Movie Reviews

  • Home/
  • Reviews/
  • காஸி படம் விமர்சனம்

காஸி படம் விமர்சனம்


எப்போதுமே போர் காட்சிகள் அதுவும் கடற்படை போர்க் காட்சிகள், கடலுக்குள் அடியில் நடக்கும் போர்க் காட்சிகள் என அனைத்தையும் ஹாலிவுட் படங்களிலேயே நாம் பார்த்திருப்போம். ஆனால், முதல் முறையாக ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடும் அளவிற்கு இந்திய சினிமாவிலிருந்து வெளிவந்திருக்கும் படம் தான் இந்த ’காஸி’.

1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் நடந்த வானளாவிய மற்றும் காற்படை போருக்கு முன் கடற்படை மூலம் ஒரு போர் நடந்து முடிந்துள்ளது. அந்த போரை பற்றிய ஒரு உண்மை சம்பவம் தான் ‘காஸி’.

இந்தியாவின் கடற்படை தளமான விசாகப்பட்டிணத்தை தகர்த்து அந்த தளத்தை கைப்பற்றி அவ்வழியாக ஆயுதங்களை இந்தியாவிற்குள் எளிதாக கடத்தி விடலாம் என்ற எண்ணத்தில் கடல் வழியாக இந்தியா வர முயற்சிக்கின்றனர் பாகிஸ்தான் வீரர்கள்.

அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்ட மிக அதி நவீன நீர்மூழ்கிக்கப்பலான ‘காஸி’ மூலம் விசாகப்பட்டிணத்தை தகர்த்து உள்ளே வர முயற்சிக்கின்றனர் பாகிஸ்தானியர்கள். இந்த செய்தியை உளவுத்துறை மூலம் இந்திய உயர் அதிகாரிகளுக்கு தெரிய வருகிறது. 

இந்திய கடற்கரையோர பாதுகாப்பை உறுதிப்படுத்த கேப்டன் கே கே மேனனுடன்,  ராணா ஆகியோர் இருவரும் கேப்டனாகப் பணியாற்றும் வகையில் எஸ் 21 நீர்மூழ்கிக்கப்பலை அனுப்பி வைக்ககிறது இந்திய கடற்படை.

காஸியை ஒப்பிடும் போது எஸ் 21 மிகவும் பல குறைந்தது தான். இருந்தாலும் கேப்டனின் யுக்தியால் காஸியை எப்படி வீழ்த்தினார்கள் என்பது தான் படத்தின் கதை. 

எதிரியைக் கண்டாலே அழித்து விட வேண்டும் என்ற ஆக்ரோஷமான கோபத்துடனும் ஆவேசமான குணத்துடன் இருப்பவர் கேப்டன் கே கே., கடற்படை தலைமைக்கும் உத்தரவுக்கும் கட்டுப்பட்டு தான் நடக்க வேண்டும் என்ற குணம் படைத்தவர் கூல் கேப்டன் ராணா டக்குபதி.

கேப்டன் கே கே மேனன் ஆவேச குணம் படைத்தவராக இருந்தாலும் அவரது கருத்துகள் ராணாவிற்கு ஒரு கட்டத்தில் பிடித்துப் போக ‘எஸ் 21’ஐ தனது கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக கொண்டு வருகிறார் ராணா.

தினசரி நாளிதழ்களில் வரும் இராணுவ வீரர்கள் பலி என்ற செய்தியை பார்க்கும் போது அதை வெறும் செய்தியாக பார்த்து விட்டு போகும் மனநிலையில் இருப்பவர்கள் இப்படத்தினை பார்த்த  பின்உயிர்தியாகம் செய்யும் வீரர்களுக்கு  தங்களது மன மரியாதையை நிச்சயம் அளிப்பார்கள். 

தரை தட்டிய ‘எஸ் 21’ மீண்டும் எழுந்து வரும் போது நம்மை அறியாமலேயே நமக்குள் ஒரு பொங்கும் மனப்பான்மை. பாகிஸ்தான் வீரர்களின் சூழ்ச்சிகள் அனைத்தையும் தவிடு பொடியாக்குகிறார் ராணா. மிகவும் ஒரு நேர்த்தியான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார் ராணா. 

காஸியை மூழ்கடித்தது தான் 1971 இல் பாகிஸ்தான் நம்மீது போர் தொடுக்கக் காரணமாக அமைந்திருக்கிறது.

பாடல் காட்சிகள் இல்லாமல் ஆபாசக் காட்சிகள் இல்லாமல் ஒரு நேர்த்தியான திரைக்கதையை படைத்திருக்கிறார் இயக்குனர் சாங்கால்ப் ரெட்டி. பின்னணி இசையில் கே கதையோடு பயணித்திருக்கிறார். கிராபிக்ஸ் காட்சிகள் தத்ரூபமாகக் கையாளப்பட்டிருக்கின்றன.

மதியின் ஒளிப்பதிவு நம்மை நீர்மூழ்கி கப்பலுக்குள் பயணிக்க வைக்கும் உணர்வைத் தருகிறது. ஸ்ரீகர் பிரசாத் அருமையாக எடிட்டிங் செய்திருக்கிறார்.  

காஸி: தலை நிமிரும் இந்தியன் சினிமா...


Rating :

0 1 2 3 3.5/5
share