Movie Reviews

  • Home/
  • Reviews/
  • வீர சீவாஜி படம் விமர்சனம்

வீர சீவாஜி படம் விமர்சனம்


விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த இது என்ன மாயம், வாகா ஆகிய படங்கள் அவருக்கு சிறிது சறுக்கலை கொடுத்ததால் ‘வீர சிவாஜி’யில் வீரத்தை காட்ட வேண்டிய சூழ்நிலையில் உள்ளார் அவர். தகராறு பட இயக்குநர் கணேஷ் விநாயக் இந்த படத்தினை இயக்கியுள்ளார். 

கதைப்படி விக்ரம் பிரபு கால் டாக்சி வைத்து அதில் பிழைப்பு நடத்தி வருகிறார். அனாதையான இவருக்கு கூட பிறந்த அக்கா போன்று வினோதினி இருக்கிறார். வினோதினியின் குழந்தைக்கு மூளையில் ஒரு கட்டி வர, ஆபரேஷனுக்கு 25 லட்சம் தேவைப்படுகிறது. 

இதனால் தனது டாக்சியை விற்று 5 லட்சம் தயார் செய்கிறார் விக்ரம் பிரபு. இவருக்கு யோகி பாபு மற்றும் ரோபோ ஷங்கர் மூலமாக ஜான் விஜய் அறிமுகமாகிறார். ஐந்து லட்சம் கொடுத்தால் 50 லட்சம் தருவதாக ஜான் விஜய் கூற அதை நம்பி தன்னிடம் இருந்த ஐந்து லட்சத்தை ஜான் விஜய்யிடம் கொடுத்து விடுகிறார் விக்ரம் பிரபு.

அந்த ஐந்து லட்சத்தை சுருட்டிக் கொண்டு ஓட்டம் பிடித்து விடுகிறார் ஜான் விஜய். அதன் பிறகு தான் தெரிகிறது ஜான் விஜய் மோசடி கும்பலை சார்ந்தவர் என்று. விக்ரம் பிரபுவை போன்று பல பேரை ஏமாற்றி பல கோடி வரை மோசடி செய்துள்ளார் என்று.

அதன் பிறகு விக்ரம் பிரபு அந்த கும்பலை கண்டுபிடித்தாரா..??? குழந்தையின் ஆபரேஷன் நடந்ததா என்பதே மீதிக் கதை....

வழக்கம் போல் விக்ரம் பிரபு ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டுகிறார். எண்ட்ரோ காட்சிகளில் வரும் ஆக்‌ஷனில் மிரள வைக்கிறார். ரொமன்ஸ் காட்சிகளில் சற்று தடுமாறியிருக்கிறார். படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சி வைத்தால் மட்டுமே இவருக்கு செட் ஆகும் போல...

குழந்தை ஷாம்லி வளர்ந்து கதாநாயகி ஷாம்லியாக வளர்ந்து நிற்கிறார். கதாநாயகனுக்கு ஜோடியாக வருகிறார். அங்கு அங்கு சில சில காதல் காட்சிகள், பாடல்களில் தோன்றி மறைந்து விடுகிறார் ஷாம்லி. இன்னும் சிறிது பயிற்சி வேண்டும் போல ஷாம்லிக்கு. 

படத்தின் சிறிது பலம் என்றால் ரோபோ ஷங்கரும், யோகி பாபுவும் தான். ரமேஷ், சுரேஷ் என்ற கதாபாத்திரத்தில் இவர்கள் வரும் காட்சிகள் அனைத்தும் சிரிக்க வைக்கின்றன. அதிலும் யோகி பாபு திரையில் தோன்றியதும் சிரிப்பலை தான்.

வில்லனுக்கான கதாபாத்திரம் வலுஇல்லாமல் இருப்பது படத்திற்கு சரிவு தான், கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டாமல் நடித்து காட்டிருப்பது அப்படியே தெரிகிறது. இமானின் இசையில் சொப்பன சுந்தரி பாடலை தவிர வேறு எந்த பாடலும் மனதில் நிற்கவில்லை. பின்னனி இசை காதை பதம் பார்க்கின்றன. 

ஒரு சில சண்டை காட்சிகள் மிரள வைக்கின்றன. சுகுமார் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகளில் கேமரா நன்றாகவே விளையாடியிருக்கிறது. 

வீர சிவாஜி - வீரத்திற்கான வேலை இல்லை...

Rating :

0 1 2 2.5/5
share