Movie Reviews

  • Home/
  • Reviews/
  • சூப்பர் டீலக்ஸ் படம் விமர்சனம்

சூப்பர் டீலக்ஸ் படம் விமர்சனம்

சூப்பர் டீலக்ஸ் விமர்சனம்:

படத்தின் கரு: செக்ஸ், இதனால் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை எவ்வாறு ஒருவர் வாழ்வில் பயணிக்கிறது, பிரச்சனை உண்டாகிறது என்பதே படத்தின் கருவாக அமைத்திருக்கிறது.

கதைக்களம்: கல்லூரியில் படிக்கும் போது காதலித்த காதலனை, கணவன் 'பஹத் பாசில்'(முகில்) வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வரவழைத்து தவறான உறவில் ஈடுபடுகிறார் சமந்தா(வேம்பு). இருவரும் தனிமையில் இருக்கும் போது, திடீரென நெஞ்சுவலியில் இறந்துவிடுகிறார் சமந்தாவின் காதலன். அந்நேரம், வீட்டிற்கு வரும் பஹத் பாசில், உண்மை தெரிந்து கோபமடைகிறார். பின், தனக்கும் இதில் அவமானம் என்று தோன்ற வேறு வழியின்றி அந்த பிணத்தை மறைக்க சமந்தாவும் பஹத் பாசிலும் போராடுகிறார்கள்.

திருமணமாகி சில நாட்களிலே வீட்டை விட்டு வெளியேறிய 'விஜய் சேதுபதி' 7 வருடங்களுக்கு பின் ஒரு திருநங்கையாக(ஷில்பா) தனது குடும்பம், மனைவி மற்றும் குழந்தையை பார்க்க வருகிறார். 8வயது மகனுடன் காத்திருக்கிறாள் மனைவி காயத்ரி. அவரை பார்த்த அவர் குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்து போய் நிற்கின்றனர். தனது கணவனை பார்த்து சந்தோஷப்படுவதா? இல்லை தனது கணவன் ஒரு திருநங்கை என்று எண்ணி துயரப்படுவதா? என்ற மன நிலையில் காயத்ரி. தனது குடும்பத்தில் யாரும் ஏற்று கொள்ளாதபோது அவர் மகன் மட்டும் அவரை ஏற்றுகொள்கிறான். 

பள்ளி சிறுவர்கள் ஐந்து பேர் ஒரு நாள் பள்ளிக்குச் செல்லாமல் தனது நண்பனின் வீட்டில் ‘ஆபாச’ படம் பார்க்கிறார்கள். அந்த படத்தில் நடித்தது அந்த சிறுவர்களில் ஒருவனின் அம்மா (ரம்யாகிருஷ்ணன்) என தெரியவர கோபத்தில் அவன் டிவியை உடைத்து விட்டு தனது அம்மாவை கொலை செய்ய ஓடுகிறான். ரம்யா கிருஷ்ணனின் கண் முன்னே தவறி விழுகிறான். என்னடா என்று ரம்யாகிருஷ்ணன் பார்க்க கம்பி அவனுடைய வயிற்றில் குத்தி விடுகிறது, பிள்ளையை காப்பாற்ற துடிக்கிறார். ரம்யா கிருஷ்ணனின் கணவனாக மிஷ்கின். ஒரு கிறிஸ்தவ ஜெப ஊழியர். தனக்கு கடவுள் சக்தி இருக்கிறது என்று எண்ணி ஊரில் இருக்கும் நோயாளிகளை காப்பாற்றி வருகிறார்.

அந்த பள்ளி சிறுவர்களில் மூவர் உடைந்த டிவியை வாங்குவதற்காக பல குறுக்க வழிகளில் செல்கின்றனர். அப்போது அவர்கள் அங்கு இருக்கும் ஒரு பெரிய தாதாவிடம் உதவி கேட்கிறார்கள். அவரோ அச்சிறுவர்களுக்கு ஒரு அசைன்மென்ட் டெஸ்ட் வைத்து, அதில் தோற்கும் அவர்களை செருப்பால் அடிக்கிறார். அதில் ஒரு சிறுவன் அடிவாகாமல் வீட்டை சுற்றுகிறான் அப்போது அவர் வீட்டில் இருக்கும் டிவி உடைகிறது. பின் இரண்டு டிவியாக வாங்கும் நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள்.

இப்படி நான்கு கதை களத்தை கொண்டு பயணிக்கும் படம் தான் ‘சூப்பர் டீலக்ஸ்’. இந்த நான்கு கதை களமும் ஒன்றே ஒன்றைத்தான் சம்பந்தப்படுத்துகிறது.

திருநங்கையாக படத்தில் வாழ்த்திருக்கிறார் விஜய் சேதுபதி அவருக்கு ஒரு பெரிய பாராட்டு. ரசிகர்களை ரசிக்க வைத்து பார்க்கவைக்கிறார். மகனை இழந்து தவிக்கும் அவர் நடிக்கும் காட்சிகள் நம்மை கண்கலங்க வைக்கிறது. விஜய் சேதுபதி மகனாக வரும் அந்த சிறுவன் தான் படத்தின் டாப். புன்னகை முகத்துடன் அவர் பேசும் டயலாக் டெலிவரி, துருதுருவென நடிப்பு, அணைத்து ரசிகர்களிடம் கைதட்டல் தான்.    

சமந்தா மற்றும் பஹத் பாசிலின் நடிப்பு மிக சிறப்பாக அமைத்திருக்கிறது. அநேக இடங்களில் பஹத் பாசில் பேசும் அரசியல் மற்றும் சமூக அக்கறை பற்றிய வசனங்களுக்கு திரைஅரங்கில் விசில் சத்தம் தெரிகிறது.

தனது மகனின் உயிரை காப்பாற்றுவதற்காக போராடும் ரம்யா கிருஷ்ணனின் மற்றும் மிஷ்கின் நடிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது. நண்பர்களாக வரும் மூன்று சிறுவர்கள் ரசிகர்களை சிரிக்க வைப்பதோடு அவர்கள் நடிப்பும் சிறப்பாக அமைத்திருக்கிறது.

ஆரண்ய காண்டம் என்ற படத்தை கொடுத்த தியாகராஜான் குமாரராஜா 8 வருடங்களுக்கு பின் இப்படத்தை இயக்கியுள்ளார். பல வருட உழைப்பு வீண் போகவில்லை மிக சிறப்பாக இயக்கிருக்கிறார் தியாகராஜான் குமாரராஜா.

படத்திற்கு திரைக்கதை அமைத்த தியாகராஜன் குமாரராஜா, மிஷ்கின், நலன் குமாரசாமி, நீலன் கே சேகர் ஆகிய நான்கு இயக்குனர்கள்.

யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னனி இசை அங்கு அங்கு இருந்தாலும் படத்திற்கு உயிரோட்டம் கொடுத்திருக்கிறது.
 
படத்தின் காட்சிகளை வித்தியாசமான முறையில் காட்சிபடுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா மற்றும் பி எஸ் வினோத்.

மொத்தத்தில் 'சூப்பர் டீலக்ஸ்' வாழ்வின் ரகசியம்.

Rating :

0 1 2 3 4 4.3/5
share