Movie Reviews

  • Home/
  • Reviews/
  • தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் படம் விமர்சனம்

தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் படம் விமர்சனம்


எங்கேயும் எப்போதும், ராஜா ராணி போன்ற படங்களுக்குப் பிறகு தனக்கென ஒரு இடத்தை பிடிக்க கடுமையான ஒரு போராடும் தருணத்தில் இருக்கிறார் ஜெய். புதுமுகங்கள் பலரது படங்களின் வரவுகள் அவைகளின் வெற்றிகள் என கடுமையான மல்யுத்த களமாக இருக்கும் இந்த தமிழ் சினிமாவில் தேர்வான கதைகளும், நல்ல ஒரு நடிப்பு இருந்தால் மட்டுமே நிலைக்க முடியும் என்பது பலரால் அறியப்பட்ட ஒரு உண்மைதான்.

அந்த வகையில் ஜெய் மற்றும் யாமி கெளதம் இருவரது நடிப்பில் உருவாகி திரைக்கு வந்துள்ளது “தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்”.

தனது கிராமத்தில் எந்த ஒரு வேலையும் கிடைக்காமல் சென்னைக்கு தனது மாமா விடிவி கணேஷ் வீட்டிற்கு வருகிறார் ஜெய். அங்கிருந்து வேலை தேடிக் கொண்டிருக்கிறா. ஜெய்யின் நண்பராக வருகிறார் சந்தானம். சந்தானம் ஒரு தனியார் கொரியர் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

ஒருநாள் கொரியரை ஜெய் எடுத்துச் செல்ல, அப்போது படத்தின் நாயகி யாமி கெளதமை சந்திக்கிறார் காதலில் விழுகிறார். நாயகியை தினமும் பார்க்க வேண்டும் என்பதற்காக தனது நண்பன் சந்தானம் மூலம் அதே தனியார் கொரியர் ஆபிசில் வேலைக்கு சேர்கிறார் ஜெய்.

இந்த காதல் கதை ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க, சென்னையில் பிரபல மருத்துவரான அஸ்டோஸ் ராணா கருவுற்ற பெண்களின் கருமுட்டைகளை வெளிநாட்டிற்கு விற்று பல கோடி அளவில் பிசினஸ் செய்கிறார்.

இந்த மோசடி கும்பலை பிடித்துக் கொடுக்க தம்பி ராமையா ஒரு கொரியரில், மோசடி பற்றிய முழுத் தகவலையும் சேகரித்து சமூக சேவகரான நாசருக்கு அனுப்பி வைக்கிறார். அந்த கொரியர் ஜெய் பணிபுரியும் நிறுவனத்திற்கு வர, ஜெய் அந்த கொரியரை நாசரிடம் கொடுக்க செல்கிறார்.

இந்த தகவல் வில்லனுக்குத் தெரிய வர, அதன் பின் வில்லனுக்கும் ஹீரோவுக்கும் நடக்கும் ஒரு போர்க்களமே இந்த “தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்”.

ஜெய் எப்போதும் போல் தனது துறுதுறு நடிப்பில் கலக்கியிருக்கிறார். மேலும், சந்தானம், விடிவி கணேஷ் இவர்களுடன் சேர்ந்து ஜெய் நடத்தும் கலாட்டா கலகலப்பூட்டுகிறது.

யாமி கெளதம் பார்ப்பதற்கு அழகாக தெரிகிறார். ஆனால், நடிப்பில் இன்னும் சற்று ஜொலித்திருக்கலாம் என்று தோன்றுகிறது. வில்லனின் கதாபாத்திரம் அவ்வளவாக வலு பெறவில்லை.

ஒரு நல்ல கதை என்றாலும் அதை சொல்லும் விதத்தில் சற்று தடுமாறியிருக்கிறார் இயக்குனர்.  தம்பி ராமையாவின் நடிப்பு அருமை. புதுமையான கதையை எடுத்ததற்காக இயக்குனர் பிரேம்சாய்க்கு ஒரு வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்.

கார்த்திக்கின் இசையில் பாடல்கள் ஜொலிக்கவில்லை என்றாலும் பின்னணி இசை சற்று படத்திற்கு பலமே...

தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் - கொரியர் சரியான இடத்திற்கு போய் சேர்ந்திருக்கலாம்...

Rating :

0 1 2 2.5/5
share