Movie Reviews

  • Home/
  • Reviews/
  • சவாரி படம் விமர்சனம்

சவாரி படம் விமர்சனம்


சென்னையை தாண்டும் சாலைகளில் செல்லும் வாகனத்தில் லிப்ட் கேட்டு ஒரு சைக்கோ மனிதன் ஏறி அதில் உள்ள மனிதர்களை கொன்று விடுகிறான். இப்படியாக தொடர்ச்சியாக ஆறு கொலைகள் செய்து விடுகிறான் அந்த சீரியல் சைக்கோ கொலைகாரன்...

இந்த சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிப்பதற்காக ஸ்பெஷல் பணியில் வருகிறார் அசிஸ்டண்ட் கமிஷ்னர் பெனிட்டோ.. இவர் ஆந்திர எல்லை பகுதியில் மரம் கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை எண்கவுண்டர் செய்து விட்டு வருகிறார். எண்கவுண்டர் செய்யப்பட்டவர் ஒரு ரவுடி எம் எல் ஏ வின் உதவியாளன்..

இந்நிலையில் பணியில் சேர்ந்த அடுத்த நாளே தனது காதலியுடன் (ஷனம் ஷெட்டி) திருமணம். இதனால் அவசரம் அவசரமாக ஒரு காரில் புறப்பட்டு ஆந்திர எல்லைக்கு அருகில் உள்ள சனம் ஷெட்டியின் சொந்த கிராமத்திற்கு செல்கிறார் பெனிட்டோ. செல்லும் வழியில் கார் பழுதாகி விடுகிறது.

எல் எல் ஏவிற்கு சொந்தமான கார் ஒன்று சென்னையில் சர்வீஸ் செய்யப்பட்டு, எம் எல் ஏ தங்கியிருக்கும் ஆந்திர எல்லையை நோக்கி கார்த்திக் யோகி என்றவர் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. வழியில் பெனிட்டோ லிப்ட் கேட்டு ஏறிக் கொள்கிறார்.

நான்கு மணி நேரத்திற்குள் செல்லவில்லை என்றால் தனது திருமணம் நடைபெறாது என்று பேனிட்டோவும், நான்கு மணி நேரத்திற்குள் காரை டெலிவரி செய்யவில்லை என்றால் எம் எல் ஏ தன்னை கொன்று விடுவான் என்ற பயத்தில் கார்த்திக் யோகியும் ஒரு இக்கட்டான பயணம் செய்கின்றனர்..

மாறுபட்ட சூந்ழிலையில் அந்த சைக்கோ கில்லர் கொலைகாரன் பெனிட்டோ செல்லும் அதே காரில் ஏறி விடுகிறான். அதன் பிறகு அந்த சவாரியில் என்ன நடந்தது என்பதே மீதிக் கதை...

நல்ல ஒரு கதையினையும், அதை திரைக்கதையாக எடுத்த விதத்திலும் இயக்குனர் குகன் சென்னியப்பன் பாராட்டு மழை பெறுகிறார்.. படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் ஒளிப்பதிவு தான்.. அவ்வளவு அட்டகாசமான ஒளிப்பதிவினை நிகழ்த்தியிருக்கிறார் செழியன்.. காட்டுப் பகுதியினை அவ்வளவு பயங்கரமாகவும், அழகாகவும் காட்டியிருக்கிறார்.

போலிஸ் அதிகாரியாக வரும் பெனிட்டோ ஒரு நிஜ போலிஸாகவே காட்சி தருகிறார். அவரின் உடை, பேசும் விதம் என அனைத்தும் ஒரு போலிசுக்கே உரிய திறமையாக காட்டியிருக்கிறார் பெனிட்டோ. கார்த்திக் யோகியின் அப்பாவித்தனமான நடிப்பு ரசிக்க வைக்கிறது.

எம் எல் ஏவாக வரும் அருண் ஒரு மாஸ் எண்ட்ரீயை கொடுக்கிறார், சைக்கோவாக வரும் மதிவாணன் ராஜேந்திரன் என அனைவரும் மிகையில்லாத ஒரு நடிப்பினை கொடுத்திருக்கிறார்கள். விஷால் சந்திரசகரின் இசை படத்திற்கு பலமாகவே அமைந்திருக்கிறது..

அடுத்து யாரை அவன் கொலை செய்வான் என எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இருப்பதும், ஒரு திகில் உணர்ச்சியை கொண்டு வருவதிலும், சீரியஸாக ஒரு காட்சி சென்று கொண்டிருக்கும் போது அந்த இடத்தில் காமெடி என்ற பெயரில் திகிலை கலைப்பது என இயக்குனர் ஒரு சில இடங்களில் கொஞ்சம் சறுக்கிவிட்டார் என்றே கூறலாம்.. 

இவற்றை கொஞ்சம் சரி செய்திருந்தால் சவாரி சரியான பயணமாக இருந்திருக்கும்....

சவாரி - சிறுது தூரம் பயணம் செய்யலாம்...

Rating :

0 1 2 3/5
share