ரிச்சி படம் விமர்சனம்



பிரேமம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பல இளைய தலைமுறைகளின் பேவரைட் நாயகனாக வலம் வருபவர் நிவின் பாலி. முதல் முறையாக தமிழ் ரசிகர்களை நம்பி நேரடி தமிழ் படமாக நடித்துள்ளார் ‘ரிச்சி’ என்ற படத்தின் மூலமாக.

டீசர், ட்ரெய்லரில் என மாஸ் ஸ்கோர் ரிச்சி, தமிழ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா இல்லையா என்பதை பார்த்து விடலாம். 

தூத்துக்குடியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதைக்களம் தான் இந்த ‘ரிச்சி’. ரிச்சியாக வருகிறார் நிவின் பாலி. இவரின் தந்தையாக வருகிறார் தேவாலய பாதிரியராக வரும் பிரகாஷ் ராஜ்.

சிறு வயதில் ரிச்சியும் ராஜ் பரத்தும் நண்பர்கள். பள்ளி சக மாணவர்களுடன் விளையாடும் போது ஏற்படும் தகராறில் சக மாணவனை குத்தி கொலை செய்து விடுகிறார் ராஜ் பரத். பழி என்னவோ ரிச்சி மேல் விழ, சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்படுகிறார் ரிச்சி. ஊரை விட்டு ஓடி விடுகிறார் ராஜ் பரத். 

ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும், ஐசக் என்ற லோக்கல் தாதாவிடம் வேலைக்கு சேர்கிறார் ரிச்சி. சிறுசிறு மிரட்டல், அடிதடிகளை செய்து அந்த ஊரில் ஒரு ரெளடியாக வலம் வருகிறார் ரிச்சி. 

ஊர்விட்டு ஊர் பிழைக்க வந்த நட்டிக்கு, அவரது நண்பரின் தங்கை மீது காதல். கடைசியில் நட்டிக்கும் ரிச்சிக்கும் வரும் ஒரு க்ளைமாக்ஸ் தொடர்பு தான் இந்த ‘ரிச்சி’.

நிவின் பாலி ஒரு மாஸான ஹீரோவாக களம் இறங்கியுள்ளார். புலியாட்டத்தின் நடனம், லுக் என அனைத்திலும் மாஸ் தான்.. 

ஷ்ரத்தா ஸ்ரீநாத் சமீபத்தில் பரவலாக பேசப்படுபவர். சில படங்களில் நடித்துள்ள அனுபவமான நடிகை. படத்தில் ஒரு பத்திரிக்கையாளர்கவும் அதே சமயம் ரிச்சி யின் சிறுவயது தோழியாகவும் நடித்துள்ளார். ஆனால் திரைக்கதை தடுமாற்றத்தால் இவரின் கதாபாத்திரத்தின் அழுத்தம் மனசில் பதியவில்லை.

திரைக்கதையில் சுத்தமாக பலம் இல்லாததால் படத்தின் மீதான ஒரு ஈர்ப்பு எதுவும் இல்லை. நிவின் பாலியின் ரசிகர்களுக்கு இப்படம் பெருத்த ஏமாற்றம் தான்.

ரிச்சி - எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் போய்விட்டார் நிவின் பாலி..

Rating :

0 1 2 2.5/5
share