Movie Reviews

  • Home/
  • Reviews/
  • சிங்கம் 3 படம் விமர்சனம்

சிங்கம் 3 படம் விமர்சனம்

சிங்கம் 1, சிங்கம் 2 படத்தின் வெற்றிக்குப் பிறகு சிங்கத்தின் மூன்றாம் பாகமான ‘சி 3’ சூர்யா - ஹரி கூட்டணியில் உருவாகியிருக்கிறது. தொடர்ந்து இரண்டு படங்களையும் ஹிட் அடிக்க வைத்துள்ளனர் இருவரும். இதன் வெற்றி காரணமாகவே அடுத்த பாகத்தையும் உருவாக்கியுள்ளனர். சிங்கத்தின் வெற்றி வேட்டை இந்த பகுதியிலும் தொடர்ந்ததா இல்லையா என்று பார்த்து விடலாம்.

ஆந்திர மாநிலத்தில் போலீஸ் கமிஷ்னராக இருக்கும் ஜெய பிரகாஷ் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதை கண்டுபிடிக்க தமிழ்நாட்டில் இருந்து ஸ்பெஷல் போலீஸ் அதிகாரியாக ஆந்திரா செல்கிறார் சூர்யா. ஆந்திராவிற்கு சென்றதும் அந்த கொலையை யார் செய்தார்கள் எதற்காக செய்தார்கள் என்பதை கண்டுபிடிக்கும் படலத்தில் இறங்குகிறார் சூர்யா.

ஒரு தாதாவை டார்கெட் வைத்து சூர்யா நகர, தாதாவிற்கு பின்னால் மிகப்பெரிய தொழிலதிபர் இருப்பதை அறிகிறார் சூர்யா. ஆஸ்திரேலிய தொழிலதிபரான அவருக்கும் இந்த கொலைக்கும் என்ன சம்பந்தம்.?? அவர் யார்..??? இதை சூர்யா எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை மிகவும் விறுவிறுப்புடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஹரி. 

வந்த இரண்டு பாகத்திலும் துரைசிங்கமாய் சீறிப்பாய்ந்த சூர்யா, இந்த பாகத்திலும் சீறிப் பாய்ந்துள்ளார். கண்கள் விரித்து, ஆக்ரோஷமாக சூர்யா பேசும் வசனங்கள் இரண்டாம் பாகத்திலிருந்து மூன்றாம் பாகத்திற்கு மிக கச்சிதமாகவே ப்ரொமோஷன் ஆகியிருக்கிறார் சூர்யா என்பது தெரிகிறது. கதை முழுவதையும் தனி ஒருவனாக தனது தோளில் சுமந்து செல்கிறார் சூர்யா. 

அனுஷ்காவிற்கு வழக்கம் போல் ஒரு பாடல் மூன்று காட்சி என வந்து செல்கிறார், ’சிங்கம் 2’ல் ஹன்சிகா என்ன செய்தாரோ அதை கொஞ்சம் கவர்ச்சி தூக்கலாக ஸ்ருதிஹாசன் இந்த பகுதியில் தனது கதாபாத்திரத்தை செய்துள்ளார். 

காமெடி கதாபாத்திரத்தில் இருந்து சற்று விலகி குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்த ரோபோ ஷங்கரை பாராட்டலாம். சூரி தோன்றும் காட்சிகள் எரிச்சலடைய வைக்கின்றன. வில்லன்களின் கதாபாத்திரம் இன்னும் சற்று சரியாக தேர்ந்தெடுத்திருக்கலாமோ என்று தோன்றியது. 

ஹரீஸ் ஜெயராஜின் இசையில் இரண்டு பாடல்கள் ரகம், பின்னனி இசை காதை பதம் பார்த்துவிடுகிறது. 

இயக்குனர் ஹரி என்றாலே வேகம், அந்த வேகத்தை சற்று கூடுதலாகவே இதில் வெளிப்படுத்தியுள்ளார். வசனங்களை மிக கச்சிதமாக கையாண்டிருக்கிறார் ஹரி.

படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் என்றால் அது ஒளிப்பதிவு மட்டுமே. ஒளிப்பதிவாளர் ப்ரியனின் கேமரா மிக அருமையாகவே விளையாடியிருக்கிறது.

சற்றும் தொய்வில்லாமல் கதையை வேகமாக நகர்த்தியுள்ளனர்.

சி - 3 : அதிவேகம் சில சமயங்களில் எரிச்சலடைய கூட வைக்கும்...

Rating :

0 1 2 2.8/5
share