Movie Reviews

  • Home/
  • Reviews/
  • தங்கமகன் படம் விமர்சனம்

தங்கமகன் படம் விமர்சனம்

வேலையில்லா பட்டதாரியின் வெற்றியை தொடர்ந்து அதே கூட்டணியில் தங்கமகனை தயாரித்திருக்கிறார் தனுஷ்.

படத்தின் விமர்சனத்தை மட்டும் சிறிது காணலாம்..

அரசு வேலையுடன் சிறிய நடுத்தர குடும்பத்துடன் தனது குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் கே.எஸ்.ரவிக்குமார். மனைவியாக ராதிகா சரத்குமார் மகனாக தனுஷ் வர இயல்பான ஒரு வாழ்க்கை நகர்கிறது. தனுஷின் காதல் வாழ்க்கையை நகர்த்த வருகிறார் எமி ஜாக்‌ஷன். எமியை பார்த்த உடன் காதல் தொற்றிக்கொள்ள அவரை பின் தொடர ஆரம்பிக்கிறார் தனுஷ்.

கடைசியாக எமியை காதலிக்க வைக்கிறார். அமைதியாக் சென்ற காதலில் சிறிய புரிதலில் இருவருக்கும் பிரச்சனைகள் ஏற்பட இருவரும் தங்களது காதலை முறித்து கொள்கின்றனர். பின் சமந்தாவை திருமணம் செய்து கொள்கிறார் தனுஷ். அமைதியாக சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையில் திருப்பம் வருகிறது கே.எஸ். ரவிக்குமார் வேலை பார்க்கும் அலுவலகத்தின் உயர் அதிகாரியால்.

அந்த அதிகாரி தனது வீட்டில் வருமான அதிகாரிகளின் சோதனை நடைபெற இருப்பதின் தகவலை தெரிந்து கொண்டு தன்னிடம் உள்ள ஐந்து கோடி ரூபாய் கருப்பு பணத்தினை தனக்கு கீழ் வேலை பார்க்கும் கே எஸ் ரவிக்குமாரிடம் கொடுத்து வைக்கிறார். சில நாட்களுக்கு பின் பணத்தை திரும்ப கேட்கிறார் அதிகாரி. பணத்தை தான் மறதியால் எங்கோ வைத்துவிட்டேன் என கூற அவர் மேல் திருட்டு பட்டம் செலுத்த அதிகாரியின் நெருக்கடி தாழாமல் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்கிறார் தனுஷின் தந்தை கே.எஸ்.ரவிக்குமார்.

தனது தந்தை நல்லவர், அவர் திருடவில்லை என்பதை நிருபிக்கவும் அந்த பணம் எங்கு சென்றது என்பதை கண்டுபிடிக்கவும் அவதாரம் எடுக்கிறார் தனுஷ்…கடைசியாக அவர் பணத்தை கண்டுபிடித்தாரா??? தனது தந்தை நல்லவர் என நிரூபித்தாரா என்பதே படத்தின் மீதி கதை…

தனுஷின் மிகப்பெரிய பலமே எந்த ஒரு கதாப்பாத்திரம் ஏற்று நடித்தாலும் அந்த கதாப்பாத்திரமாகவே மாறிவிடுவார். இதையே இந்த படத்திலும் சிறப்பாக செய்திருக்கிறார். எமிஜாக்‌ஷனுடன் காதலில் புகுந்து விளையாடியிருக்கிறார் தனுஷ். தனுஷின் நண்பனாக வந்த சதீஷ் வரும் இடங்களில் எல்லாம் சிரிப்பலைகளை சிதற விடுகிறார்…

சமந்தாவுடன் அழகான கணவனாக வாழ்ந்து குடும்ப வாழ்க்கையிலும் தான் ஒரு தங்கமகன் தான் என வாழ்ந்து அசத்தியிருக்கிறார்..அழகான தேவதையாக புடவையில் வந்து குடும்பத்திற்கு ஏற்றவராக நடித்து தனது நடிப்பில் அசத்தியிருக்கிறார் சமந்தா.. கே.எஸ். ரவிக்குமாரின் நடிப்பு அற்புதம். ஒரு அப்பாவித்தனமான முகத்தை வைத்து அழகாக நகர்ந்திருக்கிறார். அவருக்கு மனைவியாக வரும் ராதிகா சரத்குமாரின் நடிப்பிற்கு சிறிது கைதட்டலாம்..

தனுஷின் வரிகளில் அனிருத் அமைத்த பாடல்கள் கேட்க தூண்டுகிறது. பிண்ணனி இசையில் இன்னும் அதிகமாகவே கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது.. குமரனின் ஒளிப்பதிவு அருமை. சதீஷின் காமெடி களம் அதிகமாகவே பேசப்படுகிறது.

முதல் பாதியில் காமெடி, காதல் என விறுவிறுப்புடன் நகரும் கதை இரண்டாம் பாதியில் சற்று மெதுவாக நகர்ந்து சிறிது நேரத்தில் முடிகிறது… படத்தின் கதையில் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் அதிகாகவே மின்னியிருக்கும் தங்கமகன்.

”ஆக தங்கமகன் குடும்பங்களின் மத்தியில் கண்டிப்பாக ஜொலிப்பார் என்றே கூறலாம்.”

Rating :

0 1 2 3 3.6/5
share