Movie Reviews

  • Home/
  • Reviews/
  • டூலெட் விமர்சனம் படம் விமர்சனம்

டூலெட் விமர்சனம் படம் விமர்சனம்

 தமிழ் சினிமாவில் ஏராளமான படைப்புகள் வெளிவந்து மக்களின் மனதையும், ஏராளமான விருதுகளையும் அறுவடை செய்துள்ளன. அந்த வகையில் டூலெட் திரைப்படம் மக்களின் மனதில் என்றும் நீங்காத இடத்தை பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. காரணம் எதார்த்த சினிமாவின் வரவு இன்றைய காலத்திற்கு ஏற்றதாக இல்லை என்ற கருத்துகள் வரும் நிலையில் டூலெட் போன்ற திரைப்படத்தை எடுத்து அந்த திரைப்படத்தை 100 திரைப்பட விழாக்களுக்கு அனுப்பிவைத்து அதில் 84 விழாக்களில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு 34 விருதுகளை வென்று நம் தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்துள்ள படம் தான் டூலெட். 
              படத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவனுக்கு வாழ்க்கையில் வரும் துன்பங்கள், அந்த குடும்பத்தில் இருக்கும் மகிழ்ச்சி, அந்த துயரத்திலும் போராடும் மனவலிமை இவை யாவையும் ஒருசேர மக்களுக்கு சொல்லும் படமே டூலெட். படத்தின் நாயகன் சந்தோஷ் ஸ்ரீராம் கதாப்பாத்திரத்திற்கு சிறந்த தேர்வு தனக்கான பங்கை சரிவர நிறைவேற்றியதற்கு பாராட்டுக்கள். கதாநாயகியாக சுசீலா நடித்துள்ளார் அவர் ஒரு எளிமையான குடும்பப்பெண்னின் ஆசை, கோவம், கொஞ்சல், ஏமாற்றம் என தன் திறமையை மக்களுக்கு தன் நடிப்பால் நிரூபித்து காட்டி இருக்கிறார். இவர்களுக்கு மகனாக நடித்துள்ள தருண் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் முழுப்படத்திலும் தனக்கான காட்சிகளை சிறப்பாக கையாண்டு இத்தகைய இறுக்கமான கதைசொல்லும் படத்தில் கதையை குழப்பாமல் தன் நடிப்பு திறனை வெளிப்படுத்தியதற்காக கூடுதல் பாராட்டுக்கள் இனி வரும் காலங்களில் அவர் நிறைய திரைப்படங்கள் நடிக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. 
              படத்தின் கதை நகர்தல்  எந்த தொய்வும் இல்லாமல் இந்த படைப்பை மக்களுக்கானதாகவும்  எளிமையானதாகவும் கொண்டுவந்த இயக்குனருக்கு நம் பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும். படத்தின் கூடுதல் சிறப்பாக இசை வடிவமைப்பாளர் தபஸ் நாயக் அவர்களுக்கு தான் அனைத்து நல்ல வரவேற்புகளும் போய்சேரும் காரணம் படத்தில் வரும் அத்தணை இசையும் மிக துல்லியமானதாக உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையை பிரதிபழிக்கும் படங்களில் இசை வடிவமைப்பு மிக துல்லியமாக இருந்தால்தான் படத்தோடு மக்கள் ஒன்றி பார்க்கமுடியும். படத்தொகுப்பில் ஸ்ரீகர் பிரசாத் கனக்கச்சிதமாக படத்திற்கு தேவையானதை மட்டும் வைத்து படத்தை தூக்கிபிடித்திருக்கிறார். மொத்தத்தில் டூலெட் போன்ற படங்கள் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் இத்தகைய படங்கள் வசூல் ரீதியாகவும் வெற்றிபெற வேண்டும் என்பது அனைவரின் ஆவலாக உள்ளது. (18.02.19 அன்று பிரத்யேக காட்சியை பார்த்த அடிப்படையில் விமர்சிக்கப்பட்டுள்ளது).
டூலெட் - எளிமை  (4.7\5)

Rating :

0 1 2 3 4 4.7/5
share