Movie Reviews

  • Home/
  • Reviews/
  • தொடரி படம் விமர்சனம்

தொடரி படம் விமர்சனம்


கடந்த வருடம் டிசம்பர் மாதம் தனுஷின் தங்கமகன் வெளியானது. சுமார் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு  தனுஷின் நடிப்பில் உருவாகியுள்ள ‘தொடரி’ இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தங்கமகன் படத்தின் சிறிய இறங்கலுக்குப் பிறகு தனுஷ் நடித்து பிரபு சாலமன் இயக்கத்தில் இப்படம் வெளியாகியுள்ளதால் அதிகப்படியான எதிர்பார்ப்பு நிலவியது.

மைனா, கும்கி, கயல் என இயக்குனரும் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருவதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்று தான் கூற வேண்டும்.  இதன் விமர்சனத்தை தற்போது காணலாம். 

டெல்லியில் இருந்து சென்னை வரும் ரயில் பயணத்தில் தான் படத்தின் மொத்த கதையும் நகர்கிறது. இந்த ரயிலில் கேண்டினில் பணிபுரியும் பாயாக வருகிறார். இதே ரயிலில் ஒரு பிரபல நடிகையின் டச்சப் பெண்ணாக வருகிறார் கீர்த்தி சுரேஷ். மேலும், மத்திய மந்திரி ராதாரவியும் இதில் பயணிக்கிறார். 

கீர்த்தி சுரேஷை பார்த்த தருணத்தில் அவர் மீது காதல் பற்றிக் கொள்கிறது தனுஷிற்கு. எப்படியாவது ஒரு பிரபல பின்னணி பாடகியாகிவிட வேண்டும் என்ற கனவில் இருந்து வருகிறார் கீர்த்தி. கவிஞர் வைரமுத்து எனது நண்பர் தான், நான் உங்களுக்கு வாய்ப்பு வாங்கி தருகிறேன் என கீர்த்தியிடம் தனுஷ் கூற, பின் இருவரும் நெருங்கி பழகுகிறார்கள்.

ஒரு கட்டத்தில் தனுஷ் கூறியது பொய் என கீர்த்தி சுரேஷ் தெரிந்து கொள்ள, தனுஷை திட்டி கோபத்தில் சென்று விடுகிறார். இந்த தருணத்தில் ரயில் எஞ்சின் மாஸ்டருக்கு நெஞ்சுவலி வந்து இறந்துவிட சுமார் 140 கி.மீ. வேகத்தில் பயணிக்கிறது அந்த ரயில். 

அந்த எஞ்சின் பகுதியில் தெரியாமல் மாட்டிக் கொள்கிறார் கீர்த்தி. கீர்த்தி சுரேஷ் தனுஷை ஏற்றுக் கொண்டாரா..??? 140 கி.மீ வேகத்தில் செல்லும் ரயிலில் பயணிக்கும் 720 பயணிகள் நிலை என்ன..?? என்பதை மிகவும் நேர்த்தியான கதையுடனும், படபடப்பு நிறைந்த காட்சிகளுடனும் இயக்கியிருக்கிறார் பிரபு சாலமன்...

தனுஷ் பூச்சியப்பனாகவும் கீர்த்தி சுரேஷ் சரோஜாவாகவும் வாழ்ந்திருக்கிறார்கள். எந்த கதாபாத்திரத்தினை கொடுத்தலும் மிக கச்சிதமாக தன்னை பொருத்திக் கொள்ளும் நடிகர் தனுஷ் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதேபோல் தான் இந்த படத்திலும் தன்னை கேண்டின் பாயாகவே மாற்றியுள்ளார். மிக அருமையான ஒரு நடிப்பினையும், அவ்வப்போது கவுண்டர் காமெடியிலும் பின்னி எடுத்திருக்கிறார். கீர்த்தி சுரேஷுடனான காதல் காட்சியிலும் தனது நடிப்பின் உச்சத்தை காட்டியுள்ளார் தனுஷ்.

மிகவும் இன்னசெண்ட் பெண்ணாக நடித்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் கீர்த்தி. மேக்கப் இல்லா முகம் அலட்டிக் கொள்ளாத ஒரு சிரிப்பு என தனுஷோடு தன்னை இணைத்துக் கொண்டு நடித்துள்ளார் கீர்த்தி. 

ராதாரவிக்கு பாதுகாப்பு கொடுக்கும் கமாண்டோ தமிழனையே எங்களுக்கு பிடிக்காது என்று தனுஷிடம் கூறும் டயலாக் அனைத்தையும் ரிவெஞ்ச் எடுத்து ராதாரவி கமாண்டோவை வாட்டி எடுக்கும் டயலாக் தமிழன் அனைவரையும் கைதட்டும் வைக்கும் இடம்.

முதல் பாதியில் கதை கொஞ்சம் வேகம் குறைவாக சென்றாலும் தம்பி ராமையா, கருணாகரனோடு காமெடியில் இழுத்துக் கொண்டு செல்கிறார் தனுஷ். இரண்டாம் பாதியில் ஒவ்வொரு காட்சியையும் சீட்டின் நுனியில் இருந்து பார்க்கும்படியான காட்சிகளை கையகப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். 

பின்னணி இசை அவருடைய பல படங்களின் கலவை என்றாலும் கதைக்கு கேட்கும்படியாக இசையமைத்திருக்கிறார் இமான். பாடல்கள் இரண்டுமே கேட்கும் ரகம்.

சீரியஸாக கதை நகரும் போது அந்த இடத்தில் காமெடி தேவைதானா ..???

தொடரி - நாமும் ஒருமுறை பயணிக்கலாமே...

Rating :

0 1 2 3/5
share