Movie Reviews

  • Home/
  • Reviews/
  • வேலைக்காரன் படம் விமர்சனம்

வேலைக்காரன் படம் விமர்சனம்

தனி ஒருவன் என்ற பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘வேலைக்காரன்’. சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க நயன்தாரா நாயகியாக நடிக்க உருவாகியுள்ளது.

சமூகத்திற்கு தேவையான பல கருத்துக்களை தாங்கி இந்த ‘வேலைக்காரன்’ வந்துள்ளான் என பட பூஜையில் இருந்து படக்குழுவினர் கூறி வந்தனர். அது எவ்வகையான கருத்து என்பதை பார்த்து விடலாம்.  

சென்னையில் உள்ள ஒரு குப்பத்தில் வசிப்பவர் சிவகார்த்திகேயன். அந்த பகுதியை  பிரகாஷ்ராஜ் தன் கன்ட்ரோலில் வைத்திருக்கிறார். அப்பகுதி மக்களை தனக்கு சாதமாக பல விதங்களில் பயன்படுத்திக் கொள்கிறார்.

இதனால் கடுப்பாகும் சிவகார்த்திகேயன் ஒரு கம்பெனிக்கு வேலைக்கு செல்கிறார்.

அங்கு அவருக்கு பஹத்பாசில் உதவுகிறார். நம் முன்னேற்றத்திற்கு HardWork தேவையில்லை, ஸ்மார்ட் Work தான் முக்கியம் என சிவகார்த்திகேயனுக்கு புரிய வைக்கிறார்.

அந்த வேலை சூழ்நிலையில் நம்மால் இந்த சமுதாயம் எத்தனை பெரிய பிரச்சனைகளை சந்திக்கிறது என்பதை உணர்கிறார்.

அதன்பின் சிவா எடுக்கும் முடிவு நம்மை சார்ந்த சமூகத்திற்கான பாடமாக அமைகிறது.

அவர் எப்படி சிறந்த வேலைக்காரன் ஆனார்? என்பதை அதிரடியாக சொல்லியிருக்கிறார் டைரக்டர்.

உணவு துறையில் நடக்கும் ஊழல்தான் படத்தின் ஒன்லைன். நாம் தினம் வாங்கும் ஒவ்வொரு உணவு பொருட்களை எப்படி மார்கெட் செய்கிறார்கள்? அதை நாம் எப்படி நம்பி ஏமாறுகிறோம் என்பதை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார்கள்.

எப்போதுமே காமெடி கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட சமூகத்திற்கு அவ்வப்போது ஒரு சமூக கருத்துக்களையும் கூறி செல்லலாம் என இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்ததற்கு ஒரு சல்யூட்.

வேலைக்காரனுக்கு சரியான தீனி இந்த சிவா. ஒரு காட்சியில் தன் வீட்டிற்கு பொருளை விற்க வரும் மார்கெட்டிங் ஆளிடம் சிவா பேசும் வசனங்கள் நச். ரொமான்ஸ் பாடலிலும் ஸ்கோர் செய்கிறார்.

அலட்டிக்கொள்ளாமல் தனது வில்லத்தனத்தை மிகவும் அற்புதமாக அசத்தியிருக்கிறார் பஹத் பாசில்.

தன் சூப்பர் மார்க்கெட்டிற்கு வரும் வாடிக்கையாளர்களை கவர எந்த பொருளை எங்கே வைக்க வேண்டும் என சொல்லும் விளக்கம் அருமை.

இவர்களுடன் பிரகாஷ்ராஜ், சார்லி, ஸ்நேகா, ரோகினி, விஜய் வசந்த் ஆகியோரும் நம்மை அதிகம் கவர்கின்றனர்.

நயன்தாரா, சதீஷ், ரோபா சங்கர், ஆர்.ஜே.பாலாஜி என நட்சத்திர பட்டாளங்களை இன்னும் அதிகமாக பயன்படுத்தியிருக்கலாமே என தோன்றுகிறது.

சிவகார்த்திகேயன் - நயன்தாராவிற்கு இடையேயான காதல் காட்சிகள் எடுபடவில்லை. 

அனிருத் இசையில் பாடல்கள் ரகம்.. பின்னனியும் ஓகே ரகம்...

ராம்ஜியின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கலர்புல்

படத்தில் பல வசனங்கள் கைதட்ட வைக்கின்றன. தனி ஒருவன் மோகன் ராஜா இனி வேலைக்காரன் மோகன் ராஜா எனவும் அழைக்கப்படலாம்.

வேலைக்காரன் - சமூக கருத்துகளால் கவர்கிறான்...

Rating :

0 1 2 3/5
share