Movie Reviews

  • Home/
  • Reviews/
  • திருமணம் படம் விமர்சனம்

திருமணம் படம் விமர்சனம்

 இயக்குனர் சேரனின் படைப்பில் தமிழ் சினிமா அருமையான படைப்புகளை கொண்டாடி இருக்கிறது. அந்த வரிசையில் திருமணமும் இடம் பெருமா என்றால் இல்லை. காரணம் சினிமா இன்று பல பரிணாம வளர்ச்சிகளை அடைந்துள்ளது கதைக்கு முக்கியத்துவம் கொடுத்த அளவிற்கு படத்தின் உருவாக்கத்தில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். 

 திருமணம் திரைப்படம் முழுக்க முழுக்க குடும்பங்களுக்கான திரைப்படம். திருமணத்தில் உள்ள சிரமங்கள், திருமணத்தினால் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகள் இவை அனைத்தையும் மிக ஆழமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் சேரன். ஒரு திருமணம் என்னும் களத்தை வைத்து இவ்வளவு பெரிய படத்தை உருவாக்கியதற்கு பாராட்டுக்கள். ஆனால் படத்தின் நீளம் ரசிகர்களை நெளிய வைக்கிறது நீளத்தை குறைக்க படத்தை கொஞ்சம் சுவாரஸ்யமாக கத்தரித்து இருக்கலாம். 

இன்றைய விவாகரத்து, கணவன் மனைவி அன்யோன்யம், பிரிவு, குடும்பங்கள் ஏன் முக்கியம் ? , இதற்கான தீர்வுகள் தான் என்ன ? ; ஆகிய அத்தனை விஷயங்களையும் தெளிவாக உள்ளடக்கி சொல்லி இருக்கிறார் இயக்குனர் சேரன். பலருக்கு நம் குடும்பத்தில் நடக்கும் விஷயங்கள் திரையில் ஓடுவது போல் இருப்பதால் இக்கட்டான காட்சிகளில் கூட நகைச்சுவை வெளிப்படுகிறது. படத்தில் சேரன், சுகன்யா, தம்பி ராமையா, MS baskar, உமாபதி ராமையா, காவ்யா சுரேஷ், ஜெயப்பிரகாஷ், மனோபாலா, பால சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் பலமே நடிகர்கள் தங்கள் பங்கை சிறப்பாக வெளிப்படுத்தியது தான்.
 
 ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு படத்திற்கு ஏற்றார் போல் இருந்தாலும் இன்னும் சிறப்பான கோணங்களில் காட்சிப்படுத்தி இருக்கலாம், பொண்ணுவேல் தாமோதரன் படத்தொகுப்பில் சினிமாவுக்கான தொகுப்பினை வழங்கி இருந்தால் சிறப்பு, சித்தார்த் விபின் இசையில்  பாடல்கள் கேட்கும் ரகம் தான். திருமணம் திரைப்படத்தினை படத்தின் சுவாரஸ்யங்களை தாண்டி நாடகத்தின் சாயல் எட்டி பார்ப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும். 

திருமணம் - சில திருத்தங்களுடன் 
(2.5\5)

Rating :

0 1 2 2.5/5
share