Movie Reviews

  • Home/
  • Reviews/
  • தடம் படம் விமர்சனம்

தடம் படம் விமர்சனம்

இயக்குனர் "மகிழ்திருமேனி " இயக்கத்தில் மார்ச் 1 அன்று வெளிவர இருக்கும் திரைப்படம் "தடம்". முதல் முறையாக அருண் "விஜய் இரண்டு" வேடங்களில் நடித்திருக்கிறார். படத்தின் ஒரு வரிக்கதை ஒரே மாதிரி இருக்கும் இரண்டு பேர் அவர்களுக்கு ஏற்படும் சிக்கல் அதனால் வரும் விளைவுகள் இறுதியில் என்ன நடந்தது அது தான் "தடம்". இதற்கு மேல் கதையை பற்றி கூற முடியாது காரணம் படம் முழுவதும் சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் எடுக்க பட்டுள்ளது. பத்திரிக்கை கட்சியின் அடிப்படையில் எழுதப்படும் விமர்சனம் படம் திரைக்கு வர இரண்டு நாட்கள் உள்ளதால் படத்தின் சஸ்பென்ஸ் காட்சிகளை இங்கே விளக்கி சொல்ல இயலாது.

          படத்தின் முதல் பாதி மிக வேகமாகவும் சிறப்பாகவும் உள்ளது காட்சிகளை விளக்கும் விதத்தில் இயக்குனர் பெரிதும் உழைத்திருக்கிறார். இரண்டு வேடங்கள் ஆதலால் இரு வேடங்களையும் பிரித்துக்காட்ட மக்களுக்கு புரிய வைக்க ஒரு கதாப்பாத்திரத்தை பிரைட் லைட் முறையிலும் இன்னொரு கதாபாத்திரத்தை நைட் லைட் முறையில் படமாக்கியுள்ளார். முதல் பாதி முழுவதும் நமக்குள் பல கேள்விகளை விதைக்கிறார் இயக்குனர்.

           இரண்டாம் பாதியில் அணைத்து கேள்விகளுக்குமான விடையை ஒன்றன் பின் ஒன்றாக வெளிப்படுத்தும் இயக்குனரின் திறமையை பாராட்டினாலும் முதல் பாதியை விட இரண்டாம் பாதி கொஞ்சம் மெதுவாக செல்வது பார்வையாளர்களை நெளிய செய்கிறது. வழக்கமான இரட்டைவேட படமாக இருக்கும் என்று நினைத்து போனவர்களை நிச்சயம் படம் எதிர்பார்த்ததை  விட அதிகமாக பூர்த்திசெய்யும்.

          படத்தில் பிபிசி விஜயன், தான்யா ஹோப், வித்யா பிரதீப் ஆகியோர் தங்களது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். சோனியா அகர்வால் தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் ஆனாலும் அவரது காட்சிகள் இன்னும் அதிகமாக இருந்திருக்கலாம் என்று தோன்றியது. படத்தின் பாடல்கள் மனதில் ஒட்டவில்லை அனால் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. ஒளிப்பதிவாளரின் மெனக்கடல் திரையில் பிரதிபலிக்கிறது ஆகவே சக்திசரவணன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.
  
தடம் - தரம் 

(3\5)

Rating :

0 1 2 3/5
share