Movie Reviews

  • Home/
  • Reviews/
  • சர்வம் தாள மயம் படம் விமர்சனம்

சர்வம் தாள மயம் படம் விமர்சனம்

சர்வம் தாள மயம்:

 

 G.V. பிரகாஷ் நடிப்பில்,ராஜிவ் மேனன் இயக்கத்தில், A.R.ரஹ்மான் இசையில் வெளிவரப்போகும் திரைப்படம் சர்வம் தாள மயம்.

கதையின் சுருக்கம்:    ஒரு மிருதங்கம் செய்யும் தொழிலாளியின் மகன் மிருதங்க வித்துவான் ஆக ஆசை படுகிறான் அவன் ஆசை நிறைவேறியதா அதற்கு அவன் என்ன சிரமங்களை கடந்தான் என்பது தான் சர்வம் தாள மயம்.

விமர்சனம்:        

G.V. பிரகாஷ் நடிப்பில் மிகவும் மெருகேறி இருப்பது இந்த படத்தில் நன்றாக தெரிகிறது.   G.V. பிரகாஷ் சினிமா வாழ்க்கையில் சர்வம் தாள மயம் ஒரு மயில் கல் ஆக இருக்கும். காதல் காட்சிகள் கத நாயகனின் குறும்புத்தனம் யாவும் ரசிக்கும்படி அமைந்துள்ளது. நெடுமுடி வேணு, வினீத் உள்ளிட்டோரின் நடிப்பு கனக்கச்சிதமாக பொருந்தி உள்ளது. குமரவேலின் நடிப்பு நம் அனைவரையும் கரைய வைக்கிறது. தன்னுடைய அமைதியான நடிப்பால் அனைவரின் கவனத்தையும் தன்பால் ஈர்க்கிறார் நெடுமுடி வேணு.

                                18 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் ஆக மீண்டும் களம் இறங்கும் ராஜீவ் மேனனுக்கு இந்த படம் காத்திருப்பை பூர்த்தி செய்வதாகவே உள்ளது. மிக சிறப்பான அம்சம் இந்த படத்தில் ஜாதிய பிரச்சனைகளை பேசியிருக்கிறார் இயக்குனர். யார் மனதும் புண் படாமலும் அதே சமயம் சொல்ல வந்த விஷயத்தை மிக தெளிவாக சொல்லியிருக்கிரார் இயக்குனர். சபாக்களில் நடக்கும் அரசியல்,கீழ் ஜாதி மேல் ஜாதி போன்ற விஷயங்களை கவனமாக கையாண்டமைக்கு பாராட்டுக்கள். இது போன்ற போட்டியை மையமாக வைத்து இயங்கும் படங்கள் சற்று வேகமாகவே இருக்கும் இருப்பினும் காதல் கட்சிகளும், இன்னும் பல விஷயங்களும் முழுமை பெறாமல் படம் முடிந்தது போல் ஒரு உணர்ச்சி ஏற்பட்டாலும் படத்தின் போக்கு அதை மறந்து ரசிக்க வைக்கிறது

ஒளிப்பதிவாளர் ரவி யாதவ் அவர்களின் கைவண்ணம் திரை படத்தை மிக அழகாக காட்டுகிறது. இசை புயல்  A.R.ரஹ்மான் அவர்களின் இசையில் படம் மேலும் பல படிகள் முன்னேறி தெரிகிறது இசை சம்மந்தமான படம் ஆதலால் மிக அருமையான பின்னணி இசையும் அமைந்து படத்திற்கு வலு சேர்கிறது.

சர்வம் தாள மயம் = தாளம் இன்றி ஏது லயம்

Rating :

0 1 2 3/5
share