Movie Reviews

  • Home/
  • Reviews/
  • சத்யா படம் விமர்சனம்

சத்யா படம் விமர்சனம்


சில படங்கள் கைகொடுத்தாலும் பல படங்கள் கைகளை விட்டு தூரமாக தான் போய் விழுகிறது நடிகர் சிபிராஜ்ஜுக்கு. நிச்சயம் ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் சிபிராஜ். 

சைத்தான் படத்தினை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து சிபிராஜ் கைகோர்க்க இந்த ‘சத்யா’ உருவாகியுள்ளது. 

சிபிராஜ் சென்னையில் இருந்து சென்று ஆஸ்திரேலியாவில் வேலை பார்க்கும் ஒரு  சாப்ட்ஃவேர் எம்ப்ளாய். ஒருநாள் சென்னையில் இருந்து சிபிராஜ்ஜுக்கு ஒரு போன் கால் வருகிறது. அதில், பேசியவர் சிபிராஜ்ஜின் முன்னாள் காதலி ரம்யா நம்பீசன் தான். அவசர உதவி உடனே சென்னைக்கு வர முடியுமா என கேட்க, சிபிராஜ்ஜும் உடனே சென்னைக்கு வருகிறார். 

சென்னை வந்ததும் ரம்யாவை பார்க்கும் சிபிராஜ், தனது மகளை யாரோ கடத்தி விட்டார்கள் என்றும் அவளை கண்டுபிடித்து தருமாறும் சிபிராஜ்ஜிடம் கதறுகிறார் ரம்யா. அவருடைய மகளை தேடி அலைகிறார் சிபி. கடைசியாக ரம்யாவின் மகளை கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

பல படங்களுக்கு பிறகு சிபிராஜ் மிக அருமையான ஒரு கதையை தேர்வு செய்து நடித்துள்ளார். கோபம், ஆத்திரம், செண்டிமெண்ட், சந்தேகம், சந்தோசம் என  
அனைத்தும் சேர்ந்த ஒரு கலவையான உணர்வுகளுடன் பயணிக்கும் சிபிராஜ்  ’சத்யா’ கேரக்டராகவே மாறியுள்ளார். இனியும் கதைகளை தேர்வு செய்வதில் இதே போல் கவனம் செலுத்த சிபிக்கு ஒரு வேண்டுகோள்.

ஆனந்தராஜ், சதீஷ் இருவருமே காமெடி கலந்த குணச்சித்திர கதாபாத்திரத்தில் கலக்கியுள்ளனர். ஆனந்தராஜ்ஜிற்கு சீரியஸான வசனங்களுக்கு நடுவே ஆங்காங்கே சில பஞ்ச் கெளண்டர்கள் சிரிக்க வைக்கின்றன.

ரம்யா நம்பீசன் மிகவும் அழகான ஒரு நடிப்பு. தன்னை அனைவரும் புத்தி ஸ்வாதினம் இல்லாதவள் என நினைக்கும் நேரத்தில் அவருடைய நடிப்பு அப்ளாஷ். குழந்தையை இழந்து அவர் தவிக்கும் தவிப்பு - உச்சம்.

வரலக்‌ஷ்மி சரத்குமார் உயர்ந்த போலீஸ் அதிகாரியாக வருகிறார். தனக்கான பாணியில் மிரட்டியெடுக்கிறார்.

கதையின் மிகப்பெரிய பலமே ஆங்காங்கே அரங்கேறும் ட்விஸ்ட்கள் தான். 

சைமன் கிங்கின் இசையில் ‘யவனா’ பாடலும் அதை படமாக்கிய விதமும் அருமை.. பின்னணி இசையிலும் தடதடக்க வைத்திருக்கிறார் மனிதர் அருண்மணி பழனியின் ஒளிப்பதிவு திரைக்கதையின் வேகமான ஓட்டத்திற்கு பலம் சேர்க்கிறது.

தெலுங்கில் இருந்து ரீமேக் செய்யப்பட படம் என்றாலும், அதன் சாயல் துளியும் படியாதவாறு அழகாக படத்தை நகர்த்தி சென்றிருக்கிறார் இயக்குனர்ப் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி..


சத்யா - வெற்றிநடை போட துவங்கியிருக்கிறார் இந்த (சிபி)சத்யா...





Rating :

0 1 2 3/5
share