தமன், கபீர் சிங் இருவரும் தனது வில்லத்தனத்தில் மிரட்டி எடுக்கிறார்கள்
இதுவரை சண்டை என்ற பக்கம் போகாமல் இருந்த விஜய் சேதுபதியை வழுக்கட்டாயமாக இழுத்து சண்டை போட வைத்திருக்கிறார்கள் இந்த படக்குழுவினர். கைவைத்தாலே காரை உடைத்துக் கொண்டு போகும் வில்லன்கள் எல்லாம் பல படங்களில் பார்த்தாச்சு பார்த்தாச்சு இயக்குனரே... ஸ்டைலை மாத்துங்கப்பா என்ற எழுந்து நின்று கேள்வி கேட்கும் அளவிற்கு ஓவர் பில்டப் ஆக இருக்கிறது சண்டைக் காட்சிகள்.
இதில் மற்றொன்ற ஒரு நடுத்தர வர்க்க காதலும் பயணிக்கிறது. கிஷோர்-மாலா என்ற இந்த ஜோடி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. கிஷோரை ரொம்ப சாதாரணமாக பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது..
இமானின் இசையில் ‘சும்மா கிர்ரு கிர்ரு’ மற்றும் ‘கண்ணை காட்டு போதும்’ பாடல்கள் ரிப்பீட் ரகம்..தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவில் குறை சொல்ல எதுவும் இல்லை..
மதுரையில், கோவையில் சுமார் 20 முதல் 30 ரவுடிகளை தூக்கிப் போட்டு அடிக்கும் விஜய் சேதுபதி, தனது தங்கையின் திருமணத்தை நிறுத்துவதாக ஹரீஷ் உத்தமன் தனது வீட்டுக்கு ஆட்களை அனுப்பியபோதே அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியிருந்தால்..? என்ன படம் 10 நிமிடத்திலே முடிந்திருக்கும்.....
றெக்க - நல்லா பறந்து கொண்டிருந்த விஜய் சேதுபதி என்ற பறவையோட ‘றெக்க’யை வெட்டிட்டாங்கப்பா....