ஸ்பைடர் படம் விமர்சனம்



’ஸ்பைடர்’:  முதல் முறையாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நேரடியாக தமிழ் படத்தில் நடித்து வெளிவந்துள்ளது இப்படம். தெலுங்கு பட உலகில் பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்டை உருவாக்குவதும் இவரே, அதை தகர்ப்பதும் இவரே... ஸ்பைடர் மூலம் தமிழ் திரையுலகம் வந்த இந்த பாக்ஸ் ஆபீஸ் மன்னனை கோலிவுட் ஏற்றுக் கொண்டதா என்பதை பார்க்கலாம்.

மகேஷ் பாபு....   மக்களின் போனை ட்ராக் செய்து அவர்களின் குறைகளை கேட்டு, அவர்களுக்கு உதவி செய்யும் ஒரு இண்டலிஜெண்ட் போலீஸ் அதிகாரி.  சில பல அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பே அதை கண்டறிந்து அதை தடுத்து மக்களுக்கு நல்ல காரியங்களை செய்து வருகிறார்  மகேஷ்பாபு.

ஒருநாள் இரவில் ஒரு சிறுமியின் போன் காலை ட்ராக் செய்த போது அந்த சிறுமி தனியாக பயந்து இருக்கிறாள் என்பதை அறிந்த மகேஷ் பாபு, ஒரு பெண் போலீஸை   தனியாக பயந்து இருக்கிறாள் என்பதை மகேஷ்பாபு தெரிந்துகொண்டு ஒரு பெண் போலிஸை அந்த வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றார். அடுத்த நாள் காலையில் அந்த சிறுமியும் , பெண் போலீஸும் மர்மமான முறையில் உடல் துண்டுப்பட்டு இறந்து போயிருக்கிறார்கள்.

அந்த வழக்கை மகேஷ்பாபு விசாரிக்கும் போது மனிதர்களை கொன்று அதில் சந்தோஷம் அடையும் எஸ் ஜே சூர்யாவை கண்டுபிடிக்க , அதன் பிறகு இருவருக்குள்ளும் நடக்கும் ஒரு ஆட்டமே இந்த ‘ஸ்பைடர்’.

மகேஷ் பாபு தமிழுக்கு அழுத்தமான ஒரு எண்ட்ரீ தான்.  நடை முதல் நடனம், ஆக்‌ஷன், நடிப்பு என அனைத்திலும் கைதேர்ந்தவராக மிளிர்கிறார். செம ஸ்டைலிஷ் ஹீரோ தான். நாயகி ரகுல் ப்ரீத் சிங் ஒரு நாயகியாக மட்டுமே வந்து செல்கிறார். பாடல்களுக்கு மட்டும் தேவைபட்டிருக்கிறார். பாடல்களில் அழகும், ஆடையும், நடனமும் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கிறது.

படத்தின் மிகப்பெரிய பலமே ‘எஸ் ஜே சூர்யா’ தான்... இத்தனை நாள் நீ எங்கப்பா இருந்த..?? இவ்வளவு பெரிய நடிப்பு திறமையை மறைச்சு வச்சுட்டியே... என பலமுறை எஸ் ஜே சூர்யாவிடம் கேள்வி கேட்க வைக்கிறார். 

தனது நடிப்பில் படத்தினை தூக்கி நிறுத்துகிறார். வில்லனுக்கேற்ற சரியான தேர்வு தான்.. அதுவும் எஸ் ஜே சூர்யாவிற்கான ப்ளாஷ் பேக் காட்சிகள் படத்திற்கு மேலும் பலம் தான். பரத்தின் கதாபாத்திரமும் ஏற்புடையது தான்.

பெண்களை வைத்து மகேஷ் பாபு தீட்டும் ஒரு திட்டம் திரையரங்குகளில் கைதட்டம் பெறும் காட்சிதான். படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் மிரள வைக்கின்றன. பிரம்மாண்ட காட்சிகளை வைத்து கதையை வேற லெவலுக்கு நகர்த்தியிருக்கிறார் ஏ ஆர் முருகதாஸ். வழக்கம்போல் இறுதியில் வலுவான ஒரு மெசேஜையும் வைக்க மறக்கவில்லை நம்ம இயக்குனர். 

ஹாரிஸ் ஜெயராஜ்ஜின் இசையில் பாடல்கள் வலு பெறவில்லை என்றாலும், பின்னனி இசையில் மிரள வைத்திருக்கிறார். அதுவும் எஸ் ஜே சூர்யாவிற்கான தீம் செம... சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு கலர்புல்லாக இருக்கிறது.

ஸ்பைடர் - வெற்றி நாயகன்...

Rating :

0 1 2 3/5
share