உள்குத்து படம் விமர்சனம்தனது முதல் படமான திருடன் போலீஸ் படத்திலே சிறந்த இயக்குனர் என்ற முத்திரையை பதித்தவர் கார்த்திக் ராஜு. தனது இரண்டாவது படத்தில் மீண்டும் அட்டக்கத்தி தினேஷை வைத்து 'உள்குத்து' என்ற படத்தினை இயக்கியுள்ளார். 

மீனவ கிராமம் முட்டம்.  அங்கு நாயகன் தினேஷ் தனியாக அமர்ந்திருக்கிறார். அப்போது அங்கு வரும் பாலசரவணனின் நட்பு கிடைக்க அவருடன்  தங்கிக் கொள்கிறார் தினேஷ்
 
அந்த ஊரில் சரத் மிகப்பெரிய ரவுடி. அவரும் அவர் தம்பியாக வரும் திலீப் சுப்ராயனும் அந்த ஊரில் கந்து வட்டி தொழில் செய்து அனைவரையும் துன்புறுத்தி வருகின்றனர். 

இப்படியாக ஒரு நாள் திலீப் சுப்ராயனின் வலது கையாக இருக்கும் ஒருவரை தினேஷ் அடிக்கிறார். இதனால் திலீப் சுப்ராயனின் பகையை சம்பாதிக்கிறர் தினேஷ்.

பிறகு திலீப் சுப்ராயனிடம் சமாதனம் ஆகி அவருடன் நட்பாக பழகுகிறார். பிறகு ஒருநாள் திலீப் சுப்ராயனை குத்தி கொல்கிறார் தினேஷ்... ஏன் என அனைவரும் விழிக்க.. கதை பின்னோக்கி நகர்கிறது... ப்ளாஷ்பேக் முடிந்ததும் க்ளைமாக்ஸ் காட்சிகளோடு கதை முடிகிறது...

படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் என்றால் தேவையில்லாத காட்சிகள் என்று எதுவுமே படத்தில்  இல்லை. படத்தின் ஆரம்பத்திலேயே கதைக்கு செல்வது அருமை. பாடல் காட்சிகள் கூட மிகவும் குறைவான நிமிடங்கள் தான், அதுவும் கதையோடு சேர்ந்து பயணிக்கிறது...

முதல் பாதியில் நல்ல ஒரு விறுவிறுப்பு... ஆங்காங்கே பால சரவணின் டைமிங் காமெடிகள் ரசிக்க வைக்கின்றன. ஒரு சில காட்சிகள் மட்டுமே நந்திதா வந்தாலும் அழகு சிரிப்பில் அனைவரின் மனதையும் கொள்ளை கொள்ள வைக்கிறார்.

அமைதியாக தோற்றமளிக்கும் தினேஷ் பலம் கொண்டு எதிரிகளை துவம்சம் செய்வது ரசிக்க வைத்தாலும், முகத்தில் எந்த வித ரியாக்‌ஷனும் இல்லாதது கதையை கொஞ்சம் தொய்வடைய வைத்திருக்கிறது.

படத்தின் இரண்டாம் பாதியில் ஆரம்பத்தில் கொஞ்சம் கதை இழுத்துக் கொண்டு சென்றாலும், அதன்பின் சூடு பிடித்து நடைபோடுகிறது. 

வில்லனாக வரும் சரத், திலீப் சுப்ராயன் வில்லத்தனத்தை அமைதியாக இருந்து மிரட்டலாக கொடுத்திருக்கிறார்கள். ஸ்ரீமன், ஜான் விஜய் கதாபாத்திரத்திற்கு பொருத்தம்.

ஜஸ்டின் பிரபாகரனின் பின்னனி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். 

வர்மாவின் கேமரா, கடற்கரை பகுதிகளையும், அதை ஒட்டி உள்ள பகுதிகளை மிக அழகாக காட்டிருக்கிறது. 

உள்குத்து - ஆக்‌ஷன் விருந்து.. 

  

Rating :

0 1 2 3/5
share